வியாழன், 15 ஆகஸ்ட், 2013

வைரஸ் தாக்கிய "பென்டிரைவ்"இல் இருந்து கோப்புகளை மீட்க...


முகநூல் செய்தி..முயற்சித்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்...

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —


how to retrieve files from virus infected pendrive

காவல்துறைக்கே முதல் மரியாதை-ஏன்?

தமிழனிற்கு ஒன்றுக்கும் உதவாத விடுதலை நாள் கொடி ஏற்றத்தின்போது கூட காவல்துறை இயக்குனர் அவர்களே, காவல்துறையினரே என்று அவர்களுக்கு முதல் மரியாதை செலுத்தி விட்டு தான் தன்னை வாழ வைக்கும் இதய தெய்வங்களை கூட நினைவு கூறுகிறார். காவல்துறையில் வேலை பார்க்கும் கடைக்கோடி ஊழியர் இறந்தால் கூட பணமுடிப்பு அளித்து அரசாணையில் வெளியிட்டு அதை சிறப்பு செய்தியாக ஒவ்வொரு ஞாயிறும் ஜெயா தொ.கா.வில் இரங்கல் செய்தியும் வெளியிடுகிறார்கள்.

அப்படி என்ன சிறப்பாக ஊழியம் செய்கிறார்கள் காவல் துறை தோழர்கள் மற்ற துறையினரை விட? வாரத்திற்கு இரண்டு நாட்களாவது வேலை செய்யும் ஆசிரியர்கள் இவர் கண்ணுக்கு புலப்படவில்லையா? குடும்ப அட்டைக்கு ஆயிரம் ஐநூறு என கையூட்டு வாங்கினாலும் ஏதோ வேலை செய்யும் உணவு பொருள் வழங்கு துறை, வருவாய் துறை ஊழியர்கள்,தமிழகத்தின் நிதிச் சுமையை ஒற்றை ஆளாக சுமக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் இவர்களை விட அப்படி என்ன பெரிதாக கிழிக்கிறார்கள் காவலர்கள்?

கற்பழிப்பு கொலை கொள்ளை என நாட்டில் குற்றங்கள் குறைய வேலை செய்தததாகவும் தெரியவில்லை. மாறாக தேக்கு மரத்திட்டம்,ஈமு கோழி, இணைய வேலை வைப்பகம் என நூதன கொள்ளைகளில் கோடி கோடியாக மக்கள் பணத்தை சுருட்டும் கும்பல், ஆள் கடத்தலில் ஈடுபடும் ஓவர்நைட் ஒபமாக்கள் எண்ணிக்கை தான் பெருகி உள்ளன. 

எங்கோ கடைக்கோடியில் இருக்கும் படிக்காத பாமரன் கூட  புதிதாக நூதன கொள்ளையில் ஈடுபடும் குழுமத்தை கண்டுபிடித்து தனது மொத்த சேமிப்பையும் அடகு வைத்து ஏமாந்து போகிறான். அவனுக்கே தெரிகின்ற போது, நாடு முழுவதும் விரிந்து பரவி உள்ள,புலனாய்வு அமைப்புகள்,சிறப்பு குற்றப் பிரிவு,பொருளாதார குற்றப் பிரிவு,மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் கொண்ட இவர்களால் அப்படி நூதன கொள்ளைகளில் ஈடுபடுபவர்களை ஏன் ஆரம்பத்திலேயே கண்டு "பிடிக்க" முடியாமல் போகிறது?

முகநூலில் மீனவனை நக்கல் செய்த சின்மயிக்கு எதிராக பின்னூட்டம் போடுபவர்களையும், திராவிட அரசை விமர்சிப்பவர்களையும் கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைத்த அரசு,பட்டவர்த்தமாக விளம்பரம் செய்து  நகரின் நடுவில் பிரமாண்டமாய் அலுவலகம் வைத்து வெளிப்படையாக பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் இவர்களை பிடிக்க என்ன செய்தது? இப்பொழுது தான் சிறப்பு பிரிவு ஆரம்பித்து உள்ளார்கள்?அப்படி என்றால் இதற்கு முன்பு இருந்த பொருளாதார குற்றப்பிரிவில் இருந்த அதிகாரிகள் என்ன செய்தார்கள்?இறந்த போன உடலிற்கு உடற்கூறு பரிசோதனை செய்ததை தவிர?

சர்வாதிகாரி தான் காவல் துறைக்கு முக்கியத்துவம் தருவார்கள். அப்படி என்றால் தமிழகத்தில் நடப்பது?