ஏழை குழந்தைகள் படிக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் தனது மகளை சேர்த்த ஈரோடு கலெக்டர்
ஈரோடு, ஜுன். 15-
ஈரோடு, ஜுன். 15-
ஈரோடு மாவட்ட கலெக்டராக கடந்த சில தினங்களுக்கு முன் பொறுப்பேற்றவர் அனந்தகுமார். இதற்கு முன் அவர் தர்மபுரி மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தார். ஈரோடு மாவட்ட கலெக்டருக்கு ஸ்ரீவித்யா என்ற மனைவியும், கோபிகா, தீபிகா என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
ஸ்ரீவித்யா தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிகிறார். மூத்த மகள் கோபிகா தர்மபுரியில் ஒரு மெட்ரிக் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்தாள். தற்போது அவளை ஈரோடு பள்ளியில் கலெக்டர் அனந்குமார் சேர்த்துள்ளார். பணக்காரர்களின் குழந்தைகள் படிக்கும் பெரிய தனியார் பள்ளிகளில் சேர்க்கவில்லை.
ஈரோடு குமலன்குட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் இன்று தனது மகளை 1-ம் வகுப்பில் கலெக்டர் சேர்த்தார். இன்று (புதன்கிழமை) காலை அவர் குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மகளுடன் சென்றார். கலெக்டர் பள்ளிக்கு வந்ததை கண்டு அப்பள்ளி தலைமை ஆசிரியர் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தார்.
மற்ற ஆசிரியர்-ஆசிரியைகளும் அங்கு வந்தனர். அவர்கள் கலெக்டரை வரவேற்றனர். என் மகளை இந்த பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்க்கிறேன் என்று கலெக்டர் அனந்தகுமார் கூறியதும் ஒரு கனம் தலைமை ஆசிரியரால் எதுவும் பேச முடியவில்லை. பிறகு அவர் கலெக்டரை தான் அமரும் இருக்கையில் அமரச் சொன்னார். ஆனால் அதில் உட்கார மறுத்த கலெக்டர், பெற்றோர் அமரும் இருக்கையில் அமர்ந்து தனது மகள் கோபிகாவை 2-ம் வகுப்பில் சேர்த்தார்.
பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சாதாரண கூலி தொழிலாளி கூட தங்களது குழந்தைகளை ஆங்கில அறிவு கிடைக்க மெட்ரிக் பள்ளிகளிலும் பெரும் பணக்காரர்களின் குழந்தைகள் படிக்கும் பிரபலமான தனியார் பள்ளிகளிலும் சேர்க்கும் இந்த காலத்தில் மாவட்ட கலெக்டர் ஒருவர் தனது மகளை ஏழை குழந்தைகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்த்ததை மக்கள் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டனர்.
நன்றி:-
ஒரு மாவட்ட ஆட்சியரே எந்த வெளிப்பூச்சும் இல்லாமல் அரசாங்கப் பள்ளியில் தன் குழந்தையை படிக்க வைக்கிறார். நடுத்தர வகுப்பு மக்களும், குடிசை வாழ் மக்களும் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலப் பள்ளியில் தான் பயிலனும்னு எதுக்கு அடம் பிடிக்கின்றீர்கள்? யாருக்காக இப்படி ஒரு வேஷம்? இதனால் என்ன போலி கௌரவம் உங்களுக்கு வந்துவிடுகிறது? தமிழ் வழி படிக்கின்ற குழந்தைகள் தாம் என்ன படிக்கின்றோம்னு நல்ல புரிந்து படிப்பார்கள்; அதனால் அவர்கள் புற உலகத்தை பற்றி தெரிந்து கொள்கிறார்கள்; அகன்ற பார்வை பெறுவார்கள்.
ஆங்கிலப் பள்ளியில் சேர்த்து விட்டு, "அவர்கள் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறார்கள்; அரசு நிர்ணயித்த குறைந்த கட்டணம் கட்டிய எங்களை தரக்குறைவாக நடத்துகிறார்கள்; குழந்தைகளிடையே பாகுபாடு காட்டுகிறார்கள்; அரசு இதை கண்டும் காணாமல் இருக்கிறது; இதற்கு கடிவாளம் போட யாருக்கும் துப்பு இல்லை'னு அப்புறம் எதுக்கு ஒப்பாரி?
உக்காந்து யோசிங்க பெற்றோர்களே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக