ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

விவேக் இறப்பும் தடுப்பூசி விழிப்புணர்வும்

 விவேக் இருந்தபோது தனது நடிப்பால் தனது இறுதி காலங்களில்  சிந்திக்க வைத்தாரா சிரிக்க வைத்தாரா என்பதில் மாறுபட்ட கருத்து இருக்கலாம். ஆனால் அவரின் இறப்பு கண்டிப்பாக தடுப்பூசி நம்பகத்தன்மை பற்றிய கேள்வியையும் விழிப்புணர்வையும் ஓரளவு ஏற்படுத்தி உள்ளது என்பது என்னவோ உண்மை, இந்த விழிப்புணர்விற்கு இன்னுமொரு காரணம் தமிழன் என்பதில் திமிரும் மக்களுக்காக எந்த மட்டத்திலும் நின்று உண்மையை பேசும் திரு மன்சூர் அலிகான் அவர்களுமே 








செவ்வாய், 13 ஏப்ரல், 2021

மக்களாட்சி போர்வையில் மனிதப் படுகொலைகள்

மக்களாட்சி போர்வையை போர்த்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் ஏவல் துறையை கைக்கொண்டும், சில சமயம் ஏவல் துறை எதேச்"சாதி"காரகமாவும் நடத்திய மனித குல கொடூர படுகொலை தாக்குதல்கள்.  

1965

பக்தவச்சலம்

மொழிப்போர் படுகொலை

1968

அண்ணாத்துரை

வெண்மணிப் படுகொலை

1986

ம கோ இராமச்சந்திரன்

தமிழரசன் பெயரில் 35 அப்பாவி பொதுமக்கள் மருதையாற்று குண்டுவெடிப்பில்  படுகொலை/ பொதுவுடைமை போராளிகள் தேடித் தேடி அழிக்கப்பட்டனர்

1992

செயலலிதா

வாச்சாத்தி வன்முறை

1995

செயலலிதா

கொடியங்குளம் படுகொலை

1999

கருணாநிதி

மாஞ்சோலை படுகொலை

2017

பன்னீர்செல்வம்

சல்லிக்கட்டு அடக்குமுறை அராஜகம்

2018

பழனிச்சாமி

தூத்துக்குடி படுகொலை

2020

பழனிச்சாமி

சாத்தான்குளம் படுகொலை  




சனி, 10 ஏப்ரல், 2021

தெருக்கூத்து நடத்தி மருத்துவ படிப்பை தொடரும் ஏழை மாணவர்.

 


கீழக்கண்ட  மாணவர் நேரில் தொடர்பு கொண்டார். இறுதி ஆண்டு படிக்கிறார். இறுதி ஆண்டிற்கு முதல் கட்டமாக ரூ.40000 கட்ட வேண்டி உள்ளது. தெருக்கூத்து நடத்தியும் தெரிந்தவர்களிடம் உதவி பெற்றும் ரூ. 20000 திரட்டி விட்டார். மீதம் உள்ள தொகைக்கு தெரிந்தர்வர்கள் உதவிக்கரம் நீட்டுவோம்.



ஆரஞ்சி வண்ண தாவணியில் பெண் வேடமிட்டு நடிப்பவர்  தான் 
மாணவர் பிரசாத்