புதன், 13 ஜனவரி, 2021

கொரானா தடுப்பூசி-விலை எங்கள் உயிரா?


கொரானா தடுப்பூசி போட்டுக்கொண்ட பாமரர்கள் இறக்கும் போது
முக்கியப்புள்ளிகள் உயிரோடு இருப்பது எங்ஙனம்?

உண்மையில் அவர்களுக்கு போடப்பட்டது கொரோனா ஊசி தான் என்பதற்கு என்ன ஆதாரம்?

இல்லாத நோய் வாராதிருக்க தடுப்பூசியா? 

யாரோ சில மருந்து குழுமங்கள் லாபம் சம்பாதிக்க விலை எங்கள் உயிரா ?


 

வியாழன், 7 ஜனவரி, 2021

களவாடிய கனவுகள்

 


இரக்க காட்டேரி

 

நீயே என் சிந்தனையில் இருக்கிறாயா

சிந்தை நீயாக இருக்கிறாயா

நாம்

இரண்டறக் கலந்த ஒன்றா

இரண்டாக‌ பிரிந்த ஒன்றா

இரண்டாகப் பிளந்த ஒன்றா

இரண்டாகப் பிறந்த வேறொன்றா        

இவள்  இருக்க

இருக்கும் நாழிகை

எல்லாம் இன்னிசைதான்... 

பேசும் மொழியெல்லாம்

தித்திப்பான

இன்னுயிர் தமிழ்தான்...

மனதில் எப்போதும்

மறக்கமுடியா – அவள்

ஞாபகம்தான்.

கண்ணன்  

பூமியில் இருந்து கொண்டே

உலகத்தை காட்டினானாம்

தன் செவ்வாய் திறந்து.

உன் நேரங்களை

விழுங்குகிறது

என் நேரம்

என்னேரமும்

என் எழுதுகோலின்

வற்றாத மை

எதையும் இரசிக்கும்

மையலிவளின்

வசீகரப் புன்னகை

சிந்தனையால்

இணைத்த இறைவி

இதே இனிமையை - இரங்கி

இறுதி வரைக்கும்

இசைந்தால்

இனிப்பாய் இசைப்பாள்

நாளும்.

இசைத்தாய் இவள் வசம்
சிறைவாசம் விரும்புகிறேன்...

ஆண்டுகள் பல ஆனாலும் சரி...

அன்பால் ஆளும் அரக்கியின்

இதயச்சிறையில்

இரக்க காட்டேரி

உன்னிடம் பேசும்போது

தமிழும் -தாவிக் குதித்து

வந்து கவிதையாய்

தாளமிடுகிறது

கடிகாரத்தின் நாடியை

நிறுத்திவிடு காலனே

உன்னைப் பார்க்கும்போது
வாழ்வில் புது நம்பிக்கை

நர்த்தனமிடுகிறது.

இருவர் நாம் சேர்ந்து

உலகை உழுது

அன்பை விதைத்து
மகிழ்ச்சியை

மகசூல் செய்வோம்...வா