செவ்வாய், 8 ஏப்ரல், 2014

தமிழக தேர்தல் களத்தில் ஈழத்தின் தாக்கம்

கடந்த வாரம் மக்கள் தொ.கா. வில் மேற்கண்ட தலைப்பு வைத்து ஒரு நேரடி விவாதம் நடைபெற்றது.

தனி ஈழத்தை ஆதரிக்கமாட்டோம் என ராஜபக்சேவின் இன்னொரு ஆரிய அடி வருடியான பாஜக தமிழகத்திலேயே வந்து கொக்கரித்துவிட்டு சென்ற பிறகு இந்த விவாதம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

களவானி காங்கிரசின் அன்னக்கை பொன்.கிருஷ்ணமூர்த்தி கூறுகிறான்..."தமிழக தேர்தலில் ஈழ உணர்வு பிரதிபலிக்காது. அப்படி இருந்திருந்தால் 2011 சட்டமன்ற தேர்தலில் விடுதலைப் புலிகளின் எதிரியான ஜெயலலிதா அருதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா?"

அடிப்படை அரிச்சுவடி தெரியாத அந்த கிழட்டு மூதேவிக்கு ஒன்று சொல்கிறேன். தமிழக மக்கள் யாரும் ஜெயலலிதா ஆட்சிக்கு வரவேண்டும் என்று வாக்களிக்கவில்லை. காங்கிரசு மற்றும் அதனுடன் கூட்டணி வைத்து இனப் படுகொலையில் ஈடுபட்ட திமுகவை பாடையில் ஏற்றவேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வீறுகொண்டு எழுந்ததின் விளைவு தான் எதிர்க் கட்சி வரிசையில் கூட அமர தகுதி அற்ற நிலைக்கு திமுக தள்ளப்பட்டதும்,போட்டியிட்ட 63 தொகுதிகளில் காங்கிரசு 58இல் மண்ணைக் கவ்வியதும்.

சுப்ரமணிய சாமி பாஜகவில் புகுந்து உள்ளிருந்து மாமா வேலை செய்ய ஆரம்பித்துவிட்டான். அதன் எதிரொலி தான் வெங்கைய நாயுடுவின் அறிக்கை. ஒரு வேளை தமிழ்நாட்டில் பாஜக வென்றால் ஈழத்தை சொல்லி நாங்கள் வாக்கு கேட்கவில்லை எனக் கூறி காங்கிரசு விட்டுச் சென்ற இன அழிப்பு வேலையை அவர்கள் தொடரலாம் என்பதற்கு அத்தாட்சி பெறவே, ஈழ உணர்வு தமிழக மக்களிடம் இல்லை என்ற மாயையை உருவாக்க நினைக்கிறார்கள்.

தனி ஈழத்தை ஆதரிக்காத பாஜகவுடன் கூட்டு சேர்ந்து விட்டோமே,தனது மகன் வெற்றி பெறுவானா, அமைச்சர் பதவி கிட்டுமா என்கிற கவலை பாமகவிற்கு வந்துவிட்டது. அதனால் தான் அவர்களும் ஈழப் பிரச்சனை தமிழகத்தில் தேர்தல் முடிவை பாதிக்காது என்று தங்களை ஆறுதல் செய்து கொள்ள நினைக்கிறார்கள்.

மக்களே..தமிழர்களின் நலனைப் பொருத்தவரை காங்கிரசும், பாஜகவும், மார்க்சிஸ்டும்,ஆம் ஆத்மியும் ஒன்று தான். அவர்கள் எப்போதும் நமது நலனுக்கு எதிராக தான் நிற்பார்கள். கேரளாவிலும், கர்நாடகத்திலும் கெயில் குழாய் நெடுஞ்சாலை வழியே செல்கிறது.ஆனால் தமிழகத்தில் விளை நிலங்கள் வழியே. அவர்கள் வேண்டாம் என்று தூக்கி எறிந்த அணு உலை..நமது இயற்கை எழில் சூழ்ந்த திருநெல்வேலி,கன்னியாகுமரி கடற்கரையில். 

நம்மை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களியுங்கள். எதிரிகள் களத்தில் இல்லாத தொகுதியில் நோட்டோவை பயன்படுத்துங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக