சனி, 23 ஜனவரி, 2016

இந்தியக் குடியரசைக் கொண்டாடும் அடிமைத் தமிழன்


மண்ணெண்ணைக்கு  மானியம்  இனி வங்கிக் கணக்கிற்காம். ஏற்கனவே எரிவாயு  உருளைக்கான  மானியம்  மூன்று மாதமாக  வரவில்லை  என்று அலைக்கழிந்தது போதாது என்று  இது வேறு. இப்படி  அநியாய விலைக்கு நியாய விலைக் கடையில் வாங்கி அதற்கு மானியம் வந்ததா என்று அலைந்து அசிங்கப்படுவதற்கு வாங்காமலே இருக்கலாம்-இதைத் தான்  மறைமுகமாக செய்கிறது  இந்திய நடுவம்.

ஐதராபாத்தில்  ஒரு மாணவனின் தற்கொலை 14 பேரை  ராஜினாமா செய்யவைத்தது. ஆனால் ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தோழர் ரமேசின் தற்கொலை இந்தியாவின் இமை மயிரைக் கூட அசைக்கவில்லை. அவ்வளவு தான் தமிழன் உயிருக்கான மதிப்பு.

அதற்காக நாங்கள் மானத் தமிழர்கள் அசிங்கப்பட மாட்டோம்;வருத்தப்பட மாட்டோம்; இதோ வந்துவிட்டது இந்தியக் குடியரசு தினம். கோவணத்தைக் கழட்டி அதில்  மூவர்ணச் சாயம் பூசி "ஜெயஹிந்த்" சொல்லி என்றும் நாங்கள் உங்கள்  அடிமைகள்  என்று உறுதி ஏற்போம்!!!

நாம்  அங்ஙனம் மானம்கெட்டு போகவில்லை என்பதை இந்திய வல்லாதிக்கத்திற்கு உணர்த்த..உண்ணாவிரதம் இருக்கவேண்டாம்; தீ குளிக்க வேண்டாம்; நம்மை நாமே  வருதிக்கொண்டது  போதும். வரும் குடியரசு; சுதந்திர தினங்களை  முற்றிலும் புறக்கணிப்போம். உங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் நடைபெறும் கொடி ஏற்றத்திற்கு அனுப்பாதீர்கள்; நீங்களும்  கலந்து கொள்ளாதீர்கள். முற்றலும்  புறக்கணிப்போம் அந்த  நாள்களை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக