பேரறிவாளனின் கருணை மனுவை கடைசி வரை பரிசீலிக்காமலே பதவியை தக்கவைத்துக் கொண்ட திறனும்,
ஈழத்திற்கு சென்று வாய்ப்பு கிடைத்தும் இனப்படுகொலை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத உங்கள் அமைதியும்,
பார்ப்பன கும்பலின் அரசியல் காய் நகர்த்துதலில் நல்வாய்ப்பாக அமைந்த பதவியை வைத்து பிறந்த இனத்தை பற்றிக் சிறிதும் சிந்திக்காமல் இறுதி வரை இந்தியனாய் இருந்ததும்
தமிழ்க் குழந்தைளை இந்திய அடிமைகளாய் மாற்றிய மாபெரும் உங்கள் சாதனைகளும்
இந்தியத்தின் கழிவை தமிழகத்தில் இருந்து நீக்க பாமர மக்கள் போராடிய பொது "அணுவுலை ஆபத்து இல்லை" என்று இந்தியனுக்கு காவடி தூக்கி எதிர்கால தமிழ் சமுதாயத்திற்கு சமாதி கட்டியதையும்
மறந்து அவரை இழந்து வாடும் இந்தியர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்!!!