வெள்ளி, 31 டிசம்பர், 2010

இசைப்ரியா - ஒரு மலரின் கொடூர மரணம்

இசை பிரியா அன்றலர்ந்த மலராய் ...2001- இல்



வாடிய மலராய் ...இல்லை ..நெருப்பில் வாட்டிய
மலராய்...18 மே 2009 இல் ...
Powerful evidence of Genocidal Rajapaksa's cruel war crime
-Channel 4


New information on the Sri Lanka war crimes video: victim could be Isaipriya
The distressing execution video footage, screened by Channel 4 News last week and originating in Sri Lanka, shows a number of incidents of soldiers in uniform shooting in the head people who appear to be unarmed – described as "cold-blooded killing" by an international expert. The video also shows the bodies of other men and women lying on the ground.
Leading war crimes lawyer Julian Knowles, from Matrix Chambers, told Channel 4 News the video was "astonishing evidence" of a type he had only seen "a handful of times" showing the mass killing of civilians or unarmed combatants, a serious war crime.

வியாழன், 30 டிசம்பர், 2010

சிங்கள தேசிய கீதத்தை எதிர்த்த தமிழ் கல்விப் பணியாளர் படுகொலை


சிங்கள மொழி தேசிய கீதத்தை எதிர்த்த தமிழ் கல்விப் பணியாளர் மார்க்கண்டு சிவலிங்கம் என்பவர் இலங்கை புலனாய்வு பிரிவினரால் கொல்லபட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் கடந்த 26 ம் தேதி நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தினத்தில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடவேண்டும் எனஇலங்கை இராணுவத்தினரால் வலியுறுத்தப்பட்டது.

இராணுவத்தினரின் அந்த வேண்டுகோளை எதிர்த்து மார்க்கண்டு சிவலிங்கம், தமிழ் மொழியில் தேசிய கீதத்தை மாணவர்களினால் பாட வைக்க அதி தீவிரமாக செயற்பட்டதாகவும், தேசிய கீதம் குறித்து எதிர்க்கருத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்தே இலங்கை அர்சாங்கத்தின் புலனாய்வு பிரிவினரால் மார்க்கண்டு சிவலிங்கம் கொள்ளை என்ற பெயரில் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


*********************************************************************************************************
தேசிய கீதத்தின் மொழி?BBCTamil.com

இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க வேண்டுமென அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் நிறைவேற்றப்பட வி்ல்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தேசியக் கீதத்தைப் பாடவேண்டிய விதிமுறைகள் பற்றிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு வந்த போது, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்க வேண்டும் என்கின்ற முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டதாகவும் அது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தேவானந்தா கூறினார்.
ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் கனடா போன்ற சில நாடுகளில், இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றமை ஜனாதிபதிக்கு எடுத்துக்காட்டப்பட்டதாகவும் டக்ளஸ் தெரிவித்தார்.
அமைச்சர்களான ராஜித்த சேனாரத்னவும் வாசுதேவ நாணாயக்காரவும், தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்கும் படி சட்டம் கொண்டுவருவது சாத்தியப்படாது என்று கருத்துக் கூறியதாகவும் சில முஸ்லிம் அமைச்சர்களும் இந்தக்கருத்தையே கொண்டிருந்ததாகவும் அமைச்சர் டக்ளஸ் கூறினார்.
இந்தக் கருத்துக்களையெல்லாம் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஒரு மொழியில் தேசிய கீதம் இசைக்கும் திட்டத்தை நிறைவேற்றாது ஒத்திவைத்ததாகவும், சில ஊடகங்களில் வெளியான தகவலைப் போல, சிங்கள மொழியில் மட்டும் என்ற திட்டம் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை எனவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தமிழோசையிடம் கூறினார். 
*****************************************************

சிங்கள மொழியில் தேசியகீதம் பாட மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்! – சுரேஷ் பிரேமசந்திரன்

அரசியல் சாசனந்தின் பிரகாரம் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் தமிழில் தேசிய பாடப்படலாம். ஆனால் நேற்றைய தினம் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள், சிங்கள அரசியல்வாதிகளின் நிர்ப்பந்தத்தின் பிரகாரம் சிங்கள் மொழியில் தேசிய கீதம் பாடியுள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைக்கு துணைபோகும் தமிழ் அரசியல்வாதியான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தான் கண்டனம் தெரிவிப்பதாகவும், இது போன்ற செயற்பாடுகளால் தமிழ் மாணவர்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளதாகவும் இது நாட்டிற்கு ஆரோக்கியமானதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய நிகழ்வுகளில் பிரதமர் உரையாற்றும் போது இனங்களுக்கிடையே ஐக்கியத்தை பற்றி உரையாற்றினார். இவ்வாறு ஐக்கியத்தை பற்றி உரையாற்றுபவர்களுக்கு ஏன் தமிழில் தேசிய கீதத்தை கேட்கமுடியாது எனவும் இனங்களுக்கிடையேயான புரிதல் இவ்வாறன செயற்பாடுகளின் மூலம் ஏற்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது போன்ற விடயங்களுக்கு துணைபோவது, தமிழர்களை தலைகுனிய வைத்துள்ளதாகவும், இலங்கை அரசு அரசியல் சாசனத்திற்கு முரணாக செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்ததுடன் ஊடக அமைச்சர் தமிழில் தேசிய கீதம் பாடலாம் என அறிவித்தது பொய்யாகி போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

தமிழக மீனவர்களைக் கொன்று குவித்த சிங்கள கடற்படைக்குப் பயிற்சியா-சீமான் கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டபொழுதும் இந்தியக் கடற்படை இதுவரை கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்று கூட தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் நம் மீனவனைக் காப்பாற்ற எதிர்தாக்குதலோ, இலங்கை ராணுவத்திற்கு ஒப்புக்குக் கூட கண்டனமோ தெரிவிக்காத கடற்படை பிறகு யாரைக் காப்பாற்ற ரோந்துப் பயிற்சியை இணைந்து மேற்கொள்ளப் போகிறது? என்று கேட்டுள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவுடன் பேச்சு நடத்திய பின்பு இருநாட்டு கடற்படை உறவை மேம்படுத்தும் வகையில் 2011ம் ஆண்டு இலங்கை - இந்திய கடற்படையினர் இணைந்து இலங்கை கடற்பரப்பில் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர் என்றும் இலங்கை பாதுகாப்பு பிரிவினருக்கு மேலும் பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இந்தியக் பாதுகாப்புச் செயலாளரின் இந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டணங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

இலங்கையில் கடந்த ஆண்டு சிங்கள ராணுவம் தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலை தொடர்பாக ராஜபக்‌சேவை இனப்படுகொலையின் சூத்திரதாரியாகவும், இலங்கையின் மீது விசாரணை நடத்தவும் உலகம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக ஐ.நா.குழு.இலங்கைக்கு செல்ல உள்ள நிலையில் இலங்கை கடற்படைக்கு பயிற்சி என்ற இந்திய பாதுகாப்புச் செயலாளரின் இந்த அறிவிப்பு உலகின் கவனத்தை திசை திருப்பும் உத்தியாகும். இலங்கை நிகழ்த்திய இனப்படுகொலையை அருகாமையில் இருந்து தொடர்ந்து மறைக்கும் முயற்சியாகும்.

இங்கோ தமிழ்நாட்டில் இதுவரை 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டபொழுதும் இந்தியக் கடற்படை இதுவரை கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழ் மீனவன் படகிலும், இந்தியக் கடற்படையின் கப்பலிலும் ஒரே இந்திய தேசியக் கொடி பறந்தாலும் தமிழ் மீனவன் கொல்லப்படும் பொழுதோ இந்தியக் கடற்படை செயலற்று உல்லாசமாக இருக்கிறது.

இதோ இன்று கூட தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் நம் மீனவனைக் காப்பாற்ற எதிர்தாக்குதலோ, இலங்கை ராணுவத்திற்கு ஒப்புக்குக் கூட கண்டனமோ தெரிவிக்காத கடற்படை பிறகு யாரைக் காப்பாற்ற ரோந்துப் பயிற்சியை இணைந்து மேற்கொள்ளப் போகிறது?

ஏற்கனவே ஈழத்தமிழர்களைக் கொன்றதற்கு மறைமுகமாக ஆயுதங்கள் உட்பட அனைத்து உதவியையும் செய்த இந்திய அரசு இன்னும் மீதமிருக்கும் அங்குள்ள தமிழர்களையும், இங்குள்ள தமிழ் மீனவனையும் கொல்வதற்கு சிங்கள ராணுவத்திற்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கப் போகின்றதா? என்று தெரியவில்லை. இந்தியக் கடற்ப்டையின் தமிழர் விரோதப்போக்கு வெந்த எமது புண்ணில் வெந்நீரைப் பாய்ச்சுவதாக இருக்கிறது. அதற்கு எமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்

செவ்வாய், 28 டிசம்பர், 2010

2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல்கள்

அரசியல் வட்டாரங்களிலும், ஊடக மேலிடங்களிலும், செல்வாக்குள்ளவர் நீரா ராடியா. இவர் 2009-ஆம் ஆண்டு சில அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகப் புள்ளிகளிடம் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் இப்போது வெளிவந்து பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் இந்தத் தொலைபேசி உரையாடல்களின் பதிப்பு ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உரையாடல் பதிவுகளிலிருந்து சில பகுதிகளை இங்கு வெளியிடுகிறோம்.-தினமணி

திங்கள், 27 டிசம்பர், 2010

ஒன்று கூடுவோம் தமிழர்களாய்-காப்போம் பெரியார் அணையை


தலையங்கம்: குரல் கொடுப்போம்... தடுப்போம்...!

பெரியாறு அணை பலமிழந்துவிட்டதாகக் கூறி புதிய அணையைக் கட்டியே தீருவது என்று அனைத்து முயற்சிகளையும் கேரள அரசு செய்து கொண்டிருந்தாலும், தமிழகத்துக்குச் சாதகமான வாதங்கள் மேலும் மேலும் வலுப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால், இதைத் தமிழக அரசு எந்த அளவுக்குத் தீவிரமாகக் கவனத்தில்கொண்டு செயல்படப்போகிறது என்பதைப் பொருத்திருக்கிறது கேரள அரசின் புதிய அணை கட்டும் திட்டம்.
  மூன்று தினங்களுக்கு முன்பு பெரியாறு அணையைப் பார்வையிட, உச்ச நீதிமன்றம் அமைத்த ஐவர் குழு வந்திருந்தது. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான இக்குழுவில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஏ.ஆர். லட்சுமணன் தமிழகத்தின் சார்பிலும், கே.டி. தாமஸ் கேரள அரசின் சார்பிலும் உள்ளனர். மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னாள் செயலர் சி.டி தட்டே, ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் டி.கே. மேத்தா ஆகியோரும் உள்ளனர். பெரியாறு அணை விவகாரம் தொடர்பான பிரச்னை இவர்களுக்கு முழுமையாகத் தெரியும்.
  பெரியாறு அணையைப் பார்வையிட்ட பின்னர், இப்போது கேரள அரசு புதியதாக அணை கட்ட தீர்மானித்துள்ள இடத்தையும் இக்குழு பார்வையிட்டுள்ளது. அப்போது பல்வேறு கேள்விகளை இக்குழுவினர் கேரள அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். கேரள அதிகாரிகள் போதிய ஆவணங்களை அளிக்காத நிலையிலும், கேள்விகளுக்குத் திருப்தியான பதில்கள் கிடைக்காத நிலையிலும் இக்குழுவினர் தங்கள் ஆய்வை விரைவிலேயே முடித்துக் கொண்டு திரும்பினர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
  115 ஆண்டு கால அணையின் பலம் குறித்து கேரள அரசு எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. அணையைப் பலப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் திருப்திகரமாகவும் செய்துள்ளது. இதில் கேரள அரசு வேண்டுமானால் அதிருப்தி தெரிவிக்கலாமேயொழிய, தொழில்நுட்ப வல்லுநர்கள் யாருமே இந்த அணையின் பலம் குறித்தோ அல்லது அணையைப் பலப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தோ இதுவரை எந்தவிதமான எதிர்க்கருத்துகளையும்