ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

அடிமை இனத்தின் நீர்த்துப் போன போராட்ட வழிமுறைகள்

அரியானா மாவட்டத்தில் 29 விழுக்காடு  உள்ள சமூகத்தில் கல்வியில் கலாச்சாரத்தில் உயர்ந்த ஜாட் சமூகம் 1990 இல் இருந்து 25 ஆண்டுகளாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களை சேர்க்கச் சொல்லி  போராடி வருகிறது. வழக்கம் போல இதர இன உரிமைகளை அடக்கி ஆளும் "ஆண்ட" பாரத வல்லரசு  கண்டுகொள்ளவே இல்லை.

ஆனால் கடந்த ஒரு வார காலமாக நடத்தும் இந்த இனத்தின் போராட்டம் அகில இந்தியாவையுமே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 600 தொடர் வண்டிகள் நிறுத்தம்...;காவலர் குடியிருப்புகள் எரிப்பு; சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடக்கம்; தில்லிக்கு தண்ணீர் அளிக்கும் கால்வாய் கைப்பற்றி அதன் காரணமாக தில்லிக்கு பள்ளி அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிப்பு..

உடனடியாக அடிபணிந்த  நடுவண் அரசு கோரிக்கைகளை பரிசீலிக்க ஒரு குழு அமைத்துள்ளது.

ஆனால் 5000 ஆண்டு பழமை வாய்ந்த நொந்து நூடுல்ஸ் ஆன சோர்ந்து போன தமிழினம் இன்னும் தமிழை உயர்நீதி மன்ற வழக்காடு மொழியாக கொண்டுவர இயலவில்லை; அப்பாவி எழுவரை  விடுவிக்க துப்பில்லை ; கெயில் நிறுவனம், மீத்தேன் திட்டம் & கூடங்குளம் தமிழனுக்கு சமாதி கட்டியும் இன்னும் மூச்சு மட்டும் விடும் தமிழினத்தின் திறமையை பாராட்டியே  ஆக வேண்டும். 

தன்னையே வருத்திக் கொண்டு ஈரத்துணியைக் கட்டி போராட்டம், கஞ்சித் தொட்டி திறந்து போராடும் விசைத்தறி தொழிலார்கள் போராட்டம்;  தன்னை எரித்துக் அமைதியாக உயிரை மாய்த்துக் கொள்ளும் ஈழ ஆதரவு ஈகிகள்; கண்ணை கட்டி போராட்டம்..பாடை கட்டி போராட்டம்;,மொட்டை அடித்துப் போராட்டம் என்கிற எங்கள் போராட்டங்களை பாராட்டி நடுவண் அரசு சிறந்த அடிமை இனம் என்கிற விருதை தமிழினத்திற்குத்  தர வேண்டும் என்கிற எங்கள் கோரிக்கையை திராவிட அரசுகள் மூலம் முன் வைக்கிறோம்.

எங்கள் நியாயமான வேண்டுகோளை கனிவுடன் பரிசீலிக்க தமிலீனத் தலைவனை வேண்டிக் கேட்டுக்கொள்ளும்
வீரத்தமிழன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக