அடங்கி கிடந்தவன் தமிழன் என்ற நிலை மாற
அடிமை விளங்கை அறுத்தெறி-வீதி தோறும்
வீறு கொண்டு நீ எழு
வீழ்ந்த இனம் வாழத் தலைப்படு!!!
ஏய் இந்திய இயலாமையே..மன்னிக்கவும்
இந்திய இறையாண்மையே
அடித்தவனை திருப்பி அடிப்பது வன்முறை என்றால்
திருப்பி அடித்தவனை சிறையில் தள்ளும் முன்
ஆரம்பித்து வைத்தவனுக்கும் சிறையில் அறை ஒதுக்கு!!!
அப்பாவி தமிழர்க்குதிரு.சாந்தவேலுவிற்கு இழைக்கப் பட்ட இந்த அநீதியை தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் (தினமணி,சத்தியம் தொ.கா.தமிழன் தொ.காவை தவிர) புறக்கணித்துவிட்ட நிலையில் இந்த மலையாள இனவெறியர்களின் படுபாதக கொலையை மக்களிடம் கொண்டு செல்வோம்!!!
தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி

9841949462
தமிழக முதல்வர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள்
சென்னையை அடுத்த திருவேற்காடு திருவேங்கட நகரைச் சேர்ந்த சாந்தவேல் என்ற ஐயப்ப பக்தர் சபரி மலைக்குச் சென்றபோது,பம்பையில் கேரளக்காரரின் தேநீர்க் கடையில் இவருக்கும் கடைக்காரருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த மலையாளியான கடைக்காரர் தேநீர் போடுவதற்காகக் கொதிநிலையில் வைத்திருந்த பாய்லர் தண்ணீரை சாந்தவேல் மீது ஊற்றியுள்ளார். இதனால் கடுமையாக அவரின் முதுகுப் பக்கம் வெந்துள்ளது. கோட்டையம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை அவருடைய மனைவியும் உறவினர்களும் ஆம்புலன்சு வண்டியில் கொண்டுவந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 11.1.2012 அன்று சேர்த்துள்ளனர்.
அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 15.1.2012 விடியற்காலை இறந்துவிட்டார். விபத்து என்ற அடிப்படையில் இவருக்குக் கோட்டையத்திலும் சென்னையிலும் சிகிச்சை அளித்துள்ளனர். இனி இதைக் கொலை வழக்காக (302) மாற்றி, வெந்நீர் ஊற்றிய மலையாள நபரையும், அதில் இன்னும் தொடர்புள்ள மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும்.
சென்னை முகப்பேரைச் சேர்ந்த சந்திரன் என்ற மலையாளி குருசாமியாக இருந்து மேற்படி சாந்தவேல் உள்ளிட்ட 80 பேரை சபரி மலைக்கு அழைத்துப் போயுள்ளார். மேற்படி சந்திரன் உண்மை விவரங்களை முழுமையாகச் சொல்ல மறுத்து வருகிறார். சந்திரனை காவல்துறை விசாரித்து நடந்த உண்மைகளைப் பெற வேண்டும். மேலும் சாந்தவேலுடன் தமிழகத்திலிருந்து சென்ற இதர ஐயப்ப பக்தர்களையும் விசாரிக்க வேண்டும்.
இரு மாநிலங்களைச் சேர்ந்ததாக இவ்வழக்கு இருப்பதால் தமிழக முதல்வர் செயலலிதா அவர்கள் இதில் தலையிட்டு, தீவிர நடவடிக்கை எடுத்து, சாந்தவேல் மீது வெந்நீர் ஊற்றி சாவுக்குக் காரணமான காயங்களை உண்டாக்கிய மலையாளத் தேநீர்க் கடைக்காரர் உள்ளிட்ட நபர்களை இந்தியத் தண்டனைச் சட்டம் 302ன் கீழ் கைது செய்து வழக்கு நடத்த கேரள அரசை வலியுறுத்தி உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
கேரளாவில் அண்மைக் காலமாக ஐயப்ப பக்தர்கள் உள்பட அப்பாவித் தமிழர்கள் பலர் மலையாளிகளால் தாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்திய மலையாளிகள் மீது கேரள அரசு சட்டப்படி சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. கேரள அரசின் இவ்வாறான மலையாள இனச் சார்பு நிலை, மலையாளிகள் மேலும் மேலும் தமிழர்களைத் தாக்கத் தூண்டுகோலாக அமைந்துள்ளது என்பதைத் தமிழக முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, சாந்தவேல் கொலைக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு தீவிரமான நடவடிக்கைகளைத் தமிழக முதல்வர் எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

பம்பையில் சுடுநீர் ஊற்றப்பட்ட ஐயப்ப பக்தர் சாவு
பம்பையில் சுடுநீர் ஊற்றப்பட்டு காயத்துடன் சென்னை திரும்பிய ஐயப்ப பக்தர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சென்னையை அடுத்த திருவேற்காடு திருவேங்கடம் நகரைச் சேர்ந்தவர் சாந்தவேல் (39). இவருக்கு சித்ரா (30) என்ற மனைவியும், தக்சனா (12), சஞ்சனா (9) ஆகிய மகள்கள் இருக்கின்றனர். பிளம்பராக பணியாற்றிவந்த சாந்தவேல், முதன்முறையாக சபரிமலை செல்ல மாலை அணிந்திருந்தார்.
இந்நிலையில் முகப்பேரைச் சேர்ந்த சந்திரகுருசாமி தலைமையில் சாந்தவேல் உள்ளிட்ட 80 பேர் கொண்ட குழுவினர் ஜனவரி 6-ம் தேதி சபரிமலை புறப்பட்டனர். ஜனவரி 7-ம் தேதி பம்பையில் உள்ள டீக்கடையில் ஏற்பட்ட தகராறில் சாந்தவேல் மீது டீக்கடைக்காரர்கள் சுடுநீர் ஊற்றியதாகக் கூறப்படுகிறது.
இதனால் காயமடைந்த சாந்தவேல் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கேரள மாநில போலீஸார் ஜனவரி 8-ம் தேதி சாந்தவேல் மனைவி சித்ராவுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் ஜனவரி 9-ம் தேதி சித்ரா உள்பட உறவினர்கள் கோட்டயம் சென்றனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த சாந்தவேலை அழைத்து வந்த உறவினர்கள் கடந்த 11-ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜனவரி 15-ம் தேதி சாந்தவேல் உயிரிழந்தார்.
இதற்கிடையில் சந்திரகுருசாமி தலைமையில் சபரிமலைக்குச் சென்ற மற்றவர்கள் அனைவரும் ஊர் திரும்பினர். அவர் சென்ற குழுவில் சாந்தவேல் புது நபர் என்பதால் அந்தக் குழுவில் உள்ள யாரையும் இதற்கு முன்பு தெரியாதாம். இதனால் உடன் வந்த அவரைக் குறித்த தகவல் அறியாமலேயே மற்ற ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் முடித்து ஊர் திரும்பிவிட்டதாகவும் கூறப்
படுகிறது.
இந்நிலையில் சாந்தவேலின் அண்ணன் பொன்வேல் கொடுத்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து சபரிமலைக்கு அழைத்துச் சென்ற சந்திரகுருசாமியிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இது குறித்து பம்பையில் விசாரணை நடத்தும் வகையில் தேனியில் இருந்து 3 பேர் கொண்ட போலீஸ் குழு அனுப்பப்பட உள்ளதாகவும் மேற்கொண்டு கேரள போலீஸார் விசாரணை நடத்துவார்கள் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
(SANDHAVELU MURDER,SAANDHAVELU MURUDERED)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக