திங்கள், 7 பிப்ரவரி, 2011

களவாணி காங்கிரசில் இனி கோமாளிகளுக்கும் பஞ்சமில்லை


S V SEKAR
S.VE.SHEKHAR's latest comedy: congress is a decent party

இனி களவாணி பயலுக காங்கிரசுல கோஷ்டிகளுக்கு மட்டும் இல்லை;
கோமாளிகளுக்கும் பஞ்சம் இருக்காது.

காங்கிரெசுக்கு ஆஸ்தான வசன கர்த்தா கிடைச்சாச்சு.. எலே மக்கா..இப்பவே தேர்தலிலே ஏன் மண்ணை கவ்வுனீங்கன்னு சொல்றதுக்கு ஓர் ஆயிரம் காரணத்தை யோசிச்சு வைங்கப்பு...ஆப்பு ரெடியா கீது....

PLAY PIANO & MARIO GAME ONLINE



 PLAY ONLINE  MARIO GAME

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

ஸ்தம்பித்தது காரைக்கால் மீனவர்கள் போராட்டத்தால்..

சிங்கள நாய்களால் மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை ஆட்சேபித்து 31 சனவரி 2011 முழுமையான கடை அடைப்பு அறிவிக்கப்பட்டது காரைக்கால் மீனவர்களால். பேருந்து உட்பட கனரக வாகனங்கள் எதுவும் ஒரு அங்குலம் கூட நகரமுடியாமல் பந்த் நடந்தது. சிறு பெட்டிக் கடைகள் கூட திறக்கப்படவில்லை. போராட்டம் மாபெரும் வெற்றி அடைந்தது. பரவலாக,முன்னதாக அறிவிக்கப்படாத காரணத்தால் பள்ளிக் குழந்தைகளும், பணிக்குச் செல்பர்களும் சற்று சிரமப்பட்டனர். எவன் செத்தால் எனக்கென்ன என்று இருந்த மக்களிடையே இது நிச்சயம் ஒரு விழிப்புணர்வை கொண்டு வந்திருக்கும் என்றே நம்புகிறோம்.

நாகபட்டிணம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டி?
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இனத்துரோகி  திமுக - சூனியக்காரி சோனியாவின் HUF நிறுவனமான காங்கிரசு கூட்டணி சார்பாக கம்யூனிஸ்ட் கோட்டையான நாகபட்டிணம் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப் படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது. ஒரு வேலை அப்படி இருந்தால் காங்கிரஸ் தனது வைப்புத் தொகையை இழப்பது உறுதி. 

அப்புறம் என்ன ம....னாவுக்கு நீ மந்திரி?
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் கடல் எல்லைக்குள் நுழைகின்ற மீனவர்களை அந்த நாட்டு அரசாங்கங்கள் கொல்வது இல்லை..ஆனால் சிங்கள அரசாங்கம் ஏன் இப்படி காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்கிறது என்று S.M.கிருஷ்ணாவை நிருபர்கள் கேள்வி கேட்ட போது,"அதை தான் நாங்களும் கேட்கிறோம்" என்று மூன்றாந்தர குடிமகன் போல பதில் அளித்துள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சரான உனக்கே இந்த நிலைமை என்றால் என்ன மானாவுக்கு நீ மந்திரியாக குப்பை கொட்டுகிறாய்?

திங்கள், 31 ஜனவரி, 2011

நாகப்பட்டிணம் நாம் தமிழரின் வீர வணக்க பொதுக்கூட்டம்-முதல் தகவல் அறிக்கை

இடம்:நாகப்பட்டிணம் நாள்: 30.01.2011
மாவீரன் முத்துக்குமாருக்கு வீர வணக்க பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாம் தமிழர்களுக்கு சொல்வது எனன?
1. தலைவன் வருவான்,தகர்த்து எறிவான்
2. சூனியக்காரி சோனியாவின் குடும்ப குழுமம் காங்கிரசை வேரறுப்போம்
3. பேரறிவாளன் உள்ளிட்டோரை சிறையிலிருந்து மீட்போம்
4. தமிழனுக்கு என்று ஒரு நாடு மீட்டு எடுப்போம்






தாமரையின் கடிதத்தை படித்த பிறகு நானும் ஒரு தமிழனாய் மனதில் குழப்பங்களோடு பேரணி தொடங்குவதாக அறிவித்த பிற்பகல் 3.00 மணிக்கே மாநாட்டு திடலுக்கு சென்றடைந்தேன்.மாநாட்டு திடலில் இளைஞர் பாசறையை சேர்ந்த தோழர்கள் விழா ஏற்பாட்டை கவனித்துக் கொண்டு இருந்தார்கள்..இருக்கை வசதிகளை ஒழுங்கு படுத்தி கொண்டு இருந்தார்கள். செல்லப்பா பாட ஆரம்பித்தார். தலைவர் நலமாக உள்ளார்;வருவார் ; 1200 கரும்புலிகளோடு இயங்கிக் கொண்டு உள்ளார் என்ற நம்பிக்கையூட்டும் பாடல் பாடினார்.பேரணி 4.30 க்கு புறப்பட்டு மாநாட்டு திடலை 6 மணிக்கு வந்தடைந்தது

இளைஞர்கள் ஆதிக்கம்
20,000 இருக்கைக்கு மேல் போட்டு இருந்தார்கள். மூன்று மணிக்கு இருந்த நிலையை பார்த்த பொழுது அத்துணை பேர் வருவர்களா என்று எண்ணினேன்; ஆனால் பேரணி திடலை வந்து அடைந்ததும் அங்கு நிற்பதற்கு கூட இடம் இல்லாது போனது.இதே திடலில் தான் சென்ற மாதம் திமுக மாநாடு நடந்தது. அன்று காசு கொடுத்து கூட்டி வந்த கூட்டம்.இன்று ஒரு நல்ல cause க்காக திரண்டு வந்த கூட்டம். மிக மகிழ்ச்சி தரக்கூடியதாக நான் கண்டது..வந்திருந்த பார்வையாளர்களில் 90 % பேர் 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்

மேடையை அலங்கரித்தவர்கள்
முத்க்குமாரின் தந்தை, தமக்கை, பேரறிவாளன் தாயார், "தமிழக மீனவர்களை காப்பாற்ற முடியாத உனக்கு எதற்கு வேட்டி சட்டை" என்று சிதம்பரத்திற்கு பூவும் போட்டும் வளையலும் வழங்கிய வழக்குரைஞர் கயல்விழி,மனித உரிமை ஆர்வலர் பால் க்யுமன் . பேராசிரியர் தீரன்,சாகுல் ஹமீது வந்து இருந்தனர்.

புஷ்பவனம் மீனவர் ஜெயக்குமாரை சிங்கள நாய்கள் கொன்ற நிகழ்வை நாடகமாக நடித்துக் காட்டினர். தோழர் திலீபன் சூடாக கேட்டார் "மீனவர்கள் இறந்தால் நிதி குடுப்பதை நிறுத்து..உயிரைக் காப்பாற்று. இதே கடலில் ராகுல் காந்தியை கட்டு மரத்தில் அனுப்பு.அவன் இறந்தால் சோனியாவிற்கு ஒரு லட்சம் நிதியும்,சத்துணவில் ஆயா வேலையும் போட்டு குடுப்பியா நீ?' என்று கேட்ட போது திடலே அதிர்ந்தது.

இந்தியா ஏன் இலங்கையை ஆதரிக்கிறது?
தனி மனித உரிமைகளுக்காக போராடுவது தீவிரவாதம் அல்ல..அப்படி பார்த்தால் அமேரிக்கர்கள் கூட தீவிரவாதிகள் தான் என்ற பால் க்யுமன் இந்திய ஏன் இலங்கையை ஆதரிக்கிறது என்ற கருத்தையும் சொன்னார். "இலங்கை தமிழர்களின் போராட்டத்துக்கு அடிபணிந்து தனிநாடு தந்து விட்டால், இந்தியாவில் இப்பொழுது தனி நாடு கோரி போராட்டம் நடைபெறுகின்ற நாகலாந்து,மணிப்பூர்,அஸ்ஸாம்,காஷ்மீர் இங்கெல்லாம் போராட்டம் இன்னும் வலுப்பெற்று விடும் என்ற அச்ச உணர்வு காரணமாகவே தமிழர்களுக்கு எதிராக இந்தியா செயல்படுகிறது" என்றார்

செந்தமிழன் சீமான் உரை
அண்ணன் செந்தமிழன் சீமான் உரை இரவு 9.00 மணிக்கு ஆரம்பித்தது. இது முத்துக்குமாரின் வீர வணக்க பொதுக்கூட்டமாகவும் அதிமுகவிற்கு ஆதரவா என்று கேட்டவர்களுக்கு கொள்கை விளக்க கூட்டமாகவும் அமைந்தது. "என் மக்களை மண்ணுக்குள் புதைத்த காங்கிரசை வேரறுப்போம்,அதற்காக ரெட்டை இல்லை எனன ஒரு மொட்டை இலையை கூட ஆதரிப்போம்" என்றார்.

'அதிமுகவிற்கு ஆதரவா என்று பதை பதைக்கிறீர்களே. நான் சொன்னேனா?.சன் டிவிகாரன் சொன்னான். எண்ட கேளுங்க நேருக்கு நேராய். என்ன இத்தனை கேள்வி கேக்குறீங்களே..இதே கேள்விய விஜயகாந்துகிட்ட ஏன் கேக்குறது இல்ல? ஏன்ன அவர் கேக்குறது இல்லை" என்று கேள்வியிலேயே பதிலை தந்தார்

பனிக்கட்டி அல்ல புலிக்குட்டி
"அங்கு போகாதீங்க, கரைஞ்சுடுவீங்க, காணாம போய்டுவீங்க என்று சொல்கிறார்கள்.. கரைஞ்சு போக நாங்க ஒன்றும் பனிக்கட்டி அல்ல..புலிக்குட்டிகள்" என்றார்

"சீமானை நம்புங்கள்..அவன் ஒரு போது ஏமாற்ற மாட்டான்:இலக்கை அடையும் வரை ஓயமாட்டான்; லட்சிய பாதையில் இருந்து விலக மாட்டான், காங்கிரசை வேரறுக்க யாரை வேண்டும் ஆனாலும் ஆதரிப்பேன். இது இந்திய அமைதிப்படையை விரட்ட தலைவர் பிரேமதாசாவுடன் கூட்டு சேர்ந்தது போல. எங்கள் இலக்கு 2016 தேர்தல் தான். இலக்கை அடைய செல்லும் பாதையில் உள்ள நீரோடையில் கை கால் கழுவி ஆசுவாசப் படுத்திக்கொள்வோமே அதுபோல தான் இந்த தேர்தல். முதல் எதிரி காங்கிரஸ்.அதை தமிழகத்தில் போட்டி இடும் அத்தனை தொகுதியிலும் வைப்புத் தொகை இழக்கும் வகையில் தோற்கடிப்போம்..அதற்காக தான் இந்த இந்த வியூகம்'என்று தெளிவு படுத்தினார்.

புலிகள் 2000 கோடி கொடுத்தார்களாமே?
"சீமானுக்கு புலிகள் 300 கோடி கொடுத்தார்கள்,2000 கோடி கொடுத்தார்கள் என்கிறார்கள்..அட முட்டாப் பசங்களா..என்ட்ட கொடுத்த பணத்தை ராஜபக்ஷேவிடம் கொடுத்திருந்தால் இந்தாங்கடா உங்க நாடுன்னு நாட்டை கொடுத்துட்டு ஓடிருப்பானே.. நாங்களே பணம் இல்லாம தான் சென்ற வருடம் நடந்த மதுரை மாநாடு குறுந்தகடு, மாநாட்டு மலர் வெளியிட பணம் இல்லாமல் இப்பொழுது தான் வெளியிடுகிறோம்.அதை விற்று தான் இந்த கூட்டத்துக்கு நடந்த செலவை சரி செய்யணும்" என்றார். நானும் ஒரு குந்தகடும்,விழா மலரும் ரூ.250 க்கு வாங்கினேன்.

தனி நாடு வெல்வோம்
ஒன்றரை கோடி சிங்கள நாய்களுக்கு தனி நாடு இருக்கும் போது, 12 கோடி தமிழர்களுக்கு என்று ஏன் ஒரு நாடு இல்லை? நம்மை அடிமைப் படுத்த நினைக்கும் களவாணிகளை அடையாளம் காண்போம்..விழித்தெழுவோம்...

3000 ஆயிரம் ஆண்டுகளாக போராடிய யூதர்களுக்கே இப்பொழுது தான் தனி நாடு கிடைத்துள்ளது. நமது போராட்டத்திற்கு 60 வயது தான் ஆகிறது. உறுதியாக நமக்கு என்று ஒரு நாடு வெல்வோம்..அதில் புலிக்கொடி பட்டொளி வீசி பறக்கும்..அதில் தமிழ்நாட்டு தமிழர்களின் பங்களிப்பு பெரும்பான்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு வீடு வந்து சேர்ந்தேன்..

சனி, 29 ஜனவரி, 2011

மலேசிய அரசே..அப்துல்லா ஹுசைனின் "INTERLOK" புதினத்தை தடை செய்..


மலேசியாவின் ஒரு பகுதியாக உள்ள தமிழர்களை இழிவு படுத்தும் வகையில் ஹுசைன் அப்துல்லா எழுதிய இண்டர்லோக் நூலை தடை செய்...






BBC-தமிழோசை 

மலேஷியாவில் புத்தகத்தால் சர்ச்சை
மலேஷியப் பள்ளி ஒன்றில் மாணவர்கள்
மலேஷியப் பள்ளி ஒன்றில் மாணவர்கள்
மலேஷியாவில் ஒரு பாடப் புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இந்திய வம்சாவழி மக்களை இழிவு படுத்துவதாக உள்ளது என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
அந்நாட்டில் ‘ஓ’ லெவல் படிக்கும் மாணவர்களுக்கு மலாய் இலக்கியப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில், மலேஷியாவில் குடியேறியுள்ள இந்திய வம்சாவழி மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் கீழ் சாதி மக்கள் என்று பொருட்படும் வகையில் வாசகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக் கூறி எதிர்ப்பு எழுந்துள்ளது.
“ஏற்றுக் கொள்ள முடியாத அல்லது காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களை கூறும் போது அது மலேஷியாவில் வசிக்கும் மலாய், சீன மற்றும் இந்தியர்கள் என்கிற மூவின மக்களின் ஒற்றுமையை பாதிக்கின்றது” என்று கோலாலம்பூரிலுள்ள வழக்கறிஞரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பசுபதி சிதம்பரம் தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஆனால் சர்ச்சைகுரிய “இண்டர்லாக்” எனும் அந்தப் புதினத்தை எழுதியுள்ள 85 வயதான ஹுசைன் அப்துல்லா, சரித்திர சான்றுகளின் அடிப்படையில் தனது புத்தம் எழுதப்பட்டது எனவும் அதன் காரணமாக சர்ச்சைகுரிய பகுதிகள் நீக்கப்படாது எனவும் தெரிவித்துவிட்டதாகவும் பசுபதி சிதம்பரம் கூறுகிறார்.
இந்தப் புத்தகத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருவதாகக் கூற்படும் நிலையில், சரித்திர ரீதியிலான இலக்கியம் என்பதால் அதிலிருந்து எந்தப் பகுதியையும் நீக்கக் கூடாது என மலாய் எழுத்தாளர்கள் வாதிட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
தமது எதிர்ப்பை தெரிவித்த நிலையில் மலேஷிய அரசு சர்ச்சைகுரிய பகுதிகளை நீக்குவதாகவும் ஆனால் புத்தகத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டதாகவும் பசுபதி சிதம்பரம் கூறுகிறார்.
மலேஷிய அரசின் இந்த நிலைப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் மூவின மக்களின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதால், இப்புத்தகம் முழுமையாக திரும்பப் பெறப்பட வேண்டும் என தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கருத்து வெளியிட்டார்.
கல்வி, சமூக, கலாச்சாராம் மற்றும் பொருளாதார ரீதியாக மலேஷியாவில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் முன்னேறிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் அதிலும் குறிப்பாக மாணவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்கிற ரீதியிலேயே இப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தாங்கள் கருதுவதாகவும் அவர் கூறுகிறார்.
நன்றி:BBCTamil.com
LINK:http://www.bbc.co.uk/tamil/news/story/2011/01/110128_malaysia_bookissue.shtml