வியாழன், 17 பிப்ரவரி, 2011

இலங்கை விழாவில் இந்தியா பங்கேற்க கூடாது:வைகோ


இந்திய விமான படை ஆண்டு விழாவில் இந்திய விமானங்கள் சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:

2011 ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 15 ஆம் தேதியிட்ட ஆங்கில நாளிதழில், இலங்கை விமானப்படையின் ஆண்டு விழாவில் சுகாய் போர் விமானங்கள் என்ற தலைப்பிட்ட செய்தியை இத்துடன் இணைத்துள்ளேன்.

செய்தித்தாளில் இடம் பெற்று உள்ள செய்தியின் அடிப்படையில், இலங்கையின் விமானப்படை தனது 16 ஆவது ஆண்டு நிறைவை வருகின்ற மார்ச் மாதம் கொண்டாட உள்ளது என்றும், அந்த நிகழ்ச்சியில் நமது இந்திய விமானப்படை தனது அணி வரிசையின் உச்சநிலையில் உள்ள சுகாய் போர் விமானங்களை, இந்திய விமானப்படையின் துணைத்தலைவர் நாக் பிரவுன் தலைமையில் அனுப்பி, கொழும்புவில் நடைபெறுகின்ற விமானப் படைக் கொண்டாட்டத்தில் வான்வெளி சாகசத்தில் ஈடுபடுவதற்குத் திட்ட மிட்டு உள்ளதாகவும் அறிகின்றேன்.

விமானப்படைப் பிரிவின் போர் வீரர்களின் அணி வகுப்புக்காட்சியும், போர் வீரர்களின் இசைக்குழுவைச் சார்ந்தவர்களும், வான்வெளியில் இருந்து குதித்து அந்தரத்தில் சாகசம் நிகழ்த்தக்கூடிய இந்திய பாராசூட் வீரர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். 2011 ஜனவரியில், நான் தங்களிடம் நேரில் கொடுத்த கடிதத்தில், இந்திய அரசாங்கம் ஈழத்தமிழர்களை வஞ்சித்து விட்டது என்ற வேதனையும், ஆத்திரமும் தமிழ்நாட்டில் இளைய தலை முறையிடம் ஏற்பட்டு உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டி இருந்தேன்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சுகாய் போர் விமானங்களை இலங்கை விமானப்படையின் கொண்டாட்டங்களில் பங்கு ஏற்கச் செய்யும் இந்திய அரசாங்கத்தின் தற்போதைய முடிவு நியாயம் அற்றது. தவறான முடிவு. வேதனைத்தீயில் வெந்து கொண்டு இருக்கின்ற தமிழ் மக்கள் உள்ளத்தில், இந்திய அரசாங்கத்தின் மீது மேலும் கோபத்தையும், வெறுப்பையும் எதிர்ப்பையும் வளரச் செய்யும் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இலங்கை விமானப்படைக் கொண்டாட்டங்களில் பங்கு ஏற்க, இந்திய விமானப் படையை அனுப்பக்கூடாது என்று வேண்டுகிறேன் என்று வைகோ தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக