திங்கள், 20 மார்ச், 2017

வேண்டாம் காதல்...!!!

வாழ்க்கை நிம்மதியாக நதியின் ஓடம் போல போய்க்கொண்டு இருக்கும்.

திடீர் என்று நீர்வீழ்ச்சி போல..எங்கிருந்தோ வருவாள்..."உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பாள்".கண்டுகொள்ளாமல் இருப்போம். 

"நீ இல்லாமல் உலகமே இல்லை" என்பாள். கொஞ்சம் அசைந்து கொடுப்போம். 

"உன்னை என்னால் மறக்கவே முடியாது" என்பாள். நம்முடன் களித்த சிறு சிறு அனுபவங்களையும் ஆழமாக நினைவூட்டுவாள். நமது அடித்தளம் தகர்ந்து விடும். அவள் பேசுவது எல்லாம் உண்மையாகவே தோன்றும். 

நீங்க இப்படி தான் பேசுவீர்கள்.. நம்பி வந்தால் காதல் பட இறுதிக்காட்சி மாதிரி ங்ங்கே ங்ங்கே னு பைத்தியம் மாதிரி திரிய விட்டுவிடுவீர்கள் என்று சொல்வோம். அதற்கும் பதில் சொல்வாள்..."எல்லாப் பொண்ணுங்களையும் அப்படி நினைக்காதே" என்று.பிற்காலத்தில் அவளும் அந்த பட்டியலில் முதலிடத்தில் தான் இருப்பாள் என்பது நடக்கவே நடக்காது என நாம் நம்பும் வகையில்.

"..இல்லை..நம் காதல் நிறைவேற சாத்தியம் புலப்படவில்லை;பிரிந்து விடலாம்" என்போம்.."உங்களை என்னால் மறக்கவே முடியாது" என்கையில் கல்லும் கரைந்து போகும்.. நாம் எம்மாத்திரம்?

ஒரு அழகான முழு நிலவில்..அவளுக்கு பித்தம் தெளியும். நமக்கு சூனியம் பிடிக்கும். அவள் தெளிவு பெறுவாள்..நாம் கலங்கிய நிலையில். 

குழந்தை குட்டியோடு முக நூலிலும் கட்செவியிலும் அவள் உலா வரும்போது..உலகம் புரிய ஆரம்பிக்கும் நேரத்தில் உன் வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும். 

காதல் செய்ய தைரியம் மட்டும் இருந்தால் போதும். ஆனால் அதில் வெற்றி பெற உன்னையும் அவளையும் சுற்றியுள்ளவர்களை சட்டை செய்யாத ஒரு தன்னலக்காரனாகவும்,எடுத்த முடிவில் முரட்டுப் பிடிவாதம் உள்ளவனாகவும் இருக்க வேண்டும்; அங்ஙனமே அவளும்.

இதெல்லாம் சுட்டுப் போட்டாலும் உனக்கு வராது என்றால், இந்த கசப்பான அனுபவங்கள் வேண்டாம் என்று நினைத்தால்..தயவு செய்து காதல் செய்யாதே...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக