ஞாயிறு, 6 டிசம்பர், 2020

காகிதப்பூ

நீ கைதேர்ந்த

விவசாயி

மலட்டு நிலத்திலும்

மல்லிகைப்பூ வாசம்

கண்ணீரில் கரைந்த

காகிதம்

என்னுள் ஒளிந்த ஓவியம்

சமரில் பூத்த சிறு அலர்

வைகறைத் துயில்

சில்வண்டின் சிலுசிலிர்ப்பு

கவிதையை பிடிக்க வைத்த 

புதிர் நீ 

கண்ணின்  ஒளி 

இறுதியாக 

கண்ணீரின் வலி 

 

குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?





 குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?

அள்ளி அணைக்க 

துடிக்கிறது 

பிள்ளை  மனம் .. 

ஆலமரத்தை 




வெள்ளி, 4 டிசம்பர், 2020

இன்பத் தமிழ் -சேக்கிழார் உவமை நயம்

அறுபது மூவர் வாழ்க்கை வரலாற்றை ஒரு வரலாற்று அறிஞராக வடவேங்கடம் முதல் தென்குமரி வரை ஆய்வு செய்த ஆய்வறிஞர்- தில்லைச் சிற்றம்பலத்தை பொன்னால் வேய்ந்த 2ஆம் குலோத்துங்க சோழனின் முதன்மைஅமைச்சர் தெய்வச் சேக்கிழார் அவர்கள் பெரிய புராணத்தில் = திருநின்ற சருக்கத்தில் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணத்தில் எனை ஈர்த்த அழகிய கற்பனை நயமிக்க பாடல்
மலர்ச் சோலையின் மரங்கள் அவள் கரங்கள்.
அவற்றைச் சுற்றிச் சூழும் கருவண்டு குலம், அவள் கரங்களில் குலுங்கும் நீல வளையல்களாம், 
மரங்களின் செந்தளிர்கள் அவள் விரல்கள்.
நகங்கள் தளிர்களில் நீண்டு ஒளிரும் நகங்கள்.
மரங்கள் வானளாவி ஓங்குதல், நிலமகள் தன் கையை நீட்டி வானுறு மதி எனும் கண்ணாடியை அணைத்தல் தன் மெய்யொளியின் நிழற்காணுதல் பொருட்டாம்.









வியாழன், 26 நவம்பர், 2020

தலைவர்66

தமிழினத்தின் ஒரே தலைவன்
தரணி போற்றும் மாமனிதன்
வாழ்க பல்லாண்டு

எடுத்தவுடன் ஆயுதத்தை எந்திடவில்லை. போதுமான அவகாசம் கொடுத்தார் சமாதானத்திற்கு. ஆயுதத்தை பன்னாட்டு உலகத்தின் முன்னிலையில் சமர்ப்பித்து நிராயுதபாணியாக நின்றார் இந்த வஞ்சக உலகத்தை நம்பி.

இந்தியத்தின் சூழ்ச்சியால் உலகமே ஓர் அணியில் திரண்டு 2009இல் எங்கள் மக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட போது கூட இயன்றவரை காக்க முயன்றது புலிகள் அமைப்பு. அப்பாவிகளை கொன்ற அரசாங்கம் செய்தது சரியாம். காக்க முற்பட்ட புலிகள் தீவிரவாதிகளாம்.










புதன், 25 நவம்பர், 2020

கொரானா சதியா இல்லை வியாதியா?


கொரானா காலத்தில் மட்டும் ப்ளூம்பெர்க் பட்டியலில் உள்ள உலக பணக்காரர்கள் சொத்துமதிப்பு 23% உயர்ந்துள்ளது. முதல் 500பேர் 96லட்சம் கோடி சொத்துக்கள் சேகரித்து உள்ளனர். இப்ப சொல்லு...கொரானா ஏழைகளை ஏழையாக்கும் நோயா? லட்சாதிபதிகளை கோடீஸ்வரனாக்கும் சதியா?