சனி, 30 ஜனவரி, 2016

சபரிமலைக்குள் பெண்கள் அனுமதி மறுப்பும் சல்லிக்கட்டும் தடையும்

சபரி மலைக்கும் 10 முதல் 50 வரை உள்ள பெண்களுக்கான அனுமதி மறுப்பை எதிர்த்து 2006ஆம்  ஆண்டில் போடப்பட்ட வழக்கை இப்போது  தான் தூசி தட்டி எடுத்து "இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது ஆயிற்றே?: 1500 ஆண்டுகளாக பெண்கள் செல்லவில்லை என்று நீங்கள் (கோயில் நிர்வாகம்) சொல்லும் வாதத்திற்கு சான்று உண்டா?" உங்கள்  கருத்து என்ன என்று பவ்வியமாக கேள்வி எழுப்பி உள்ளது  உச்ச நீதி மன்றம்.

அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தெரிகிறது அல்லவா உடனே..."அனுமதி மறுப்பு முறையற்றது" என்று தீர்ப்பைக் கூற வேண்டியது தானே. இதுவே தமிழனின் சல்லிக்கட்டு என்றால் யாரையும் கேக்காமல் தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் நீ தீர்ப்பு எழுதுவாய். அதுவும் அவசர அவசரமாகக் கூடி.  தமிழ் நாட்டில் தேர்வு எழுதுபவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்து தேர்வு எழுதவேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டால் அதற்கு அடுத்த நொடியே தடை ஆணை. மற்றவர்களுக்கு நியாயம்..தமிழனுக்கு அநியாயம். நல்ல நியதியடா..!!!

மேனகா காந்தியிடம் கருத்துக் கேட்ட போது "கோயிலுக்குள் அனுமதி மறுப்பு என்பதை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. அதனை சமூகத்தின்  தீர்ப்பிற்கே விட்டுவிடலாம் "....
எப்படி.. எப்படி...ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஏறு தழுவும் எங்கள் கலாசாரத்தை கற்காலச் செயல்..உரிமை மீறல் என்று கூடி கூறி தடை செய்வீர்கள். ஏன் என்றால்..தமிழனின் கோவணத்தை உறுவினால் கூட  கவலைப்படமாட்டான்..என்று நன்கு தெரிந்து வைத்துள்ளீர்கள். ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் சல்லிக்கட்டு வேண்டும் என்று சொல்கிறதே.அதை ஏன் எங்கள் சமூகத்தின் முடிவிற்கு விடவில்லை?

தமிழா...இனியும் நீ உறங்கிக் கிடந்தால் உன் குடியுரிமையை கூட இழந்து சொந்த நாட்டிலேயே பராரியாய்  திரிவாய்..!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக