சனி, 10 டிசம்பர், 2011

மின்னஞ்சல் அனுப்புங்கள்-த.தே.பொ.கட்சி தோழர்களை விடுவிக்க..

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியின் சார்பாக தோழர் அருணபாரதி தலைமையில் சென்னை தியாகராய நகரில் மலையாளிகளின் ஜோசு ஆலுக்காஸ் நகைக் கடை முன்னே 07.12.2011 அன்று அமைதியான முறையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 

அன்று மாலையே தோழர் அருணபாரதி மற்றும் த.தே.பொ.கட்சித் தோழர்கள் இதர ஐவரையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தது தமிழக அரசின் பொறுப்பான,"வெப்பன் சப்ளையர்" என நரிக்குறவர் திரு.சேகர் அவர்களை தாம்பரத்தில் கைது செய்த அதே கடமை தவறாத சீர்மிகு காவல் துறை.

இதற்கிடையில் சைதாப்பேட்டையில் மலபார் உணவகம் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் உண்மையானவர்களை கண்டுபிடிக்க முடியாததால் சிறையில் உள்ள நமது தோழர்களின் மீது அந்த குற்றச்சாட்டை சுமத்தி சிறை வாசத்தை நீட்டித்து உள்ளது தமிழக காவல் துறை.

தோழர்களே...

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான,இட்டுக் கட்டிய,ஜோடிக்கப்பட்ட வழக்கு. செய்த குற்றத்திற்கு சிறை செல்ல தயங்காதவர்கள் நமது தோழர்கள்.ஆனால் செய்யாத குற்றத்திற்காக த.தே.பொ.கட்சித் தோழர்களை சிறையில் தள்ளியதை கண்டித்து,அவர்களை விடுவிக்கக் கோரி தமிழக அரசின் முதல்வர் செல்லுக்கு உடனடியாக மின்னஞ்சல் அனுப்புங்கள். 

தமிழர்களுக்காக,மூவர் உயிர்காப்பு,அணு உலை எதிர்ப்பு, முல்லைப் பெரியாறு அணை காப்பு அன தொடர்ச்சியாக பல போராட்டங்கள் நடத்தி வரும் நமது கட்சி,சிறைவாசம் அனுபவிக்கும் தோழர்களை பிணையில் வெளிக் கொண்டுவரக் கூட முடியாத பொருளாதார சிக்கலில் உள்ளது. எனவே தாங்கள் அனுப்பும் மின் அஞ்சல் பேருதவியாக இருக்கும்.
------------------------
***************************************************************
பெறுதல்:  cmcell@tn.gov.in

பொருள்: பொய் வழக்கில் சிக்குண்ட தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சித் தோழர்களை விடுவிக்கக் கோரி.

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு,


முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக அமைதியான முறையில் 07.12.2011 அன்று தி.நகரில் முற்றுகை போராட்டம் நடத்திய தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் அருணபாரதி உட்பட ஆறு பேர் , சைதாப்பேட்டை மலபார் உணவகம் சேதப்படுத்தப் பட்ட வழக்கில் பொய்யாக புனையப்பட்டு புழலில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை தாங்கள் தலையிட்டு விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


இப்படிக்கு 

_____________

*******************************************************************

இதை அப்படியே நகல் எடுத்து உடனடியாக மின்னஞ்சல் செய்யுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

பின் நிகழ்வு:15-12-2011
ஆலுக்காஸ் முன்பு ஆர்ப்பாட்டம்- த.தே.பொ.கவினருக்கு ஜாமீன்:

இதற்கிடையே சென்னையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் 6 பேர் நிபந்தனை 
ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பில், மலையாளிகளை வெளியேறக்கோரி சென்னையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை மாளிகை முன்பு க.அருணபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் 6 பேர் மீது 9.12.2011 அன்று புதிதாக ஒரு வழக்குப் போட்டு சிறையிலிருந்து அவர்களை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து சிறைக்காவல் ஆணை பெற்றனர்.

சைதாப்பேட்டையில் உள்ள ஒரு மலையாளிக் கடையை அதே 7.12.2011 அன்று மேற்கண்ட 6 பேரும் தாக்கிச் சூறையாடியதாகவும், அக்கடைச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததாகவும், அடித்துக்காயம் உண்டாக்கியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டி, மீண்டும் சிறையில் அடைத்தனர்.

சைதாப்பேட்டைக் காவல் நிலையத்தில் போட்டுள்ள இவ்வழக்கு முழுக்கப் பொய்யானது, வேண்டுமென்றே காவல்துறையினரால் புனையப்பட்டது என்று ழக்கறிஞர் சேசுபாலன்ராஜா தலைமையினான வழக்கறிஞர் குழு 14.12.2012 எழும்பூர் நீதிமன்றத்திலும், சைதை நீதிமன்றத்திலும் வாதிட்டது.

இதன் அடிப்படையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



2 கருத்துகள்:

  1. மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன் மது..நன்றி பகிர்விற்க்கு.

    பதிலளிநீக்கு
  2. நன்றிகள் இனியவன் மற்றும் மின் அஞ்சல் அனுப்புகின்ற அனைத்து தோழர்களுக்கும்.பொய்க் குற்றச்சாட்டில் சிறை சென்ற நமது தோழர்களை விரைவில் மீட்போம்.அணையை காக்க போராடுவதும்,போராடிய தோழர்களை ஆதரிப்பதும்,காப்பதும் நமது கடமை.

    பதிலளிநீக்கு