நீங்கள் உயிரை மாய்ப்பதாக இருந்தால் ஒரு தனுவாக மாறுங்கள். கரும்புலிகள் நூறு எதிரிகளை அழித்துவிட்டு தன்னை அழித்துகொள்வார்கள். உயிரை மாய்த்துகொள்ள நினைத்தால் தனுவாக மாறுங்கள் கரும்புலியாக மாறுங்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆவேசமாக கூறியுள்ளார்.
ராஜபக்சே வருகையை எதிர்த்து சேலத்தில் தீக்குளித்து உயிர்நீத்த ஆட்டோ டிரைவர் விஜய்ராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு திருமாவளவன் பேசுகையில்,
எங்கள் பேச்சை கேட்டு தான் தம்பி விஜயராஜ் உணர்வு பெற்றதாக சொல்கிறார்கள். நம்முடைய பேசும் எழுத்தும் எதிரிகளை வீழ்த்தவில்லையே ஆற்றாமையில் தன்னை மாய்த்து கொள்கிற தோழர்களை வீழ்துகிறதே என்ற வேதனை என்னை வாட்டுகிறது.
நாம் உணர்ச்சிவசப்படுகிறோம். வலிமை உள்ளவனை எதிர்க்கும் போது அவன் எந்த தளத்தில் வலிமையாக உள்ளான் என ஆராய வேண்டும். எங்காவது பார்ப்பனர்கள் தீக்குளித்து பார்த்துள்ளீரா?! அவர்கள் யாரும் தீ குளிப்பதில்லை நாம் தான் செய்கிறோம்.
எண்ணிக்கை என்பது ஆள் வலிமை அல்ல ஒற்றுமையே வலிமை நாம் தனி தனி குழுக்களாக சிதறி உள்ளோம். இனி விஜயராஜ் போன்றவர்கள் தீக்குளித்தால் இனி வரமாட்டான் திருமாவளவன் என சொல்லலாமா என தோன்றுகிறது. இது ஊக்கப்படுத்துவது போல் ஆகிறது உயிர் தியாகம் அளப்பரியது; மதிக்கிறோம் தலை வணங்குகிறோம்.
எண்ணிக்கை என்பது ஆள் வலிமை அல்ல ஒற்றுமையே வலிமை நாம் தனி தனி குழுக்களாக சிதறி உள்ளோம். இனி விஜயராஜ் போன்றவர்கள் தீக்குளித்தால் இனி வரமாட்டான் திருமாவளவன் என சொல்லலாமா என தோன்றுகிறது. இது ஊக்கப்படுத்துவது போல் ஆகிறது உயிர் தியாகம் அளப்பரியது; மதிக்கிறோம் தலை வணங்குகிறோம்.
ஆனாலும் இது போல் தன்னையே மாயத்துகொள்வது ஏற்புடையது அல்ல. கரும்புலிகள் நூறு எதிரிகளை அழித்துவிட்டு தன்னை அழித்துகொள்வார்கள். உயிரை மாய்த்துகொள்ள நினைத்தால் தனுவாக மாறுங்கள் கரும்புலியாக மாறுங்கள்.
நம்மை அழித்துக்கொள்வது மேலும் நம் எண்ணிக்கையை குறைக்கும். ஆதரவு சக்திகள் கை கோர்க்க வேண்டும். ஆறரை கோடி தமிழர்களில் ஆறு லட்சம் தமிழர்கள் கூட ஒன்று சேர முடியவில்லையே...வேதனை.
இந்தியாவில் காங்கிரஸ் வேறு, பாஜக வேறல்ல காங்கிரஸ் -கதர் போட்ட காவியினர். காவி போட்ட கதர் பாஜக...இவர்கள் இருவருமே ஈழ விசயத்தில் எதிரானவர்கள்..
நாம் வெல்ல இரெண்டே வழி தான். ஒன்று எதிர்த்து நின்று மோதி எதிரியை வீழ்த்துவது. மற்றொன்று அவனுடன் தோழமை பாராட்டி நட்பு பாராட்டி புரிய வைத்து நம் எண்ணத்திற்கு உடன்பட வைப்பது அந்த வகையில் நாம் இந்தியாவை பகைத்துக்கொண்டு ஈழத்தை சாத்தியபடுத்த இயலாது.
எனவே தோழர்களே இனி நாம் உணர்ச்சி சார்ந்து மட்டும் இயங்காமல் அறிவு சார்ந்து இயங்கி ஒன்றுபடும் விசயத்தில் நாம் ஒன்றுபட்டு எதிரியை வீழ்த்துவோம். இனி யாரும் தங்களை மாய்த்துகொள்ள வேண்டாம் என்று கூறினார் திருமாவளவன்.
நன்றி:TT http://tamil.oneindia.in
நன்றி:TT http://tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக