vocud.hrce@tn.gov.in
ஐயா வணக்கம்
தில்லை நடராசர் கோயில் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டது. அதை தீட்சிதர்கள் இன்று ஆக்கிரமித்துக் கொண்டு அதை தங்கள் உடைமை போல எண்ணி மக்கள் காணிக்கைகளை கொள்ளை அடிப்பதோடு மட்டும் அல்லாமல், அங்கு வரும் பக்தர்களின் மீது சாதி வழி தீண்டாமை புகுத்துவதும், தமிழில் தேவாரம் பாடுபவர்களை அராஜகம் செய்து விரட்டுவதும், பாட விடாமல் தடுப்பதும் என்று போக்கிலித் தனம் செய்து வருகிறார்கள். காவல் துறை பாதுகாப்போடு தான் அங்கு கடவுளுக்கு தமிழில் பாடும் நிலை இருக்கிறது. வருண பேதம் இல்லாத தமிழ் நாட்டில், சமத்துவம் நிலவுவதாக சொல்லிக் கொள்ளும் தமிழ்நாட்டில் பெண்களை தீட்சிதர்கள் கேலி கிண்டல் செய்வதும், சாதி பெயரை சொல்லி சிறுமை படுத்தும் கொடுமைகளும் நடக்கிறது.
எனவே தில்லை கோயிலை உடனடியாக தமிழ்நாடு அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தமிழ் வழிபாட்டிற்கும் சமூக நீதிக்கும் வழி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு
வரவேற்கிறோம்.
பதிலளிநீக்குமின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்.
பதிலளிநீக்குநன்றி.
நன்றி ஐயா
நீக்கு