- தேர்தல் நேரத்தின் போது தேசியத் தலைவரின் படத்தை காட்டி பிச்சை கேட்டுவிட்டு இப்போது நன்றி கெட்ட தனமாக தடை செய்துவிட்டார் எனக்கூறும் தமிழின ஆதரவாளர்களே
- 3200 தமிழ் வழிப் பள்ளிகளில் ஆங்கிலத்தை புகுத்தும், கலை அறிவியல் கல்லூரித் தேர்வுகளை ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்று மாற்றிய கன்னடத் தாய் எனத் தூற்றும் தமிழ் மொழிப் பற்றாளர்களே
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்ற நினைத்த தாயுள்ளத்தை தமிழக நிதியை விரயமாக்கும் தற்குறி எனக் குறை கூறிய நடுநிலையாளர்களே
- வீரப்பனை விஷம் வைத்துக் கொன்றுவிட்டு சுட்டுப் பிடித்தோம் என மார்தட்டும் தமிழக காவல்துறையினரால் விழுப்புரம் திருக்கோவிலூரில் 4 இருளர் இனப் பெண்கள் வன்புணர்ச்சி செய்த பொது 5லட்சம் நிவாரண நிதி வழங்கிய பெண்ணுள்ளத்தை தூற்றிய பெண்ணியவாதிகளே
- தண்ணீர் இல்லாமல் சம்பா பயிர் வாடிவிடும் என்பதால் விவசாயம் செய்ய வேண்டாம் என வாடிய பயிரை பார்த்த போதெல்லாம் வாடிய காவிரித் தாயை தூற்றிய டெல்டா விவசாயிகளே...
உங்களுக்கெல்லாம் அவர் எப்படிப் பட்ட பெருந்தன்மை உள்ளவர் என்பதற்கு ஒரே ஒரு சான்று கூறுகிறேன். மறுக்க முடியுமா எனப் பாருங்கள்....
"அம்மா அதிகாரம் இனி செல்லாது" என்கிற விளம்பரத்தை தடை செய்யாத இந்த பெருந்தண்மை உளத்தை எப்போது தான் நீங்கள் புரிந்து கொள்ளப் போகிறீர்களோ...