தமிழ்மது
"தமிழ்மது" முற்றிலும் நான் தமிழன்
செவ்வாய், 25 மார்ச், 2025
மனோஜ் மறைவு- ஆழ்ந்த இரங்கல்

ஞாயிறு, 23 மார்ச், 2025
தமிழ்நாட்டிற்கான தனித்துவமான கல்விக்கொள்கை நோக்கி - லெ ஜவஹர் நேசன்
புதிய கல்விக் கொள்கை (New Education Policy) என்பதை இன்றைக்கு தேசிய கல்விக் கொள்கையாக (National Education Policy) திட்டமிட்டு சங்பரிவார் வழிகாட்டலுடன் அமல்படுத்த ஒன்றிய அரசால் முடியும்போது ஏன் தமிழ்நாடு தனக்கென தனித் தன்மை உள்ள கல்விக் கொள்கையை உருவாக்க முடியாது என்கின்ற ஒற்றைக் கேள்வியுடன் தமிழ்நாடு எங்கும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடையே குழு விவாதம் நடத்தி அதன் மூலமாக அரசுக்கு ஓர் அழுத்தம் கொடுத்து இந்த கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்கின்ற மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டுள்ளார் கல்வியாளர் பேராசிரியர் திரு லெ ஜவஹர்நேசன் அவர்கள். அதன் அடிப்படையில் தமிழ்நாடு அறிவியல் கழகம், அறிவொளி இயக்கம், த. மு. எ. க. ச கூட்டு சேர்ந்து நாகப்பட்டினத்தில் 22. 3.2025 நடத்திய கருத்தரங்கில் பங்கேற்று அவர் கூறிய கருத்துக்கள் என்பது அனைத்து கல்வியாளர்களும் பொதுமக்களும் மாணவர்களும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் பாடத்திட்ட வகுப்பாளர்களும் கேட்டு விழிப்பு பெற வேண்டிய, இந்த சமூகத்தின் பேசு பொருளாக மாற வேண்டிய கருத்தியல்.
நீட் மனிதகுல பகைவன்: நீட்டை விலக்குவோம; நீட் மருத்துவ கல்விக்கும், சேவைக்கும் எதிராக உள்ளது என்பதற்காக அமைக்கப்பட்ட ஏ கே ராஜன் குழுவில் பங்கேற்று ஆணித்தரமான வாதங்களை புள்ளிவிவரங்களோடு அவர் சமர்ப்பித்த அறிக்கை, 12 மாநிலங்களுக்கு மொழி பெயர்த்து அனுப்பப்பட்டு மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களால் பெரிதும் வரவேற்கப்பட்டதோடு, மருத்துவ மேற்படிப்பில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான 50 % இடத்தினை உறுதி செய்ய அந்த அறிக்கை எவ்விதம் காரணியாக இருந்தது என்பதை விளக்கினார். அந்த அறிக்கையை 30 நாளில் தயாரிக்க தன்னை எவ்வளவு வருத்திக் கொண்டார் என்பதையும், கல்விக் கொள்கை உருவாக்கிட இனி கிராமம் தோறும் செல்வேன் என்று அவர் சொல்வதை கேட்கும்போது, வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் வருந்தி அழைத்தும் அந்த வேலைகளை உதறித்தள்ளி தான் பிறந்த மண்ணுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற அவரது உயரிய கொள்கை ஒரு மு. வ.. திருவிக, வ. ஊ. சி., பாரதிதாசன் எல்லாம் ஏன் இப்போது பிறப்பது இல்லை என்கிற எனது ஆதங்கம் தவறு..இதோ ஜவஹர்நேசன், மன்னர்மன்னன் போன்றவர்கள் உருவில் இன்றும் இருக்கிறார்கள்.. ஆனால் அவர்கள் மறைக்கப்படுகிறார்கள், அவர்கள் வாழும்போது மக்கள் அவர்களை புரிந்துகொண்டு கொண்டாடுவது இல்லை, மாறாக பாலகிருஷ்ணன், லியோனி, நாகசாமி போன்றவர்களை உயர் பதவியில் வைத்து மொழியை சிதைத்து தமிழினத்தை அழித்து அடிமை இனமாகவே வைதிருப்போம் என்கிற மிகப்பெரிய சதிதிட்டத்தில் திராவிட அரசாங்கங்கள் இருக்கின்றன என்பது விளங்கியது.
அவருடைய சொற்பொழிவின் மைய புள்ளி என்பது இந்த நடுவண் அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சனாதனம், பஞ்சகோஷம் என்கிற வேத விசங்களை உள்ளடக்கி ஒரு தத்துவத்தை எடுத்து வருகின்றார்கள்; அது யாருடைய பிறந்தநாளை நாம் ஆசிரியர் நாளாக கொண்டாடுகிறோமோ அந்த ராதாகிருஷணன் போட்ட விடத்தின் நீட்சி என்று கூறியது யாருக்கும் அஞ்சாமல் தொடர்ந்து இந்த சமூகத்தின் மீடு கட்டமைக்கப்பட்ட மூட நம்பிக்கைகளை தகர்த்து எறியும் அவரது துணிவு பாராட்டுக்குரியது.
அந்த புதிய கல்விக் கொள்கையை இந்த மக்கள், இந்த தமிழ்நாடு அரசு எப்படி எதிர்க்க வேண்டும் என்றால் அதைவிட சிறந்த கொள்கை நம்மிடம் இருக்கிறது என்று நிரூபித்தால் மட்டுமே அது சாத்தியப்படும். அப்படிப்பட்ட கொள்கையை நாம் இங்கு முன்வைக்கின்றோமா என்றால் அதற்கு பதில் இல்லை: நாம் நம்மை முன்னேறிய சீனர்களோடு ஒப்பிட்டு முன்னேற வேண்டும்; ஆனால் இந்த தமிழக அரசு பின்தங்கிய பீகாரோடு தமிழ்நாட்டை ஒப்பிட்டு புளகாங்கிதம் அடைகிறது" என்ற கூற்று நிதர்சன உண்மை. அந்த புதிய தனித்துவமான கல்விக் கொள்கையை சாத்தியப்படுத்த வேண்டும் என்றால் இனி அரசாங்கத்தை நம்பி பயனில்லை என்பது அவருடைய பேச்சில் தொனித்தது. இது ஒரு ஜல்லிக்கட்டு புரட்சி போல ஸ்டெர்லைட் ஆலை புரட்சி போல மக்கள் கட்சி, சாதி இவைகளை கடந்து ஒன்று திரண்டு மக்கள் குரலாக எதிரொலிக்க வேண்டும்:அதற்காக தான் ஊர் ஊராக பயணம் செய்து இது ஏன் தேவை என்பதை பற்றி கூறுவேன் என்று அவர் பேசியது எப்படிப்பட்ட ஒரு மனிதரை இந்த தமிழ்நாடு மக்கள் முழுமையாக அறிந்து கொள்ளவில்லையே என்கின்ற ஒரு வேதனை தோன்றியது.
அவர் உரை முடிந்த பிறகு குழு விவாதம் நடத்தப்பட்டது. மூன்று குழுக்களின் கேள்விகள் தொகுக்கப்பட்டு அவருக்கு வாசிக்கப்பட்டது. அதில் "நீட் தேர்வு தேவை; பாடத்திட்டதில் மட்டும் மாற்றம் தேவை, தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி உதவித் தொகை தேவையா" என்ற வலதுசாரி சிந்தனைக்கு அவர் அளித்த பதிலில் நீட் பயிற்சி வகுப்புகளின் கட்டணக் கொள்ளை, மருத்துவ கல்லூரி சேர்ந்தவர்களின் 77 விழுக்காடு பேர் நீட் தேர்வை 2,3 முறை எழுதியவர்கள், Lindon B Johnson அமெரிக்காவில் பின்தங்கிய கருப்பினர்களுக்காக கொண்டு வந்த சீர்திருத்தங்கள் பற்றி விளக்கி கூறி கேள்வி கேட்டவரை தவறை உணரவைத்த பாங்கு அவர் வாதத் திறமையை பறை சாற்றியது.
நிகழ்ச்சி முடிவில் நண்பர் ஒருவர் "இவர் சொல்கிறபடி மக்கள் கிளர்ந்து எழுந்து மாற்றத்தை உருவாக்குவார்களா, சாத்தியப்படுமா" என்று என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். 15 ஆம் தேதி ஆனால் தங்களுக்கு உரிமைத் தொகை போடப்பட்டு விட்டதா என்று வங்கிக்கு முட்டி மோதும் இலவசங்களை நம்பி வாழும் மக்களிடம் மாற்றம் உருவாவது கடினம் தான், ஆனால் புரட்சி என்பது ஒரு விழுக்காட்டு மக்களால் உண்டாவது. நம்பிக்கையோடு பயணிப்போம் என்று பதில் சொன்னேன்
புதன், 28 பிப்ரவரி, 2024
போய் வராதே சாந்தா
முந்திக் கொண்டது
இயற்கை
ஆரியமும் திராவிடமும்
ஏக்கப் பெருமூச்சு
முப்பத்து மூன்று ஆண்டுகள்
கழித்து நாளை
விடுவிப்பதற்குள்
அந்தாளை முந்திக் கொன்றது
இயற்கை
சாந்தனின் தாயே
கையாலாகாத தமிழனின் மீது
சாபம் விட்டுவிடாதே
பிடி -சிறு வயது பாலகனாக
உன்னை விட்டுச் சென்றவன்
உனக்காக விட்டுச் சென்ற
ஒரு பிடி சாம்பலை
ஏழு இளைஞர்களை விடுவிக்கச்
சொல்லி போராடினோம்.
இரக்கமுள்ள இந்தியா
ஏழு முதியவர்களை விடுவித்தது
விட்டேனா பார். என இரக்கத்தை
என திராவிடம் அதில் நாலை
பறித்து
தமிழன் ஒருவனை நரபலி
இட்டது இத்தாலிய காளிக்கு
இன்னும்
திராவிட பஜனையில்
தமிழன்
-தமிழ்மது
#சாந்தன்
#கணணீர் வணக்கம்
செவ்வாய், 3 ஜனவரி, 2023
தம்பியருள் சிறந்தவர் கும்பகர்ணனே - தமிழ்மது