சமவாய்ப்பு என்பது என்ன?
ஒரு சமூகமோ அல்லது ஒரு தனி மனிதனோ ஒரு குறிப்பிட்ட தகுதி பெற்றிருந்தாலும் மற்றவர்களுக்கும் அந்த வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். வாய்ப்புகள் வழங்காமலே அவர்கள் தகுதிகளை நீங்கள் தரம் பார்ப்பீர்கள் என்றால் கண்டிப்பாக நீங்கள் ஒரு சார்பினரே. இது தான் ஏற்றத் தாழ்வின் பிறப்பிடம்
ஒரு நிறுவனத்திலோ இயக்கத்திலோ பாடசாலையிலோ ஒரு பொறுப்பை ஒருவருக்கு அளிக்கிறோம் என்றால் அது அதற்கான திறமை வாய்ந்தவர்களுக்கு அளிக்கப்படவேண்டும். அதன் மூலம் அந்த நிறுவனம் முன்னேறும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அந்த திறமையை கண்டுணர்வது என்பது அவரது முந்தைய வரலாறு, சந்தர்ப்பங்களில் வாய்ப்புகளை பயன்படுத்தியது, தனக்கும் தன்னை சார்ந்த நிறுவனத்தையும் முன்னெடுத்துச் சென்றது இவைகளை ஆராய்ந்து முடிவெடுப்பது.
சரி..இங்கு எந்த இடத்தில சம வாய்ப்பிற்கான முக்கியத்துவம் வருகிறது? பிறருக்கு வாய்ப்புகளே அளிக்காமல் அந்த ஒருவரையே அல்லது அந்த ஒரு சமூகத்தையே தொடர்ந்து தேர்ந்தெடுப்பது என்பது பிறருக்கான வாய்ப்புகளை பறிப்பது ஆகும். அந்த ஒருவரையே தொடர்ந்து தேர்ந்தெடுத்து பிரதிநிதியாக கொண்டு செல்வது என்பது நாமக்கல் கல்வி கோழிப் பண்ணைகளில் நன்றாக படிக்கக் கூடிய, மனப்பாடம் செய்யக்கூடிய இயந்திரங்களை மட்டும் தங்கள் கல்வி நிறுவனங்களில் சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அளித்து தங்கள் நிறுவனத்தின் திறமைகளை உலகறியச் செய்கின்ற ஓடுகின்ற குதிரைகளில் பணம் கட்டுவதற்கு சமம்.
திறமையானவர்களை உருவாக்க இயலாத சோம்பேறிகள், நிர்வாகிகள் தங்கள் பொறுப்புககளை, இலக்குகளை தொடர்ந்து வெற்றி பெரும் அந்த குதிரையின் மீது சுமத்துவது ஒரு வகையில் கையாலாகாத தனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக