இன்று திமுக சார்பில் எங்கள் ஊரில் நடந்த மொழிப்போர் ஈகிகளுக்கு வீரவணக்க கூட்டத்திற்கு சென்று இருந்தேன். யார் நடந்தினால் என்ன, எதற்கான கூட்டம் என்பது தானே முக்கியம் என என்னை நானே சமாதானம் செய்து கொண்டு பங்கேற்க சென்றேன், நம் மொழிக்காக இன்னுயிர் ஈந்த ஈகிகளுக்கு வீரவணக்கம் செய்ய.
"கல்லக்குடி கொண்ட கருணாநிதி"..."பாம்பும் பல்லியும் படுத்து உறங்கும் பாளையங்கோட்டை சிறையில் வாடிய கலைஞர்" என ஹனீபா சிலாகித்து பாடிக் கொண்டு இருந்தார். மொழிப்போர் தியாகி பற்றியோ, தமிழின பெருமை சொல்லும் பாடலோ இல்லாமல் இது என்ன என்று என் மனதிற்குள் கேள்வி.
6மணிக்கு ஆரம்பம் என அறிவிப்பு செய்து, மணி 7.30ஆகியும் கூட்டமே இல்லையே..நாம் போய் இருக்கையில் அமர்ந்து ஆதரவு கொடுப்போம் என உள்ளே சென்றால் சாராய நெடி.நொறுக்கு தீனி விற்போர் அவசர அவசரமாக கடை விரிக்க ஆரம்பித்தனர்(தமிழின உணர்வு கூட்டம் என்றால்..அரங்கிற்கு வெளியே நூல்கள்,குறுந்தகடுகள் விற்பார்கள். ஆனால் கழக கூட்டங்களில் மட்டும் ஏன் நிலக்கடலையும் காரசாரமான முறுக்கும் விற்கிறார்கள் என அப்போது தான் புரிந்தது)
ஓரளவு கூட்டம் சேர்ந்ததும் கூட்டம் 8மணிக்கு ஆரம்பம் ஆனது. கரைவேட்டிகள் மேடை ஏறினர்.
"..வேண்டும் என்றே கைது நடவடிக்கைகள், பொய் "கேசுகள்" என ஜெயலலிதாவின் அட்டூழியம் பெருகிக் கொண்டே போகிறது,விரைவில் திமுக ஆட்சி மலரும்" என மொழிப்போர் தியாகிகள் கூட்டதிற்கு கழக உடன்பிறப்பு ஒன்று வரவேற்புரை நிகழ்த்தியது.
அடுத்து பேசியவர் "நீ ஏன் உன் கட்சி கூட்டத்தில் தலைவரின் தத்துவ பாடலை போடுகிறாய், 17வயசில இளநி விற்ற பாட்டை போடவேண்டியது தானே" என கூட்டத்தின் மையக்கருவிற்கு மக்களை இழுத்துச் சென்றார்.
இனி இங்கிருந்தால் "மொழிப் போர் என்றால் என்ன..அது எந்தெந்த கட்சிகளுக்கு இடையே,எந்த நூற்றாண்டில் யார் தலைமையில் நடந்தது" என்ற பல்வேறு கேள்விகள் எனக்குள் எழலாம் என அபாயம் உணர்ந்து கூட்டத்தை விட்டு கூடு நோக்கி பறந்தேன்.
மொழிப்போர் ஈகியருக்கு த.தே.பொ.க. வீரவணக்கம்!

முகநூலில் பின்னூட்டம் இட இதை சொடுக்கவும்:
- http://www.facebook.com/pulikkodi/posts/259004227505808
- http://www.facebook.com/groups/ulagath.tamilar.ondriyam/290716150984879/
1938 – 1965 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயன்ற இந்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி மடிந்த மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் சனவரி 25 அன்று 'மொழிப்போர் ஈகியர்' நினைவுநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆண்டுதோறும் மொழிப்போர் ஈகியரின் நினைவிடங்களில் வீரவணக்கம் செலுத்தி, தமிழ்மொழி காக்க சூளுரை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாண்டும் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.
வளர்ச்சிக்கு தாய்மொழி இன்றியமையாதது. குழந்தை தன் முதல் பாடத்தைக் கற்பது தாயிடம் இருந்துதான். அப்படியிருக்க, குழந்தையின் உள வளர்ச்சிக்கு தாய்மொழி அன்றி, வேறொரு மொழியைத் திணிப்பது தாய்நாட்டுக்குச் செய்யும் பெரிய பாவம் என்றே நினைக்கிறேன்!” – காந்தி தாய்மொழி குறித்துத் தீர்க்கமாகச் சொன்னது இது! அகிம்சை என்கிற ஒன்றை மட்டுமே அவர் போதித்ததாக நினைத்து, புத்தி மறத்துக்கிடக்கும் எம்தமிழன் ஆண்டுதோறும் சனவரி 25-ம் தேதி மறக்காமல் அனுசரிக்கிறான், மொழிப்போர் தியாகிகள் தினமாக. இனத்தை மறந்தவன், மொழிக்காக விழுந்த பிணத்தை மறந்தவன், தியாகிகள் தினத்தையாவது மனதில் வைத்திருக்கிறானே என மனதை தேற்றிக்கொள்ளலாம்.
‘நாளை என் மொழி அழியுமானால், இன்றே நான் அழிவேன்!’ என உரக்கச்சொன்னான் அம்சத் என்கிற பற்றாளன். ஆனால், மொழியைக் காக்க தங்களையே அழித்துக்கொண்ட தாளமுத்து ராசேந்திரன், அரங்கநாதனை எல்லாம் அடையாளம் மறந்துவிட்டு, தினத்தை மட்டும் ஒப்புக்கு அனுசரிப்பது, நெஞ்சத்தை அறுத்துவிட்டு நினைவஞ்சலி செலுத்துவதுபோல் அல்லவா இருக்கிறது. தமிழ் மொழிக்காக தன் மூச்சு நிறுத்தியவர்களை நாம் எந்த அளவுக்கு இழிவுபடுத்துகிறோம் என்பதற்கு ஓர் உதா’ரணம்’ சொல்லவா தமிழர்களே… மொழிக்காக உயிர்விட்டவனின் மூச்சைக் கௌரவிக்க
சென்னையில் ‘அரங்கநாதன் சுரங்கப்பாதை’ என்று பெயர் வைத்தோமே… அதை இன்றைக்கு எப்படி உச்சரிக்கிறார்கள் தெரியுமா? ‘அரங்கநாதன் சப்-வே’ என்று… தமிழுக்காக உயிர்விட்டவனை ஆங்கில வார்த்தைகளால் அடையாளப்படுத்தும் ஈனத்தனத்தை வேறு எந்த இனத்திலாவது கண்டிருக்கிறீர்களா?

தாளமுத்துவின் கல்லறையை என்றைக்காவது கண்டிருக்கிறீர்களா தமிழர்களே… அது இப்போது கல்லறையாக இல்லை… கழிவறையாக! மொழிப்போரில் முளைத்த எழுச்சியை வைத்து ஏற்றம்கண்டவர்கள், அந்தத் தியாகிகளின் பக்கம் திரும்பிக்கூடப் பார்ப்பது இல்லை.