இந்திய வங்கிகள் தாங்கள் வைத்துள்ள வைப்புத் தொகையில் 75 விழுக்காட்டை (CREDIT DEPOSIT RATIO)கடனாக தருகிறது. ஆயிரத்தையும் ஐநூறையும் செல்லாக்காசு ஆக்கியதன் விளைவு, சுருக்குப் பையிலும் உண்டியலிலும் சேமித்து இருந்த பீதி அடைந்த பாமரனின் பணம் வங்கிக் கணக்கிற்கு மாறும். அது கிங்பிஷர் மல்லையாவிற்கும், உத்தம் ஸ்டீலுக்கும், உசா இச்பத்திற்கும் கடனாக கொடுக்கப்பட்டு லண்டனில் குடி அமர்த்தப்படுவார்கள்.
|
நவயுக நீரோ |
சில மாதங்களுக்கு முன் ஜன் தன் திட்டம் என்கிற பெயரில் லட்சக்கணக்கான டம்மி கணக்குகள் திறக்கப்பட்டதாக பெருமை பேசிய பாஜக, வங்கிகளின் உழைப்பையும் மூலதனத்தையும் விரயம் செய்து தோல்வி அடைந்தது. அந்த கணக்கில் பைசா கிடையாது. அந்த கணக்கை உயிர்பிக்கவும் அதே சமயத்தில் பெருமுதலாளிகள்-ஊக வணிகர்கள் பலனடையவும் பங்குச் சந்தை மணி அடித்த பிறகு பாமரனுக்கு சாவு மணி அடிக்கப்பட்டது கையில் இருந்த காசு செல்லாது என்று.
சென்ற ஆண்டு எல்லாம் இருந்தவனையும் முச்சந்திக்கு வரவைத்தது மழை. இந்த ஆண்டு கையில் பணம் இருந்தவனையும் பிச்சைக்காரன் ஆக்கி பைத்தியம் பிடித்து அலைய வைத்தான் மோடி. இரு தினங்களில் திருமணம், வெளியூர் பயணம் என்று ஆங்காங்கு இருந்தவன் எல்லாம் உன்மத்தம் பிடித்து அலைய ஆரம்பித்தான்.
டிசம்பர் 30 வரை வங்கியில் வாங்கப்படும் பணத்தை, செல்லாது என்று சொல்லி இருபத்து நான்கு மணி நேர தொ.கா அலைவரிசைகள் தங்கள் பங்கிற்கு மன அழுத்தத்தை அதிகரித்து டிஆர் பி தரத்தை உயர்த்திக் கொள்ள போட்டி போட்டு முந்தின உங்கள் பணம் செல்லாது என்று அண்மைச் செய்தி வெளியிட்டு.
வங்கியில் கடன் வாங்கிய ஒரு சில பெரு முதலாளிகள் தாங்கள் வாங்கிய கடனை ஒழுங்காக கட்டினாலே 60000 கோடி திரும்பக் கிடைக்கும்.அப்படி கட்டாமல் ஏமாற்றுபவர்களை கிரிமினல் குற்றவாளிகள் என அறிவி என்று வங்கி ஊழியர்கள் தங்கள் ஊதியங்களை விட்டுக் கொடுத்து போராடி அழுத்துவிட்டனர். மோடி அரசு செவி சாய்க்கவே இல்லை-தங்களுக்கு படி அளக்கும் சாமிக்கே வேட்டு வைக்க சொல்கிறார்களே என்று.
ஐந்து நிமிடம் உரையாற்றிவிட்டு சப்பானுக்கு ஓய்வெடுக்க சென்று விட்டான் ஏழைப்பங்காளன் மோடி...