ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

முகநூலை தவிர்க்க சில வழிகள்

சமூக விழிப்புணர்வு, நாட்டு நடப்பு தெரிந்து கொள்ளல் போன்ற சில நேர்மறை பயன்பாடுகள் இருந்தாலும், சமூக வலைத்தளப் பயன்பாடு என்பது நமது நேரத்தை விழுங்கும் மிகப்பெரிய திமிங்கிலமாக உள்ளது.

நான் இனி முகநூலுக்கு வரமாட்டேன் என்று சொல்பவர்கள் அதை விட்டுச் சென்ற வரலாறு மிகக் குறைவு. இப்படி எதிர்மறை தீர்மானங்களை நம் மனதின் ஆணவம் ஒரு போதும் ஆதரித்து அடிபணியாது. இப்படி சொல்வதற்கு பதிலாக நான் தமிழர் வரலாற்றை தேடப் போகிறேன், தொல்காப்பியத்தின் ரகசியத்தை பருகப் போகிறேன், தமிழ் இலக்கியங்கள் சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் படிக்கப் போகிறேன் என்று முயலுங்கள். தானாக மனம் அதில் ஈடுபடும். உங்களுக்கு அதன் பிறகு முகநூலுக்கு வரும் நேரம் மட்டுப்படும். நீங்கள் கற்கிற விசயத்தை தோழர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இது மற்றவர்களுக்கும் வாசிப்பின் மீதானா ஆர்வத்தை உண்டாக்கும் இப்படித் தான் நான் ஆரம்பித்தேன். 4ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நூலான இவன் ஒரு வரலாறு என்கிற தேசியத் தலைவர் பற்றிய கட்டுரைத் தொகுப்பை படிக்க ஆரம்பித்தேன். அது என்னை மேலும் மேலும் கற்க தூண்டுகிறது. முகநூல், பகிரிக்க்கு செல்கிற நேரம் வேறு ஏதாச்சும் படிக்கலாமே என்று என் மனம் எனக்கு அறிவுரை சொல்கிறது.

நீங்களும் முயலுங்களேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக