ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

தமிழினத்தை அழித்த சிங்கள பயங்கரவாதிகள் பட்டியல்

சிறிலங்காவின் அரச பயங்கரவாதம்: 6000 போர்க்குற்றவாளிகளின் விபரங்கள் வெளியானது

தமிழர்களால் முன்னெடுத்து வரப்படுகின்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத முத்திரை குத்தி, பன்னாட்டுச் சமூகத்தின் முன் ஒட்டுமொத்த தமிழர்களையும் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் நோக்கில் அண்மையில் சிறிலங்காவின் பேரினவாத அரசு, தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடிவரும் பல தமிழ் அமைப்புக்களைத் தீவிரவாத அமைப்புக்களாக பட்டியலிட்டுள்ளது.
அதனோடு நின்றுவிடாது சிறிலங்காவின் வர்த்தமானியில் 424 தமிழர்களின் பெயர்களை வெளியிட்டு, அவர்கள் தமது பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த சொந்தமண்ணில் வாழும் அல்லது நடமாடும் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
உண்மையில் யார் பங்கரவாதிகள் என்பதை பன்னாட்டுச் சமூகம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்த நூற்றாண்டின் பாரிய கொடூர இனப்படுகொலையை 2005 இலிருந்து 2009 வரை சம்பூரிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை அரங்கேற்றி அதன் தொடர்ச்சியாக இன்றும்
தமிழர்களைத் திட்டமிட்டு படுகொலை செய்துவரும் சிறிலங்காவின் பேரினவாத அரச பயங்கரவாதம், 2005ஆம் ஆண்டு இனப்படுகொலைச் சூத்திரதாரி மகிந்த ராஜபக்சவின் பணிப்பில்
கோத்தபாயவின் நேரடி நெறிப்படுத்தலிலும், சிறிலங்காவின் முப்படைகளினது தளபதிகளினது வழிநடத்தலிலும் 6000 காடைச் சிங்களவர்கள் அதன் கூலிப் பட்டாளங்களுக்குள் இருந்து தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களே சம்பூரிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழினத்தை மிகக்கோடூரமாகப் படுகொலை செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களுக்கு இதற்கென சிறப்புப் பயிற்சிகளும், ஆலோசனைகளும், திட்டங்களும் வழங்கப்பட்டு சிறிலங்காவின் அனைத்து கூலிப்பட்டாளங்களின் தொகுதிகளிற்குள்ளும் விடப்பட்டனர்.
இறுதிக்கட்டப் போரில் அகப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் எனப்பாராது தமது வக்கிரத்தை தீர்த்து படுகொலை செய்தார்கள்.
இவ்வாறு மிருகத்தனமாக, மனித உயிர்களைப் பலியெடுத்த சிறிலங்காவின் அரச பயங்கரவாதிகள் 6000 பேர்களினதும் முழுவிபரமும் எம்மால் பன்னாட்டுச் சமூகத்தின் கவனத்திற்கு விடப்படுகின்றது.
விரைவில் இவர்கள் எப்படி இனப்படுகொலை செய்வதற்கு பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்ற வீடியோ ஆதாரமும் எம்மால் கவனத்திற்கு கொண்டுவரப்படும் என பிரித்தானியர் தமிழர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர்க்குற்றவாளிகளின் விபரங்களை வாசிக்க இங்கே அழுத்தவும்
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyESaLXkrz.html#sthash.SNarUxgy.dpuf

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

தமிழக தேர்தல் களத்தில் ஈழத்தின் தாக்கம்

கடந்த வாரம் மக்கள் தொ.கா. வில் மேற்கண்ட தலைப்பு வைத்து ஒரு நேரடி விவாதம் நடைபெற்றது.

தனி ஈழத்தை ஆதரிக்கமாட்டோம் என ராஜபக்சேவின் இன்னொரு ஆரிய அடி வருடியான பாஜக தமிழகத்திலேயே வந்து கொக்கரித்துவிட்டு சென்ற பிறகு இந்த விவாதம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

களவானி காங்கிரசின் அன்னக்கை பொன்.கிருஷ்ணமூர்த்தி கூறுகிறான்..."தமிழக தேர்தலில் ஈழ உணர்வு பிரதிபலிக்காது. அப்படி இருந்திருந்தால் 2011 சட்டமன்ற தேர்தலில் விடுதலைப் புலிகளின் எதிரியான ஜெயலலிதா அருதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா?"

அடிப்படை அரிச்சுவடி தெரியாத அந்த கிழட்டு மூதேவிக்கு ஒன்று சொல்கிறேன். தமிழக மக்கள் யாரும் ஜெயலலிதா ஆட்சிக்கு வரவேண்டும் என்று வாக்களிக்கவில்லை. காங்கிரசு மற்றும் அதனுடன் கூட்டணி வைத்து இனப் படுகொலையில் ஈடுபட்ட திமுகவை பாடையில் ஏற்றவேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வீறுகொண்டு எழுந்ததின் விளைவு தான் எதிர்க் கட்சி வரிசையில் கூட அமர தகுதி அற்ற நிலைக்கு திமுக தள்ளப்பட்டதும்,போட்டியிட்ட 63 தொகுதிகளில் காங்கிரசு 58இல் மண்ணைக் கவ்வியதும்.

சுப்ரமணிய சாமி பாஜகவில் புகுந்து உள்ளிருந்து மாமா வேலை செய்ய ஆரம்பித்துவிட்டான். அதன் எதிரொலி தான் வெங்கைய நாயுடுவின் அறிக்கை. ஒரு வேளை தமிழ்நாட்டில் பாஜக வென்றால் ஈழத்தை சொல்லி நாங்கள் வாக்கு கேட்கவில்லை எனக் கூறி காங்கிரசு விட்டுச் சென்ற இன அழிப்பு வேலையை அவர்கள் தொடரலாம் என்பதற்கு அத்தாட்சி பெறவே, ஈழ உணர்வு தமிழக மக்களிடம் இல்லை என்ற மாயையை உருவாக்க நினைக்கிறார்கள்.

தனி ஈழத்தை ஆதரிக்காத பாஜகவுடன் கூட்டு சேர்ந்து விட்டோமே,தனது மகன் வெற்றி பெறுவானா, அமைச்சர் பதவி கிட்டுமா என்கிற கவலை பாமகவிற்கு வந்துவிட்டது. அதனால் தான் அவர்களும் ஈழப் பிரச்சனை தமிழகத்தில் தேர்தல் முடிவை பாதிக்காது என்று தங்களை ஆறுதல் செய்து கொள்ள நினைக்கிறார்கள்.

மக்களே..தமிழர்களின் நலனைப் பொருத்தவரை காங்கிரசும், பாஜகவும், மார்க்சிஸ்டும்,ஆம் ஆத்மியும் ஒன்று தான். அவர்கள் எப்போதும் நமது நலனுக்கு எதிராக தான் நிற்பார்கள். கேரளாவிலும், கர்நாடகத்திலும் கெயில் குழாய் நெடுஞ்சாலை வழியே செல்கிறது.ஆனால் தமிழகத்தில் விளை நிலங்கள் வழியே. அவர்கள் வேண்டாம் என்று தூக்கி எறிந்த அணு உலை..நமது இயற்கை எழில் சூழ்ந்த திருநெல்வேலி,கன்னியாகுமரி கடற்கரையில். 

நம்மை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களியுங்கள். எதிரிகள் களத்தில் இல்லாத தொகுதியில் நோட்டோவை பயன்படுத்துங்கள்.


ஞாயிறு, 23 மார்ச், 2014

புதிய தலைமுறை வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!!!

காங்கிரசு கட்சி பண வீழ்ச்சியை ஒன்றும் செய்யவில்லை....எங்களுக்கு வாக்களியுங்கள்- பாஜக

ஈழத்தமிழர்களை கொத்து கொத்தாக அழித்த போது திமுக என்ன செய்தது..எங்களுக்கு வாக்களியுங்கள்- அதிமுக

ஆட்சிக்கு வந்தவுடன் மின்சாரம் சீரடையும் என சொன்னார்கள்.செய்தார்களா..எங்களுக்கு வாக்கு போடுங்கள்-திமுக

பாஜக  ஆண்ட காலத்தில் பொருளாதாரம் சீரடைய என்ன செய்தார்கள்-உங்கள் வாக்கு எங்களுக்கே-காங்கிரசு.
-----
இப்படி ஒன்றுமே செய்யாமல்,எதிராளியின் அதிருப்தியை தனக்கு சாதகமாக்கி வாக்கு பிச்சை கேட்பதும்,வாக்கு வழிப்பறி நடப்பதும் கேடுகெட்ட இந்திய நாட்டில் மட்டும் தான்.

இளைய தலைமுறையே...ஊழல் புரை
யோடிப்போன எதேச்சாதிகார இந்தியாவில் உங்கள் பொன்னான வாக்கை 49 O க்கு போட்டு உங்கள் அதிருப்தியை பதிவு செய்யுங்கள்.