16.03.2017 முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் சித்தூரைச் சேர்ந்தவர் இறந்து விட்டார். இதனால் வருத்தமுற்ற அவரின் உறவினர்கள் சிகிச்சை அளித்த மருத்துவர்களை தட்டிக் கேட்க, ஆத்திரமுற்ற பயிற்சி மருத்துவர்கள் உடனடியாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதே நாம் முறையாக அனுமதி பெறாமல் போராடினால் நம்மை உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி பெயர்த்து இருப்பார்கள். நடுக்குப்பம் மக்களாக இருந்திருந்தால் வீடு புகுந்து கொளுத்தி போராட்டத்தை முடித்து வைத்து இருப்பார்கள் நமது ஸ்காட்லாந்து காவல் துறை.
ஆனால் போராடியது உயிர் காக்கும் மருத்துவர்கள் அல்லவா? உடனே சுகாதாரத்துறை செயலர் வந்து பேச்சுவார்த்தை. அதற்கும் மருத்தவர்கள் செவி சாய்க்கவில்லை. 3 மணி நேர போராட்டம், இறந்து போன நோயாளியின் உறவினரை கைது செய்த பிறகு தான் முடிவிற்கு வந்தது.
300 நாட்களுக்கு மேல் போராடி கூடங்குள மக்களால் முடியாததை, 30 நாட்களாக போராடியும் நெடுவாசல்,வடகாடு மக்களால் முடியாததை வெறும் மூன்றே மணி நேர போராட்டத்தில் தாங்கள் நினைத்ததை சாதித்து விட்டார்கள் மருத்துவர்கள்.
பணமும் அதிகாரமும் உள்ளவன் போராட்டம் செய்தால் தான் இந்தியாவில் நீதி கிடைக்கும். பஞ்சப்பறாரிகள் நாம் உண்ணா நோன்பு இருந்து செத்தால் கூட ஒரு நாய் திரும்பி பார்க்காது.
வாழ்க இந்திய வல்லரசு!!! ஓங்குக அதன் அறம்!!!
வாழ்க இந்திய வல்லரசு!!! ஓங்குக அதன் அறம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக