வெள்ளி, 4 டிசம்பர், 2020

இன்பத் தமிழ் -சேக்கிழார் உவமை நயம்

அறுபது மூவர் வாழ்க்கை வரலாற்றை ஒரு வரலாற்று அறிஞராக வடவேங்கடம் முதல் தென்குமரி வரை ஆய்வு செய்த ஆய்வறிஞர்- தில்லைச் சிற்றம்பலத்தை பொன்னால் வேய்ந்த 2ஆம் குலோத்துங்க சோழனின் முதன்மைஅமைச்சர் தெய்வச் சேக்கிழார் அவர்கள் பெரிய புராணத்தில் = திருநின்ற சருக்கத்தில் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணத்தில் எனை ஈர்த்த அழகிய கற்பனை நயமிக்க பாடல்
மலர்ச் சோலையின் மரங்கள் அவள் கரங்கள்.
அவற்றைச் சுற்றிச் சூழும் கருவண்டு குலம், அவள் கரங்களில் குலுங்கும் நீல வளையல்களாம், 
மரங்களின் செந்தளிர்கள் அவள் விரல்கள்.
நகங்கள் தளிர்களில் நீண்டு ஒளிரும் நகங்கள்.
மரங்கள் வானளாவி ஓங்குதல், நிலமகள் தன் கையை நீட்டி வானுறு மதி எனும் கண்ணாடியை அணைத்தல் தன் மெய்யொளியின் நிழற்காணுதல் பொருட்டாம்.









1 கருத்துகள்: