இன்று தொலைக்காட்சியை புரட்டி பார்த்துக்கொண்டிருந்த பொழுது இந்த காட்சி கண்ணில் பட்டது
#சண்டக்கோழி 2
விசாலின் அரசியல் ஆசைக்கு தமிழர்கள் முடிவு கட்டுவதற்கு முன் 2018இல் வந்தது இந்த படம். இறுதிக் காட்சியில் கதாநாயகன் ஒருவனை அடித்து தர தரவென நாயை இழுத்துபோவது போல காட்சி அமைத்து இருப்பார்கள். அடிவாங்கியவன் கட்டி இருக்கும் வேட்டியின் நிறம்= தமிழர்களாகிய நாம் தொன்று தொட்டு முருகனை வேண்டி நோன்பிருக்கும் நாள்களில் கட்டி இருக்கும் பச்சை நிற வேட்டி: விவசாயிகள் அணிந்து இருப்பது: இப்போது சமீபத்தில் கூட வீரத்தமிழர் முன்னணியினர் முருகன் விழாக்களில் கட்டிக்கொள்கிறார்கள்.
இது ஏதோ தற்செயல் நிகழ்வு என்று நாம் கடந்து செல்ல முடியாது. இதை இயக்கியவனும் நடித்தவனும் தெலுங்கன். தமிழர்கள் மீது எவ்வளவு வன்மம் இருந்தால் இப்படி ஒரு காட்சியை வடிவமைத்து இருப்பார்கள் இவர்கள்?
இது போன்ற படங்களை எல்லாம் கலை என்று சப்பு கொட்டாமல் தமிழர்களான யுவன் சங்கர் ராஜாவும், ராஜ்கிரணும் தவிர்க்க வேண்டும் இனி வரும் காலங்களில்
- தமிழ்மது