வெள்ளி, 25 செப்டம்பர், 2020

இந்திய ஒன்றியம் கொண்டுவந்துள்ள 3 உழவர் விரோத அவசர சட்டங்களின் பின் விளைவுகள்

 

1. "பஞ்சத்திற்கு காரணம் விளைச்சல் பற்றாக்குறை அல்ல-பதுக்குதலே" - அமர்தியாசென். ஆனால் புதிய சட்டம் உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் முதலியவற்றை இன்றியமையாத பொருளில் இருந்து நீக்கி பதுக்கலை அங்கீகரிக்கிறது

2. வேளாண் வருமானமும் இனி வருமான வரி வரம்பில் அடக்கம்

3. குறைந்தபட்ச ஆதார விலை இனி இல்லை. இந்திய உணவு கழகம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இழுத்து மூடப்படும். இறுதியாக நியாயவிலைக் கடைகள் காணமல் போகும்.

4. பண்ணை விவசாயம் முறையில் உழவர் மேலும் கடனாளி ஆக்கப்பட்டு நிலத்தை பண்ணை குளுமங்களிடம் இழந்து சொந்த மண்ணை விட்டு அகதிகளாக போகும் அபாயம்

5. குழுமங்கள் சொல்வதை தான் விவசாயி விளைவிக்க வேண்டும். உற்பத்தி பொருளுக்கான விலை முதலிலேயே ஒப்பந்தம் போடப்பட்டுவிடும். ஆனால் உற்பத்தி பொருள் தரம் இல்லை என அடிமாட்டு விலைக்கு குறைக்கப்படும். பெரிய கார்பொரேட்டுகளை எதிர்த்து நீங்கள் நீதிமன்றம் சென்று வழக்கு நடத்த முடியுமா? நீதி தான் கிடைக்குமா?

6. மரபணு மாற்றப்பட்ட விதைகள் தாரளாமாக புழங்கும். நாட்டு விதைகள் மாயம் ஆகும். நிலம் மலடாகும். மக்கள் நோயாளிகள் ஆவர்.

7. வங்கிகள் விவசாய கடன் அளிப்பதில் இருந்து இன்னும் விலகிப் போகும். அந்த இடங்களை பெருங்குழுமம் ஏற்றுக்கொள்ளும். கந்துவட்டி கட்டி கடனாளி ஆக வேண்டும். கட்ட முடியாதவர்கள் உத்தரத்தில் தூக்கு கயிறை கட்டும் அவலநிலை உண்டாகும்

8.இதுவரை மாநில அதிகாரத்தில் உள்ளவற்றை நடுவண் அரசு எடுத்துக்கொள்ளும். இந்த முறை மாநில அதிகாரத்தில் உள்ள வேளாண் துறையை நேரடியாக தனியாருக்கு தாரைவார்ப்பதன் மூலம் உழவர்கள் கார்போரேட்டுக்கு அடிமையக்கப்படுகிறார்கள்.

9. பீகார், குஜராத்தில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் இல்லை.அங்கு மண்டி எனும் தனி நபர் வியாபாரிகள் . அவர்கள் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவான விலைக்கே கொள்முதல் செய்கிறார்கள். அந்த நிலை நாடெங்கும் இனி எதிர்காலத்தில் ஏற்படும்

 

-காவிரி உரிமை மீட்புக் குழு 
-தமிழ்த் தேசியப் பேரியக்கம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக