புதன், 15 ஜூன், 2011

"கப்பல் போக்குவரத்தை இடைநிறுத்த வேண்டும்"

தமிழகத்தின் தூத்துக்குடிக்கும் இலங்கைத் தலைநகர் கொழும்புக்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

இந்தத் திட்டமானது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் கடந்த திங்கள் கிழமையன்றுதான் இத் திட்டம் தூத்துக்குடியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. துவக்க விழாவில் மாநில அரசு அதிகாரிகளும், அதிமுக எம் எல் ஏ வும் கலந்து கொள்ளவில்லை.
தூத்துக் குடியிலிருந்து திங்கள் மாலை புறப்பட்ட கப்பல் செவ்வாய்க்கிழமை அதிகாலை கொழும்பு சென்றடைந்துள்ளது.
அதேபோல இலங்கையில் மீள் குடியேற்றம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நேரில் கண்டறிய தமிழக சட்டமன்ற உறுப்பினர் குழுவை அங்கு அனுப்ப வேண்டும் என்றும் முதல்வர் கோரியுள்ளார்.

நன்றி:

விடுதலை புலிகள் மீதான தடை கொண்டுவர முக்கிய காரணதாரினியாக இருந்தாலும், ஜெயலலிதாவின் இந்த துணிச்சலான கோரிக்கை (வேண்டுகோள்)பாராட்டுக்குரியது. இதுல எதும் உள் குத்து இருக்குமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக