காவிரி டெல்டா விவசாயிகளுக்கு எப்போதும் குரல் கொடுக்கும் பொதுவுடமைக் கட்சியை புறந்தள்ளினீர்கள்;
தமிழ் தேசியம் பேசிய, விவசாயிகளை அரசு ஊழியர் ஆக்குவேன் என்ற நாம் தமிழரை எள்ளி நகைத்தீர்கள்;
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டால் மட்டும் போதாது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் இழந்த உரிமையை மீட்கவும், முல்லைபெரியாறு பிரச்சனையில் ஜாஸ் ஆளுக்காசை முற்றுகை இட்டும் வீரப்போர் புரிந்த தமிழ் தேசப் பொதுவுடைமையின் தேர்தல் புறக்கணிப்பு வாதத்தை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை;
அவ்வப்போது நடைபயணம் மேற்கொண்டு கூச்சல் போட்ட மதிமுகவை மதிக்கவே இல்லை;
நிழல் நிதி அறிக்கை வெளியிட்டு புதிய தடுப்பணைகள்,இயற்கை விவசாயம் என்ற திட்டங்களை வெளியிட்ட பாமகவிற்கு பாடை கட்டிவிட்டு திராவிட கட்சிகளையும், காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று சொன்ன காங்கிரசையும் சட்ட மன்றத்திற்கு அனுப்பி வைத்து விட்டு எந்த முகத்தை வைத்துக் கொண்டு அனைத்துக் கட்சி கூட்டம் போட வேண்டும்..காவிரி பிரச்னையை பேச வேண்டும் என்று சொல்கிறாய்?
500க்கும் 1000 அவர்கள் போட்ட பொறையை கவ்விய நீ உரிமையை பற்றி பேச என்ன அருகதை உள்ளது?
சென்ற வருடங்களில் நீ போராடிய போது அலுவலகத்திற்கு விடுப்பு போட்டு உங்கள் ஊர்வலத்தில் கோசம் போட்டு,அவ்வப்போது போராட்டங்களுக்கு நிதி உதவியும் செய்த எங்களைப் போன்ற தன்மானத் தமிழர்கள் சொல்கிறோம்...
15க்கும், 26க்கும் குச்சிமிட்டாய் தருவான்.. அதை வாயில் வாங்கி சப்பிகொண்டு....விவசாய நிலத்தை சாலை போட சுங்கச்சாவடிக்கரனுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு..மீத்தேன் திட்டத்திற்கும், கெயில் குழாய் பதிக்கவும் கொத்தடிமைகள் தேவையாம்,போய் வேலையில் சேர்...அங்கேயும் வேலை கிடைக்கவில்லை என்றால் ஐவேசில் ஒன்றிரண்டு புளிய மரங்கள் விட்டு வைத்திருக்கிறார்கள்..தூக்கு போட்டு தொங்கு...