சனி, 31 ஜூலை, 2021

பால் நிலா

 

நிலவு நழுவி 

பாலில் 

விழுந்ததோ ?

வியாழன், 29 ஜூலை, 2021

தையல்

 



நெஞ்சை 

கிழித்துச் சென்றது

அவள் பிரிவு:

தைத்துச் சென்றது 

அவள் நினைவு 


கஜ கொரானா

 


அன்று புயலில் நனைந்த 

புததகங்களை 

காய வைத்தோம்

இன்று

வெற்று காய்ச்சலுக்கே 

காணாது

தொலைத்தோம்

திங்கள், 19 ஜூலை, 2021

இந்த சாதி கருமாந்திரத்தை யாரு கண்டுபிடிச்சா


 அது என்னனுங்கண்ணா, இங்க நல்லகண்ணு மாதிரி மூத்த தலைவருங்க எல்லாம் இருக்கிறப்ப படத்தை தொறக்க டெல்லில இருந்து ஆள கூட்டி வரேன்னுறீங்க

    மணியா.. அந்தாளு யாரு. என்ன சாதி?அவர கூப்பிட்டு வந்தா தான் நாளைக்கு "சமதர்மத்தை காத்தோம்; சாதி அடிவாரத்தை பேர்த்தோம்"னு கதை விடலாம்..இந்த நா___ளும் நம்பிட்டு கைதட்டுவானுங்க

சனி, 10 ஜூலை, 2021

இயற்கை


 இயற்கை 


எல்லாவற்றையும்

தன்னுள்ளே

செரிக்கும் மண் 

விதையை மட்டும்

துப்புகிறது 

மரமாக...!

கடல்

 

கதிரவனைக் காணாது

அம்புலி

அழுதழுது

வடித்த கண்ணீரோ ?