வியாழன், 26 நவம்பர், 2020

தலைவர்66

தமிழினத்தின் ஒரே தலைவன்
தரணி போற்றும் மாமனிதன்
வாழ்க பல்லாண்டு

எடுத்தவுடன் ஆயுதத்தை எந்திடவில்லை. போதுமான அவகாசம் கொடுத்தார் சமாதானத்திற்கு. ஆயுதத்தை பன்னாட்டு உலகத்தின் முன்னிலையில் சமர்ப்பித்து நிராயுதபாணியாக நின்றார் இந்த வஞ்சக உலகத்தை நம்பி.

இந்தியத்தின் சூழ்ச்சியால் உலகமே ஓர் அணியில் திரண்டு 2009இல் எங்கள் மக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட போது கூட இயன்றவரை காக்க முயன்றது புலிகள் அமைப்பு. அப்பாவிகளை கொன்ற அரசாங்கம் செய்தது சரியாம். காக்க முற்பட்ட புலிகள் தீவிரவாதிகளாம்.










புதன், 25 நவம்பர், 2020

கொரானா சதியா இல்லை வியாதியா?


கொரானா காலத்தில் மட்டும் ப்ளூம்பெர்க் பட்டியலில் உள்ள உலக பணக்காரர்கள் சொத்துமதிப்பு 23% உயர்ந்துள்ளது. முதல் 500பேர் 96லட்சம் கோடி சொத்துக்கள் சேகரித்து உள்ளனர். இப்ப சொல்லு...கொரானா ஏழைகளை ஏழையாக்கும் நோயா? லட்சாதிபதிகளை கோடீஸ்வரனாக்கும் சதியா?

நதி எங்கே போகிறது?


 

வெள்ளி, 20 நவம்பர், 2020

சத்திய சோதனை

தன்மையானவர்களிடம் இருந்து
அன்பையும்,
வெறுப்பேற்றுபவர்களிடம் இருந்து
பொறுமையையும்
கற்றுக்கொள்!!! 

 

வெள்ளி, 13 நவம்பர், 2020

பாடசாலைக்கு போகாதே என்றாள் என் அன்னை ...?!

 பள்ளி திறப்பிற்கு பெற்றோர் எதிர்ப்பாம்.

 

இந்த போராளிகள், கொரனா ஒரு அரசியல்/ பொருளாதார சுரண்டல் என்று இத்தனை நாள் வாய்கிழிய கத்தி, போராடி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்துக்கொண்ட அத்தனை முயற்சிகளையும் இலகுவாக மக்களைக் கொண்டே முறியடித்த அரசியல்வாதிகளை மெச்சுவதா? இல்லை,இந்த ஆட்டுமந்தை கூட்டத்தை பார்த்து மெய்சிலிர்த்துப் போவதா? வாயில் துணியை அடைத்தால் கிருமி உள்ளே போகாது என்று நம்பும் இந்த அறிவாளிகளுக்கா நீங்கள் அடிப்படை மாற்றத்தை கட்டியமைக்கப் போகிறீர்கள்?

ஞாயிறு, 1 நவம்பர், 2020

அன்னைமடி நிழலே

 

ஆயிரம் பீரங்கிகள் அளிக்க முடியாத

பாதுகாப்பு  

அன்னையின் அரவணைப்பில்.

இவன் நிம்மதியான உறக்கத்திற்கு  காரணம்

இயற்கையின் மடியா?

இல்லை தாயின் கூரைப்புடவையின்

கதகதப்பா?