#இளையராஜா என்னும் மாபெரும் தலைமை. தமிழினத்தின் பெருமைமிகு அடையாளம்.
இந்த உலக அரங்கில் தமிழினத்திற்கு என்ற வரலாற்றில் அவருக்கான பக்கங்கள் மானுடத்தின்
கலை நுணுக்கங்கள்.
தமிழர்களைப் பிரித்து நம் கண்ணை நம் கையாலேயே குத்த நடக்கும் ஆரிய
சூழ்ச்சியை முறியடித்து தமிழினப் பெருமைகளோடு கை கோர்ப்போம்
#தமிழ்மது
24/04/2022
மேற்கண்ட பதிவை இளையராஜா குழுவில் பதிந்திருந்தேன்.
https://www.facebook.com/groups/meastroilayaraja/posts/10161966132167516/?comment_id=10161967620157516¬if_id=1650745127769019¬if_t=group_comment&ref=notif
இசைஞானிக்கு சமூக்கக்டமை என்றால் என்ன என்று எடுத்துச் சொல்லுங்கள் என்று ஒருவர் கருத்து போட்டிருந்தார்.
ஏது..காட்டை காக்கும் தமிழின பூர்வ குடிகள் குறவர் இனத்தவருக்கும், மகாராட்டிரத்தில் இருந்து குருவி சுட வந்தவர்களுக்கும் வேறுபாடு தெரியாமல் அவர்களை அழைத்தும், அவர்கள் இல்லத்திற்கு சென்றும் சமூக நீதி நாடகம், மாணவர்களை அழைத்து மெகா சீரியல் செய்வது தான் சமூக கடமையா. இல்லை,, நாட்டை கூறு போட்டு கம்பெனிக்காரனுக்கு விற்றுவிட்டு வார்கோலை பிடித்து தூய்மை செய்வதாக நாடகம் ஆடுகிறார்களே. அதுவா?
சமூகக் கடமை என்றால் என்ன என்று வாக்குக்கு காசு வாங்கி தங்கள் உரிமைகளை விற்கும், வாங்கும் இவர்களுக்கு தான் தமிழ்த் தேசியர்கள் நாங்கள் பாடம் நடத்த வேண்டும்.
தமிழ் திரைத்துறையில் இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்று திராவிட போர்வையில் தெலுங்கர்கள் ஆதிக்கம் மேலோங்கி இருந்த போது (காரணம் 1920 தொடங்கி இன்று வரை வேற்று இனத்தாரை ஆள வைத்து அழுது கொண்டு இருக்கும் தமிழினம் https://en.wikipedia.org/wiki/List_of_chief_ministers_of_Tamil_Nadu ) தமிழர்கள் வெளிச்சத்திற்கு வருவதற்கான எல்லா கதவுகளும் அடைபட்டு கிடந்த போது தன் திறமையால் மேலே வந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அவர் வந்த பிறகு தான் பல திறமையான இயக்குனர்கள், நடிகர்கள் நம்பிக்கையுடன் வெற்றிபெறுவோம் என்று கோவை, மதுரை, திருப்பூர், ஈரோடிலிருந்து எல்லாம் சென்னைக்கு லாரி ஏறி (திருட்டு ரயில் அல்ல) வந்தார்கள்.
தான் உச்சத்தை தொட்ட போதும் தெலுங்கு மலையாள மக்களை அரவணைத்து தான் சென்றார் இசைஞானி. திறமை கொண்டவர்களை ஜென்சி, ஸ்வர்ணலதா, மனோ என்று மற்ற இன மக்களுக்கு வாழ்வளித்தார். அது தான் தமிழர் தன்மை. அதே நேரத்தில் பல தமிழ் இனத்தவர்களை அவர் கரையேற்றவும் செய்தார். சமூகப் பொறுப்பு என்பது தம்பட்டம் அடித்துக் கொண்டு செய்வது அல்ல. உள்ளே இருந்து சத்தம் இல்லாமல் புரட்சி செய்தவர். அதை அவரால் முன்னுக்கு வந்த கலைஞர்கள் நன்கு அறிவார்கள்.
தங்கள் இன ஆதிக்கத்தை ஆட்டம் காண வைத்துவிட்டார் என்கிற ஐம்பது ஆண்டு காலமாக உள்ளுக்குள்ளேயே பொருமிக்கொண்டு எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நரிகள் உறங்கிக் கிடக்கின்றன தமிழினப் போர்வையில் என்பதை இந்த தருணம் நன்றாக உணர்த்துகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக