செவ்வாய், 14 ஜூன், 2011

தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பில் கை எழுத்திடுங்கள்!!!









அன்பின் ஜனாதிபதி ஒபாமா அவர்களே,


அண்மையில் தென் சூடானில் இடம்பெற்ற பொதுசன வாக்கெடுப்பில் சுதந்திர தென்சூடானை ஆதரித்துப் பொதுமக்கள் அமோகமாக வாக்களித்திருந்தனர். தென் சூடான் மக்களுக்கு இப் பொதுசன வாக்கு மூலம் சாத்தியமாகும் இறைமையை நாம் அங்கீகரித்து ஆதரிக்கின்றோம். இதனால் முக்கியமான இரு விடயங்கள் நிறைவேறுகின்றன. முதலாவதாக தென் சூடான் மக்களுக்குத் தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பும் அமைதியும் கிட்டுகின்றது. இரண்டாவதாகப் பல வருடங்களாக நீடித்த பயங்கரப் போர் முடிவுக்கு வந்துள்ளது.

தென் சூடானில் இடம்பெற்றதைப் போன்றே இலங்கையிலும் ஓர் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப் பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். சூடானைப் போன்றே பல ஆண்டுகளாகத் தொடர்ந்த பயங்கரப் போரில் இலங்கை அரசு நாதியற்ற சிறுபான்மை இனத்தைக் கொடூரமாகத் தாக்கிக் கொன்றொழித்தது. தென் சூடானிய மக்களைப்போன்றே இலங்கைத் தமிழர்களும் பாதுகாப்புடன் சுதந்திரமாக வாழ இறைமையுடன் கூடிய தனி நாடு இன்றியமையாததாகும். எண்ணற்ற சிறுபான்மைத் தமிழ் இனத்தவரைக் கொன்றொழித்ததுடன் அவர்களைப் பல இன்னல்களுக்கும் ஆளாக்கியது.

இலங்கையில் யுத்த அனர்த்தம் சார்ந்த பொறுப்பேற்பு சம்பந்தமாக ஆராய ஐ.நா சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பெற்ற நிபுணர் குழுவின் அறிக்கை 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 25ந் தேதி வெளியாகியது. அவ்வறிக்கையில் இலங்கை அரசிற்கெதிரான மேல் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.


1. பரவலான சரமாரிக் குண்டு வீச்சுக்குப் பொது மக்கள் பலியாக்கப் பட்டது
2. மருத்துவ மனைகளும் மக்கள் சேவை மையங்களும் குண்டுவீசித் தாக்கப் பட்டமை
3. மக்களுக்கு மனிதாபிமான உதவி மறுக்கப்பட்டமை
4. இடம் பெயர்ந்த மக்களுக்கும் விடுதலைப் புலி உறுப்பினருக்கும் எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள்
5.போர்க்களத்திற்குப் புறத்தே பத்திரிகையாளர்களுக்கும் அரசிற்கு முரணானவர்களுக்கும் ஏதிரான மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டமை

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக சர்வதேச விசாரணை நடைபெறவேண்டுமென இவ்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கீழே கைச்சாத்திட்டிருக்கும் நாம் இலங்கையில் தமிழ் மக்களுக்குத் தங்கள் சொந்தப் பிரதேசத்தில் இறைமையுடன் கூடிய சுய ஆட்சி அமைய வேண்டுமா எனும் வினாவிற்கு விடை அளிக்கக்கூடிய பொதுசன வாக்nகுடுப்பு ஒன்று இடம்பெறுவதற்கு அமெரிக்காவின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.


thaye enna pizhai seithomadi thaye thaaye enna pilai seithomadi thaaye

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக