செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

ஸ்தம்பித்தது காரைக்கால் மீனவர்கள் போராட்டத்தால்..

சிங்கள நாய்களால் மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை ஆட்சேபித்து 31 சனவரி 2011 முழுமையான கடை அடைப்பு அறிவிக்கப்பட்டது காரைக்கால் மீனவர்களால். பேருந்து உட்பட கனரக வாகனங்கள் எதுவும் ஒரு அங்குலம் கூட நகரமுடியாமல் பந்த் நடந்தது. சிறு பெட்டிக் கடைகள் கூட திறக்கப்படவில்லை. போராட்டம் மாபெரும் வெற்றி அடைந்தது. பரவலாக,முன்னதாக அறிவிக்கப்படாத காரணத்தால் பள்ளிக் குழந்தைகளும், பணிக்குச் செல்பர்களும் சற்று சிரமப்பட்டனர். எவன் செத்தால் எனக்கென்ன என்று இருந்த மக்களிடையே இது நிச்சயம் ஒரு விழிப்புணர்வை கொண்டு வந்திருக்கும் என்றே நம்புகிறோம்.

நாகபட்டிணம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டி?
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இனத்துரோகி  திமுக - சூனியக்காரி சோனியாவின் HUF நிறுவனமான காங்கிரசு கூட்டணி சார்பாக கம்யூனிஸ்ட் கோட்டையான நாகபட்டிணம் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப் படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது. ஒரு வேலை அப்படி இருந்தால் காங்கிரஸ் தனது வைப்புத் தொகையை இழப்பது உறுதி. 

அப்புறம் என்ன ம....னாவுக்கு நீ மந்திரி?
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் கடல் எல்லைக்குள் நுழைகின்ற மீனவர்களை அந்த நாட்டு அரசாங்கங்கள் கொல்வது இல்லை..ஆனால் சிங்கள அரசாங்கம் ஏன் இப்படி காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்கிறது என்று S.M.கிருஷ்ணாவை நிருபர்கள் கேள்வி கேட்ட போது,"அதை தான் நாங்களும் கேட்கிறோம்" என்று மூன்றாந்தர குடிமகன் போல பதில் அளித்துள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சரான உனக்கே இந்த நிலைமை என்றால் என்ன மானாவுக்கு நீ மந்திரியாக குப்பை கொட்டுகிறாய்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக