தேசியக் கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிகள் சரியத் தொடங்கினால் உடனே ஒரு குட்டி போட்டு அதற்கு மறைமுகமாக தாங்களே தலைவர்களை நியமித்து, அது ஏதோ முற்றிலும் தனக்கு விரோதமான கட்சி போன்ற மாயையை மக்களிடம் தோற்றுவித்து தங்களுக்கு இருக்கும் மிச்ச சொச்சம் வாக்களர்களை தக்க வைத்துக் கொள்ளும் சம்பிரதாயம் தான் இந்த தமிழ் மாநில காங்கிரசு (மூப்பனார்) உதயம்.
இது கொக்கோ கோலாவும் ஸ்பிரைட்டும் வேறு வேறு என்று காட்டிய விளம்பர உத்தி.
1996இல் தோன்றி 2002 இல் சில அமைச்சர் பதவிக்கு பேரம் பேசி அதற்கு விலையாக அவர்களே அதை மண்ணுக்குள் போட்டு கல்லறைக்குள் புதைத்ததை புதிய வர்ணம் பூசி இத்துப்போன மிதிவண்டியில் ஏற்றி மறதி மிக்க தமிழர் சந்தையில் விற்பனை செய்ய முனைந்து இருக்கிறார்கள் இந்த நவயுக அரசியல் வியாபாரிகள்.
2009இல் தாங்கள் சார்ந்த காங்கிரசு கட்சி தமிழர்களை முள்ளிவாய்க்காளில் இனப்படுகொலை செய்து புதைத்த போது வராத வீரியம், 650 தமிழ் மீனவர்களை கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற போது வராத கோவம், ஐ.நா வில் ஆதரவாக இந்தியா வாக்கு அளித்த போது வராத ஆத்திரம், திடீரென்று வந்துள்ளது என்றால், காரணம் வேறு என்னவாக இருக்க முடியும்?
வலிமையான பாரதமாம்..!!! தமிழன் குருதியை உரிந்து குடித்து அது நன்றாக கொழுத்துப் போய் தான் உள்ளது. தமிழன் தான் சப்பாணியாக இருக்கிறான். இந்த அடிப்படையை கூட உணராத இவர்கள் தமிழர்களுக்காக போராட போகிறார்களாம். ஆட்சி அவர்கள் கையில் இருந்த போது தமிழனை நட்டு நிமிர்த்து விட்டார்கள்..இப்போது தூக்கி நிமிர்த்தப் போகிறார்களாம்!!!
2016இல் ஒரு சில தொகுதிகளை வென்றெடுத்த பிறகு தாய்க்கட்சியோடு இணைந்து விடும் இந்த பன்றிகள் கூட்டம்.
ஒன்று மட்டும் சொல்லிகொல்கிறோம்...
இனி காங்கிரசு தமிழ்நாட்டில் எத்தனை குட்டிகள் போட்டாலும்...அதற்கு தமிழன் பரிசாக தருவது கள்ளிப்பால் மட்டுமே...!!!
இனி காங்கிரசு தமிழ்நாட்டில் எத்தனை குட்டிகள் போட்டாலும்...அதற்கு தமிழன் பரிசாக தருவது கள்ளிப்பால் மட்டுமே...!!!