செவ்வாய், 29 நவம்பர், 2011

முல்லை பெரியாறு அணை-த.நா.பொறியாளர் சங்கத்தின் குறும்படம்

முல்லை பெரியாறு அணை 
பிரச்சனையும் தீர்வும் 


  • 30ஆண்டு கால இப்பிரச்சனையின் உண்மை பின்னணி என்ன?
  • என்னதான் தீர்வு?
    இவற்றை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்வதுடன் தமிழக மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி
"தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்க"த்தால் தயாரிக்கப்பட்ட இக்குறும்படத்தை அனைவரும் பாருங்கள்.

தமிழன் இந்திய ஏகாதிபத்தியத்தால் தொடர்ந்து வஞ்சிக்கப் படுவதை உணர்ந்து இழந்த,இழக்கப்போகும் உரிமைகளை மீட்டு எடுக்க பொங்கி எழுவோம்!!
The Mullai Periyar DAM Problem from Veera Elavarasu on Vimeo.


நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை.

கேரள மக்கள் அனைவரும் முழுமூச்சில் மீண்டும் தமிழர்களுக்கு எதிராய் அவதூறையும் விஷமப் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார்கள்.முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று இன்று இடுக்கி மாவட்டத்தில் முழு அடைப்பு நடத்தியிருக்கிறார்கள்.கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்தித்து அணை குறித்து முறையிட்டிருக்கிறார்கள்.பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேரள உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.மேலும் காந்தி சிலை முன்பு தர்ணாவில் இறங்கியுள்ளார்கள்.டெல்லியில் டேம் 999  என்னும் விஷமப் படத்தை பத்திரிக்கையாளர்கள் உட்பட அனைவருக்கும் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்கள். இதன் மூலம் கேரள அரசும் அங்குள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழர்களுக்கு எதிராய் மறைமுகப் போரில் இறங்கியுள்ளனர் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.


எண்ணற்ற முறை,பல மட்டங்களில்,கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தமிழர்களுக்கு உரிய,நியாயமான தீர்வு கிட்டவில்லை என்ற நிலையில் வேறு வழியின்றித் தான், தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றம் சென்று முறையிடப்பட்டது.உச்சநீதிமன்றமும் ஏழு பேர் கொண்ட வல்லுநர் குழுவினை அமைத்து அவர்களது அறிக்கையின் அடிப்படையில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்று தீர்ப்பளித்து விட்டது.ஆனால் தீர்ப்பளித்து காலங்கள் பல கடந்தும் அதனை அமல்படுத்துவதற்கு எதிராய் இதுவரை பல முட்டுக்கட்டைகளைப் போட்டு,அதற்கு எதிராய் செயல்பட்ட கேரள அரசு இப்பொழுது நில நடுக்கத்தால் அணை உடையும் அபாயம் இருப்பதாகவும் அதனால் எண்ணற்ற மக்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் பல வழிகளில் புதிய விஷமப் பிரச்சாரத்தினை ஆரம்பித்துள்ளது.


இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் முல்லை பெரியாறு அணைக்கு எந்தச் சேதமும் இல்லை என அணையை ஆராய்ந்த பின்பு மத்திய புவியியல் ஆராய்ச்சித்துறை இயக்குனர் ஜான் மேத்யூ தெரிவித்துள்ளார்.கடல் மட்டத்தில் இருந்து முல்லை பெரியாறு அணை 2 ஆயிரத்து 889 அடியில் இருக்கிறது.ஆனால் அணை உடைந்தால் அழிந்து போகும் என கேரளத்த்தினர் கூறும் குமுளிப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 100 அடியிலும்,வண்டிப்பெரியாறு 3 ஆயிரத்து 350 அடியிலும்,பாம்பனாறு 3 ஆயிரத்து 750 அடியிலும் இருக்கிறது.இது ஒன்றே போதும் மலையாளிகள் தண்ணீரில் வடிகட்டிய பொய்யை எவ்வாறு கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள் என்பதனை நிரூபிப்பதற்கு.


தென்மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் நலனில் எங்கோ இருந்து வந்த ஆங்கிலேயன் பென்னிக்குக்கிற்கு இருந்த அக்கறையில் துளியளவு கூட கூப்பிடு தூரத்தில் உள்ள கேரள மக்களுக்கும் அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கும் இல்லை.மாறாக வெறுப்பும் குரோதமும் மண்டிக் கிடக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து மின்சாரம்,மீன்,கறி,அரிசி,உப்பு,புளி,மணல் என தொடர்ந்து சுரண்டிக் கொழுக்கின்றனர்.அங்கிருந்து கொழுத்தது போதாது என்று இங்கு வந்தும் சுரண்டுகின்றனர்.ஆனால் பதிலுக்கு தமிழக விவசாயிகளின் வாழ்விற்குத் தேவையான தண்ணீரைத் தர மறுக்கின்றனர்.தண்ணீரைத் தர மறுப்பவர்கள் தான் இங்குள்ள விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களினால் உயிர் வாழ்கின்றனர்.


சர்வ தேசியம் பேசும் கம்யூனிஸ்டுகள்ஆட்சி செய்தாலும் சரி,இந்திய தேசியம் பேசும் காங்கிரசுக்காரன் ஆட்சி செய்தாலும் சரி,இது தான் நிலை.கேரள மக்கள் தன்னை திராவிடன் என்றோ இந்தியன் என்றோ கருதுவதில்லை. மலையாளிகளாகக் கருதுகின்றனர்.


இதே நிலை நீடித்தால் அவர்களது கொட்டத்தை அடக்க இங்கிருந்து கேரளாவிற்குச் செல்லும் அனைத்துப் பொருட்களையும் தடுத்து நிறுத்தவும்,அணை இருக்கும் பகுதிகளை மீண்டும் தாய்த் தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தையும் அதிவிரைவில் நடத்த நாம் தமிழர் கட்சி தயங்காது என எச்சரிக்கிறோம்.
*******************************************************

முல்லைப் பெரியாறு; கேரளத்தின் பிடிவாதமும், தமிழகத்தின் நியாயமும்!

ந.ஜீவா-நன்றி:தினமணி -11 Dec 2011



ஒன்றுபடுங்கள்!

புனல் மின்நிலையத்துக்காக கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணைக்கு, போதுமான தண்ணீர் கிடைக்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியது என்பதுதான் இந்தப் பிரச்னையின் அடிப்படையே.
முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு ஏற்பட்டபோது, வல்லுநர்கள் குழு இந்த அணை பாதுகாப்புடன் இருப்பதைக் கூறியும்கூட, கேரள அரசு வேண்டுமென்றே அச்சம் தெரிவித்தது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் அணை பலப்படுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்குச் சேதம் ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அணையைப் பலப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை.
நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் செய்து முடித்து, முல்லைப் பெரியாறு பேபி டேம் பகுதியில் மிகச் சிறிய பணியையும் செய்து முடிக்க முற்பட்டபோது, அதை முடித்துவிட்டால் நீதிமன்றம் கூறிய அனைத்தையும் தமிழகம் செய்துவிட்டதாக ஆகிவிடுமே என்று அஞ்சி, கேரள வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு, அந்தப் பணியைத் தடுத்து வருகிறார்கள் கேரள அரசின் தரப்பினர்.
கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?
படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு எங்கே புரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம். முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய தளத்திலும் (http//player.vimeo.com/video/18283950/autoplay/1)காணக் கிடைக்கிறது.
இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளிலும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்.
முல்லைப் பெரியாறு பிரச்னையை வேண்டுமென்றே பெரிதாக்கிக் கேரளம் பீதியைக் கிளப்புவதற்கு அடிப்படைக் காரணம், இடுக்கிக்கு அதிக நீர்வரத்து ஏற்படுத்தி மின்சார உற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்பதால்தான். தமிழகம் தாங்களே இன்னொரு அணையைக் கட்டி விடுகிறோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக வேறு அணை கூடாது என்கிற கோஷத்தையும் எழுப்பி விட்டார்கள்.
29.11.2011 தினமணி தலையங்கத்தில் ஒரு பகுதி.
142 அடி தண்ணீர் தேக்குவதை உறுதி செய்யுங்கள்!
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் அதிகாரமிக்க குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு பல்வேறு வழிகளில் வலியுறுத்தி வருகிறது.
மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரின் பரிந்துரைப்படி 1980 முதல் 1994 வரை முல்லைப் பெரியாறு அணையை தமிழகம் மிகச் சிறப்பாக பராமரித்து வந்தது. இதனால் அணை புதியதுபோல உள்ளது. அதனால் தான் 2006-ஆம்
ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக அதிகரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் வழிகாட்டுதல்படி அணையின் உறுதித்தன்மை குறித்துப் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இதற்காக தமிழக அரசு ரூ. 1.38 கோடி ஒதுக்கியது.
மேலும் உங்கள் கடிதத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 22 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்திய வானியல் மையத்தின் தகவல்களின்படி கடந்த நான்கு மாதங்களில் அந்தப் பகுதியில் நான்கு லேசான நிலநடுக்கங்களே ஏற்பட்டுள்ளன. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. அதுபோல வெள்ளத்தாலும் அணை உடையும் ஆபத்து இல்லை. எந்த விதத்தில் பார்த்தாலும் அணை வலுவாக உள்ளது என்பதே உண்மை.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது. எனவே, உண்மை நிலைக்கு மாறாக மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க வேண்டியது நமது கடமையாகும்.
எனவே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதை உறுதி செய்ய வேண்டும்' என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட
ஒத்துழைப்புத் தரும்படி கேட்டு கேரள முதல்வர் எழுதிய கடிதத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய பதில் கடிதத்தின் ஒரு பகுதி.

அ.வீரப்பன்
முன்னாள் தலைமைப் பொறியாளர்,
பொதுப்பணித்துறை

முல்லைப் பெரியாறு அணை 1895 ஆம் ஆண்டு கர்னல் பென்னி குயிக் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட பின்பு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அணை பலவீனமாக இருக்கிறது என்று தொடர்ந்து சொல்லப்பட்ட குற்றச்சாட்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, 1981 முதல் 1994 வரை மூன்று முறை அணை பலப்படுத்தப்பட்டது.
24 அடி அகலம், 3 அடி உயரத்தில் 1200 நீளத்துக்கு 12 ஆயிரம் டன் எடையுள்ள கான்கீரிட் போடப்பட்டு அணை பலப்படுத்தப்பட்டுள்ளது.
அணையின் பின்புறத்தில் தாங்கு அணையாக 135 அடி உயரத்தில் 1700 அடி நீளத்தில் 33 அடி அகலத்தில் 3 லட்சம் டன் கான்கீரிட் கொண்டு பிணைக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்படும் என்ற பயத்தைப் போக்கும் வகையில் அணையின் 1200 அடி நீளத்தில் 9 அடி இடைவெளி விட்டு 4 அங்குல விட்டத்தில் 95 துளைகள் இடப்பட்டு, அதிலிருந்து கம்பிகளை இழுத்து அணையின் கீழ்மட்டத்தில் 30 அடி கீழே உள்ள பாறைகளின் உள்ளே சொருகி, அதைக் கான்கீரிட் கலவையைக் கொண்டு உறுதிப்படுத்தி 20 டன் எடையைத் தாங்கும் அளவுக்கு இறுக்கி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாட்டால் நிலநடுக்கம் ஏற்பட்டாலும், அணைக்குப் பாதிப்பு வராது. எனவே அணை முன்பைவிட 3 மடங்கு வலுவாக உள்ளது. அணை பலவீனமாக உள்ளது என்ற கேரள அரசின் கூற்று அப்பட்டமான பொய்யாகும்.
நிலநடுக்கம் தொடர்பாக இந்திய தர நிர்ணயம்
2002 - இல் வெளியிட்ட தகவல்படி முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணை, சென்னை நகரம் உள்ளிட்டப்பகுதிகள் மண்டலம் - 3இல் உள்ளன. அதாவது 3.5 முதல் 4.2 வரை ரிக்டர் அளவுகோலில் நிலஅதிர்வு - நிலநடுக்கம் பதிவாகும் பகுதிகள் எனக் கூறுகிறது. இந்த நில அதிர்வால் அணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அப்படியே அணை உடைந்தாலும், அந்த நீர் இடுக்கி அணைக்குத்தான் செல்லும்.
இங்கே கவனிக்க வேண்டியது பெரியாறு அணை கடல் மட்டத்திலிருந்து 2861அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. பாம்பனார் 3402அடி, ஒலப்பாறை 3648 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆனால் கீழே இருக்கும் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மேலே உள்ள பகுதிகளுக்குப் பாயும் என்று நீரியல் விதியையே கேரளம் மாற்றிக் கூறுகிறது.
மேலும் அணையின் பலம் பொறியியல் ரீதியான ஒன்று. பொறியாளர்கள் பார்வையில் அணை உடையவே உடையாது. கேரளத்தைச் சேர்ந்த பொறியாளர்களிடம் விவாதிக்கவும் தயாராகவும் இருக்கிறோம்.
1976 ஆம் ஆண்டில் முல்லைப் பெரியாறு அணையின் கீழே 50 கி.மீ. தூரத்தில் இடுக்கி அணையை 555 அடி உயரத்தில் கேரள அரசு கட்டியுள்ளது. இது முல்லைப் பெரியாறு அணையைவிட மூன்றரை மடங்கு பெரியது. முல்லைப் பெரியாறு அணையின் கொள்ளளவைவிட 7 மடங்கு அதிகம்.
ஆனால் இடுக்கி அணை நீர்ப்பாசன அணை அல்ல. புனல் மின்சாரம் தயாரிப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள அணை. ஆனால் அதற்குத் தண்ணீர் முல்லைப் பெரியாறு அணையிலிருந்துதான் வர வேண்டும். தண்ணீர் வராவிட்டால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. எனவே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட உயரத்தைக் குறைத்தால்தான் இடுக்கி அணைக்குத் தண்ணீர் கிடைக்கும். இதற்காகவே பல பொய்யுரைகளை கேரள அரசு பல காலமாகப் பரப்பி வருகிறது.
23.10.1979 மலையாள மனோரமா இதழில் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது என்று எழுதப்பட்டிருந்தது.
அதற்குப் பின்பு அணையின் நீர்மட்டம் 152 அடி உயரத்திலிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை இவ்வளவு பலமாக இருந்தாலும், கேரள அரசு அணை பலவீனமாக உள்ளது என்று தொடர்ந்து கூறி வருகிறது. வழக்கும் தொடர்ந்தது.
27.2.2006 இல் உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்காக கேரள அரசு தனது சட்டப் பேரவையில் "கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (சட்ட திருத்த) மசோதா 2006' என்ற பெயரில் நிறைவேற்றி உள்ளது. இதன்படி கேரள அரசின் அனுமதி இல்லாமல் கேரளத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டத்தை பிற மாநில அரசுகள் அதிகரிக்கக் கூடாது. இது உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை மீறிய செயலாகும்.
மேலும் முல்லைப் பெரியாறு அணையில் உள்ள தமிழகத்தின் பாரம்பரிய உரிமையைப் பறிக்க வேண்டும் என்பதற்காக அது 3 விதமான தடைகளை எழுப்ப முயற்சி செய்கிறது.
1886}இல் திருவாங்கூர் சமஸ்தானத்துடன் பிரிட்டிஷ் அரசாங்கம் செய்து கொண்ட 999 ஆண்டு ஒப்பந்தத்தை செல்லாததாக்குவது.
இரண்டாவதாக, நிலநடுக்கம் உள்ள பகுதி என்று கூறி அணையை உடைக்க முயற்சிப்பது. அல்லது நீர்மட்டத்தைக் குறைக்க நினைப்பது.
மூன்றாவதாக, பெரியாறு பகுதியில் வனவிலங்குகளுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறுவது.
இதில் பிரிட்டிஷார் காலத்திய 999 ஆண்டுக்கான ஒப்பந்தம் அரசியல் சட்டப்படி சுதந்திரம் அடைந்த பின்பும் தொடரும் என்பதே உண்மை.
சுற்றுச் சூழல் அமைச்சகம் செய்த ஆய்வின்படி முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அங்குள்ள மரங்களுக்கும், விலங்கினங்களுக்கும் நன்மையே ஏற்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் மேம்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் உச்சநீதிமன்றத்தால் அதிகாரம் அளிக்கப்பட்ட ஆனந்த் கமிட்டியிடம் கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு 366 மீட்டர் கீழே புதிய அணை ஒன்று கட்டப் போவதாகத் திட்ட அறிக்கை ஒன்றை அளித்தது. அந்த அணையில் இருந்து போதுமான தண்ணீர் இருக்கும்பட்சத்தில் தண்ணீர் பிறமாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று பக்கம் 23 இல் கூறப்பட்டுள்ளது. ஆனால் பக்கம் 37 இல் தமிழகத்துக்கு முல்லைப் பெரியாறு அணையில் எந்தவிதமான பாரம்பரிய உரிமையும் இல்லை என்று கூறியுள்ளது. இதன்மூலம் நமக்குத் தெரிவது என்னவென்றால் தமிழகத்துக்குப் பாரம்பரியமாகக் கிடைத்துவந்த நீரைத் தராமல் தடுத்து நிறுத்துவதற்கான சதித் திட்டத்தை கேரள அரசு தீட்டியுள்ளது என்பதுதான்.
இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. 2 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு நீரின்றிப் போய்விடும். 10 லட்சம் மக்களுக்குக் குடிநீர் கிடைக்காமல் போய்விடும்.
தமிழக மக்கள் கட்சி வேறுபாடின்றி இந்தப் பிரச்னையில் ஒன்றுபட்டு தங்களுடைய எதிர்ப்பை வலிமையாகக் காட்டுவதுதான் கேரள அரசின் சதித் திட்டத்தை முறியடிக்கும் ஒரே வழி.
வைகோ
பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணை 7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் உடையாத அளவுக்குப் பலம் வாய்ந்தது. கேரளத்துக்கு அரிசி உள்பட அனைத்து உணவுப் பொருள்களையும் வழங்கி வருகிறோம். ஆனால் கேரளம் இதுவரை நியாயமாக நடந்து கொள்ளவில்லை. முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம் என கேரளம் கூறுகிறது. அப்படி உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும். இந்திய ஒருமைப்பாட்டைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு.
ஆர்.காந்தி
நிலம், நீர் சங்கம்

கேரள அரசியல்கட்சிகளின் சுயநலத்துக்காக முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை அரசியலாக்கப்படுகிறது. கேரளத்தவர் பரப்பும் பொய்ப் பிரச்சாரத்தை தகர்க்க நாம் தயங்கக் கூடாது. இறுதிவரை தமிழர்கள் ஒன்றிணைந்துப் போராட வேண்டும்.
பழ.நெடுமாறன்
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தில்லியில் இரு மாநில அதிகாரிகள் மத்தியில் நடைபெறவிருந்த பேச்சு வார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை எனத் தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.
இருமாநில முதல்வர்களையும் அழைத்துப் பேச வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங் கேரள முதல்வரை வலியுறுத்தி இருப்பதும் சூழ்ச்சிகரமானது. மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டால், அதைக் காரணம் காட்டி உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்க இருப்பதைத் தடுத்துவிடலாம் என்ற திட்டத்துடன் கேரளம் விரித்த வலையில் சிக்க மறுத்த தமிழக அரசைப் பாராட்டுகிறேன். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை எந்தக் காரணத்தைக் கொண்டும் முதல்வர்களுக்கு இடையிலோ, அதிகாரிகள் மட்டத்திலோ, எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இணங்கக் கூடாது.
செல்வா
பொறுப்பாளர், தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்.

முல்லைப் பெரியாறு அணை, கம்பம், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைப் பாதுகாக்கக் கட்டப்பட்டதாகும். அந்த அணை இருக்கும் இடம் தமிழகத்துக்குச் சொந்தமானது என்பதற்கான வரலாற்றுச் சான்று உள்ளது. எனவே அந்த இடத்தை மீட்க அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம்.
அத்துடன் தமிழ்நாட்டின் எல்லைகளை மறுவரையறை செய்து வரலாற்றுப்பூர்வமான நமது தமிழக பகுதிகளை மீட்க வேண்டும்.
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
கேரள மக்கள் பலர் தமிழகத்தில் வணிகம் செய்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து அரிசி, சிமெண்ட், மணல், வைக்கோல், மீன், இறைச்சி, காய்கறிகள் என அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் பெற்றுக்கொள்ளும் கேரளம், கொஞ்சமும் மனிதாபிமானமற்ற முறையில் நதிநீர்ப் பிரச்னைகளில் நடந்துகொள்வதுதான் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
(Mullai periyar dam problem and solution Documentary Film by Tamilnadu Engineers Association Mullai periyar real problem)

சனி, 26 நவம்பர், 2011

"பாலை" சொல்லும் நீதி-"பாலை"-திரை விமர்சனம்

தமிழர்கள் பார்க்க வேண்டிய படம் மட்டும் அல்ல;
கற்கவேண்டிய பாடம்!!!



செம்மை வெளியீட்டின் முதல் வெளியீடு செம்மையாக உள்ளது,பாராட்டுக்கள் இளம் இயக்குனர் தோழர் ம.செந்தமிலனுக்கு (த.தே.பொ.கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களின் புதல்வன் இவர்)

"இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்" உள்ள கதை எனக் கூறப்பட்டாலும்,படத்தை பார்க்கும் போது இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஈழத்தில் முல்லைத்தீவில் நடந்த கதை போலவே உள்ளது. ஒரே வித்தியாசம்,உண்மைக் கதையில்,ஈழத்தில் வந்தேறிகளிடம் நாம் பின்னடைவு பெற்றோம்.

ஒரு போரில் வெல்ல வீரம் மட்டும் போதாது; சூதும் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார் இயக்குனர். அது தெரியாத வேள்ளேந்தியாய் இருந்தததால் தான் நாம் முள்ளி வாய்க்காளில் பராரியாய் நிற்கின்றோம் இன்னும்.

தூங்கும் முயல் தன் காலடி ஓசை கேட்டு தூக்கம் கலைந்து விடக்கூடாது என மெல்ல அடியெடுத்து வைக்கும் தமிழினம் எதிரி இடத்தில் வல்லினமாய் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் படம்.

காஞ்சிவரத்தில் நடித்த ஷம்மு இதில் கதாநாயகி. ஆனால் கதையின் நாயகன் படத்தின் களம். தத்ரூபமான கள கலை அமைப்பு,ஒளிப்பதிவு நம்மை பழங்காலத்திற்கே இட்டுச் செல்வது உண்மை. 
பாடல்கள் மூன்றும் அருமை. 

பின்னணி இசையும்,படத்தொகுப்பும் சொதப்பல். பின்னணி இசை குறைபாட்டால், உணர்வுகளை கலைஞர்களின் முகம்,வசனங்களை கொண்டே பயணிக்க வேண்டி உள்ளது. படத்தொகுப்பு பலகீனத்தால் என்ன நடக்கிறது என்பதை சில இடங்களில் சிரமப் பட்டு புரிந்து கொள்ள நேரிடுகிறது. யார் ஆயல்குடி,யார் முல்லைக்குடி என்பதை பகுத்து அறிய சில இடங்களில்,சண்டைக் காட்சிகளில் முடியாமல் போய்விடுகிறது.

"இங்கு போர் சிங்கத்துக்கும்  புலிக்கும் .சிங்கம் வந்தேறி கூட்டம்.கூட்டமாக தாக்கும்,பசி பொறுக்காது.புலிகள் பதுங்கி தாக்கும்; தனித்து தாக்கும்,பசி பொறுக்கும்" "...தலைவர் எங்கே எங்கேன்னு என்னை தேடாதே,எதிரி எங்கேனு அவனை தேடு.இதெல்லாம் செஞ்சா நீ புலி"என்கிற வசனங்கள் நம்ம மெய் சிலிர்க்க வைக்கிறது.
..

"போர் எதற்கு?
எதிரியை தாக்க..
இல்லை..வீழ்த்த! -நல்ல நறுக்குத் தெறித்த வசனங்கள்.

இந்திய இறையாண்மையும்,சிங்கள இனவெறியும் நம் இனத்தை அளிக்க உறுதி பூண்டுள்ள இந்த நேரத்தில் வெளிவந்துள்ள இந்தப் படம் சமகால முக்கியத்துவம் பெறுகிறது.

"பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் ’இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’”- இயக்குனர் செம்மல் பாலு மகேந்திரா

இது போன்ற படங்களை நாம் ஆதரிக்க வேண்டும்.அப்போது தான் தமிழ் கலாச்சாரமும்,நம் இனமும் மொழியும் பாதுக்காக்கப்படும்.இது போன்ற படைப்புகள் நமது நாகரீகத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செ(சொ)ல்லும் முயற்சிகள்!!!





(paalai film review,trailer,songs paalai songs,palai songs பாலை பாடல் பாலை பாடல்கள் விமர்சனம்)

செவ்வாய், 22 நவம்பர், 2011

DAM(n)999-தமிழர்கள் ஒன்று திரண்டு கிழிப்போம் வெள்ளித்திரையை...!


155 அடி உயரம் உள்ள முல்லை பெரியாறு அணையில் 142அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்ற உச்ச நீதி மன்ற ஆணையை காங்கிரசு களவாணிகள் ஆளும் மத்திய அரசுடன் இணைந்து குப்பையில் போட்ட மார்க்சிய சனநாயகவாதிகள் அணையை உடைக்க இந்த முறை கலைத்தாயின் சேவையை நாடி உள்ளனர். 


நிருபமா மேனன் ராவ்,சிவசங்கர மேனன், ஏ.கே.அந்தோணி, எம்.கே.நாராயணன் என்கிற தமிழர்களுக்கு எதிரான மலையாள துரோக கும்பல் வரிசையில் சோகன் ராய் என்கிற இன்னொரு கரையானின் முயற்சியால் வெளிவர இருக்கும் படம் தான் "டாம் 999".  அணை உடைந்தால் தமிழகம் அழிந்து விடும் என்று இந்த விளக்கெண்ணெய் நம் மீது பரிதாபப்படுகிறதாம்;அச்சப்படுகிறதாம்.அதை விளக்க இந்த படமாம்.

இந்த படத்திற்காக அவர்கள் தூக்கி எறிந்த எலும்பு துண்டுகளை கவ்விய நமக்கு அறிமுகமான சில "___"கள் 
  1. தோட்டா தரணி-கலை இயக்குனர்
  2. வி.ஸ்ரீனிவாஸ் முரளி மோகன்-வரைகலை(எந்திரன்,சிவாஜி
  3. அனல் அரசு-சண்டைக் காட்சி
  4. பின்னணி குரல்
    ஹரிஹரன்
    ஜெயச்சந்திரன்
    கே.எஸ்.சித்ரா
  5. ஆஷிஸ் வித்யார்த்தி,விமலா ராமன் 

1895இல் ஆரம்பிக்கப்பட்டு கட்டப்பட்டு வந்த நிலையில் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பிறகு மேற்கொண்டு நிதி ஒதுக்க ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த ஆங்கில பொறியாளர் ஜான் பென்னி குக்  தனது சொத்து முழுவதையும் விற்று அவரது தியாகத்தால் உருவானது இந்த வரலாற்று சிறப்பு மிக்க அணை. ஆனால் இங்கு விளையும் காய்கறிகளையும், அரிசியையும், உற்பத்தியாகும் நெய்வேலி மின்சாரத்தையும் நம்பி வாழும் மலையாளிகள்அணையை உடைத்து தமிழர்களுக்கான தங்கள் நன்றிக்கடனை திருப்பி செலுத்த விழைகின்றனர். என்ன இருந்தாலும் அது ஊசிப் போன இந்திய ரத்தம் தானே?!அவர்களிடம் இருந்து இதற்கு மேலான நாகரிகத்தை எதிர்பார்ப்பது நமது அறிவீனம்.
முல்லைப்பெரியாரை இடிக்க கேரள அரசின் மறைமுக உதவியோடும், மலையாளிகளின் நிதிஉதவியோடும் தயாரிக்கப்பட்ட திரைப்படம் dam999 - திரைஇட இருந்த பிரிவியூ தியேட்டரை, படச்சுருள்களை அடித்து நொருக்கிய மதிமுக-வின் முன்னோடிகள் கைது செய்யப்பட்டு விருகம்பாக்கத்தில் திருமணமண்டபத்தில் வைத்திருந்தபோது எடுத்தபடம்.. கலங்காத மனதோடு தமிழினத்தின் உணர்ச்சியை வெளிக்காட்டிய சந்தோசத்தோடு புகைப்படத்தில்..
"வெள்ளுடை மாவீரர்கள்"


 "ம.செந்தமிழன் இயக்கும்,மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் கதையான "பாலை" என்ற திரைப்படத்திற்கு ஒரு மாட்டை கொன்றதாக கூறி இரண்டு மாதங்களுக்கு மேல் தரச் சான்றிதழ் தர இழுத்தடித்த இந்திய யூனியன், இரு இனங்களுக்கு இடையில் பகை உணர்ச்சியை தூண்டும் இந்த படத்திற்கு மட்டும் எப்படி தரச் சான்றிதழ் தந்தார்கள்"-என தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை நகர செயலாளர் தோழர் தமிழ்ச் செல்வன் எழுப்பும் கேள்விக்கு பதில்...தமிழனை தாக்க,அந்த இனத்தை அழிக்க யார் முயற்சி எடுத்தாலும் இந்தியா முன்னின்று சென்று ஆதரிக்கும் என்ற வாதத்தையே வலியுறுத்துகிறது. 

தமிழகத்தில் எந்த ஒரு திரை அரங்கிலும் இது திரை இடப்பட்டாலும் அது தமிழனுக்கு இழுக்கு.

இனி தமிழன் அறம் வழி சென்று எதையும் சாதிக்க இயலாது என்பதையே இந்திய யூனியன் நமக்கு திரும்ப திரும்ப கற்றுத் தரும் பாடம் ஆகும்.

ஓ..உலகத் தமிழர்களே...நாம் எப்படி நம் மீது,நம் மொழி மீது,நம் இனம் மீது,நம் கலாச்சாரம் மீது தொடுக்கப்படும் இந்த ஆரிய வெறியர்களின் போரை கைகொள்ள போகிறோம்?

சபரி மலைக்கு நடையாய் நடந்து நீங்கள் காட்டுவது பக்தி அல்ல-நமது மூடத் தனம்.காணிக்கை செலுத்துவது நமது வியர்வை துளிகள். "உங்களை யாருடா வந்து சாக சொல்றாங்க இங்க?"என்று அவன் சென்ற முறை கேட்டது உங்கள் அறிவுக்கு என்று எட்டும்?

இந்த இயக்குனர் அளித்துள்ள பேட்டியில் கூறுகிறான்-"உலகில் கட்டப்பட்ட பெரும்பாலான அணைகள் எல்லாம் இரண்டாம் உலகப்போருக்கு பின்னே கட்டப்பட்டவை;கான்க்ரீட் தத்துவ அடிப்படியில் கட்டப்பட்ட அவைகளின் ஆயுள் காலம் 50ஆண்டுகள் தான்.எனவே நாம் (தூங்கிக் கிடக்கும்?)மக்களிடம் பரப்புரை செய்து விழிப்புணர்வு கொண்டுவரவேண்டும்" என்று. அட முட்டாப் பயலே..முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது 1896இல் டா.இது கூட தெரியாமலா நீ பரப்புரை செய்யப் போகிறாய்?
Damn...
"சந்தனக்காடு" தொடர் மற்றும் மகிழ்ச்சி திரைப்பட இயக்குனர் கௌதமன் மற்றும் உதவி இயக்குனர்களின் டாம்999 க்கு எதிரான போராட்டம்.
தமிழர்கள் உங்களுக்கு என்றும் நன்றிக் கடன்பட்டவர்கள் ஆவோம் தோழர்களே!!!
 
முல்லைப்பெரியாறு அணை குறித்து பொய் பிரச்சாரம் மேற்கொள்ள தயாரிக்கப் பட்டு இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு திரையடப் பட இருந்த புரளி கிளப்பும் திரையிடலைத் தடுத்து நிறுத்திய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடலேறுகள்


தொல்.திருமாவளவன் அறிவிப்பு!


பின் நிகழ்வு:23 நவம்பர் 2011 
தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் முல்லை பெரியாறு அணையை தகர்க்க திட்டமிடும் நாசகார சக்திகளின் ஆதரவு படமான
"டாம் 999" திரைப்படத்தை 
தமிழ்நாட்டில் திரையிட போவதில்லை என்று அறிவித்த
"தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சங்க"
பொதுச்செயலாளர் திரு பன்னீர்செல்வம் அவர்களுக்கு
தமிழ் மக்கள்
சார்பில்
கோடான கோடி நன்றிகள்!!!!

பின் நிகழ்வு:24 நவம்பர் 2011 

தமிழர்களின் போராட்டத்தை மதித்து தமிழகம் முழுவதும்
இப்படத்தை திரையிட தடை விதித்த,
(சற்று தாமதமான முடிவு ஆனாலும்)
தமிழக முதல்வருக்கு
நன்றிகள்!!!




முல்லைப் பெரியாறு அணை - உடைகிறது ஒருமைப்பாடு!





நன்றி:கீற்று.காம் 
‘‘தமிழக கிராமங்களில்தான் இன்னமும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப்பொருட்கள் கேரளாவுக்கு வருகின்றன. பணப்பயிர்களான தென்னையும், கொப்பரையும் பயிர் செய்யும் மலையாளிக்கு, அரிசி முதல் அத்தனையும் தமிழகத்தில் இருந்துதான் வருகிறது. ஆனால், அதே விவசாயிகளின் விவசாயத்துக்கு பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் விட மறுக்கிறது கேரளம். ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. அப்படி வீணாகும் தண்ணீரைக் கூட, தமிழக விவசாயிகளுக்குத் தர மறுக்கும் கேரள அரசை கண்டனம் செய்கிறேன். இப்போது பவானியின் குறுக்கே அணை கட்டி, தமிழக விவசாயிகளுக்கு மேலும் நெருக்குதல் தர திட்டமிடுகிறது கேரளம். காவிரி, பெரியாறு, பவானி என சுற்றிச் சுற்றி தண்ணீர் தராமல், தமிழர்களை மூச்சுத் திணறச் செய்யும் இவ்வளவு சதிச்செயல்களுக்கும் மத்தியில், நெய்வேலியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதையும் அருகாமை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் தமிழனின் உயர்ந்த குணம்...’’
- கேரளாவின் அடுக்கடுக்கான அத்துமீறல் நடவடிக்கைகள் கண்டு கொந்தளித்து வெடித்த நமது குமுறல் வார்த்தைகள் அல்ல இவை. மலையாள மொழியின் ஆகச்சிறந்த எழுத்தாளரும், தேசிய அளவில் குறிப்பிடத்தகுந்த இலக்கியவாதியும், சாகித்ய அகாடமி உள்ளிட்ட உயர் விருதுகள் பெற்றவருமான பால் சக்காரியாவின் வார்த்தைகளே இவை. பால் சக்காரியா மட்டுமல்ல... மனச்சாட்சி உள்ள மலையாளிகள் அத்தனை பேரின் குரலும் இதுவே.
கேரளம் கொஞ்சம் வித்தியாசமான மாநிலம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிச அரசு அமைந்த உலகின் முதல் நிலப்பரப்பு என்ற பெருமை அதற்கு உண்டு. ‘எல்லாமும்... எல்லோருக்கும்’ என்ற உலக சகோதரத்துவம் பேசும் உயர்ந்த கம்யூனிசக் கொள்கைகளை குழிதோண்டிப் புதைத்து, குறுகிய இன, மொழிவாத அரசியலாக கம்யூனிசத்தை மாற்றிய தோழர் கூட்டம் வாய்க்கப்பெற்ற பெருமையும் அந்த மாநிலத்துக்கே சொந்தம். 
முல்லைப் பெரியாறு என்கிற ஒரு அணை விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு 1979ம் ஆண்டில் இருந்து அந்த மாநில அறிவுஜீவிகள் அடித்து வரும் கூத்து... ஜனநாயக, சகோதரத்துவத்தை ஏற்றுக் கொள்ளும் யாராலும் சகித்துக் கொள்ளமுடியாதது. தமிழகத்தின் சிவகிரி மலைப்பகுதியில் பெரியாறு நதியாக உற்பத்தியாகி, தமிழக நிலப்பரப்புக்குள் 16 கிமீ தூரத்துக்கு ஓடி முல்லை ஆற்றுடன் கலந்து... முல்லைப் பெரியாறு அணையாக இருக்கிற அந்த நிலப்பகுதியும் ஒரு காலத்தில் தமிழகத்துக்கு சொந்தமானதே. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கிற காலத்தில் நடந்த நயவஞ்சக நாடகங்கள், அந்த மலைப்பிரதேசங்களை நம்மிடம் இருந்து நகர்த்திச் சென்று விட்டன.

வெள்ளி, 18 நவம்பர், 2011

கவிதை:முள்வேலி


தமிழா...உன்னை சுற்றி முள்வேலியில்
ரத்தம் சொட்டுகிறது.
தன்னை காயப்படுத்திவிட்டாய் என
வேலி போட்டவனே
அதற்கும் உனை தண்டிக்கிறான்...
"பிழை"த்த நீதியை காத்ததாக
அண்டை நாட்டின் கரகோசம்
உன் அழுகை சத்தத்திற்கும்
அணை போட்டது...!!!
வாழ்க ஜனநாயகம்...வாழ்க இந்தியா...!!!

திங்கள், 14 நவம்பர், 2011

தினமலரை புறக்கணிக்க இன்னுமொரு காரணம்...!

தோழர்களே...

நம் தமிழ்நாட்டில் தமிழனை அண்டி பிழைப்பு நடத்தும் இவனுக்குIதினமலருக்கு- விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ள வினவு தளத்தின் கட்டுரையை படிக்கவும்) இவ்வளவு கொழுப்பு என்றால்,தன்மான தமிழர்கள் நாம் என்ன சுரணைகெட்டவர்களா...

செங்கொடியின் தியாகத்தை கொச்சை படுத்தியவனுக்கு பாடம் கற்பிக்க தமிழினம் மறந்ததால் இந்த முறை ராஜீவ் ஜோடிக்கப்பட்ட கொலை வழக்கில் தடா சட்டத்தின் படி வன்முறை அடிப்படையில் வாங்கப்பட்ட வாக்குமூலத்தை ஆதாரமாக கொண்டு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை கொட்டடியில் தம் வாழ்நாளை கழித்து வரும் மூன்று அப்பாவிகள் மீது பாய்ந்துள்ளான் இந்த முகம் காட்ட துணிவில்லாத பேடி.

வழிப்பறி செய்து மாட்டிக் கொண்ட கோவிந்தசாமியை,ஊரை கொள்ளை அடித்து உலையில் போட்ட ஜெயலலிதாவுடன் ஒப்பிட தெரியாத,தெரிந்தும் துணிவில்லாத கோழை.. அப்பாவிகளோடு ஒப்பிட்டு உள்ளான்.யாரை யாரோடு ஒப்பிடுவது என்று கூட தெரியாத இவன் தினசரியின் பொறுப்பாசிரியராக இருப்பது கேவலம். இவன் எப்படி தன் தாயையும் தாரத்தையும் வேறுபடுத்தி பார்ப்பான்?

இந்தியாவில்,ஏன் உலக அளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கைதிகள் அனைவரும் தனக்காக வழக்குரைஞர் வைத்து வாதிட வகையற்ற ஏழைகள் கூட்டமாகத் தான் இருக்கும். வசதி படைத்தவனாக இருந்திருந்தால் விவாதம் எடுத்துரைக்கும் வழக்கறிஞருக்கும், தீர்ப்பு சொல்ல வேண்டிய நீதிபதிக்கும் அது என்ன வழக்கு என்பதே மறந்து போகும் அளவிற்கு அப்பீல் மேல் அப்பீல் வாங்கி 109 வாய்தா வாங்கி சட்டம் தன் "கடமை"யை ஆற்ற வாய்ப்பளித்து இருப்பார்கள். இந்த நாட்டில் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று இன்னொரு முறை சொல்லாதீர்கள்.

கோவிந்தசாமிக்கு மட்டும் அல்ல..உன் மனைவியையோ,உன் மகளையோ கதற கதற கற்பழித்து மரண தண்டனை வழங்கப்படும் ஒருவனுக்கும் நாங்கள் தூக்கு தண்டனை வேண்டாம் என்று தான் கோருகிறோம். சங்கரராமனை கொலை செய்த பெரியவாளுக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டால் அதையும் எதிர்ப்பது தான் தமிழர் நிலை.இதை கூட புரிந்து கொள்ளாத அரைவேக்காடு, கிசு கிசு எழுதும் அமெச்சூர் பத்திரிக்கைக்காரன் எல்லாம் கட்டுரை எழுதினால் இப்படி தான் எழுதுவான்.

பிறரை சீண்டி உன் பத்திரிக்கையை விற்க வேண்டிய நிலையில் இருந்தால் உன் குடும்பத்தினர் குளியலறை காட்சியை அட்டைப்படத்தில் போட்டு வியாபாரத்தை பெருக்கலாமே..என்ன..நான் சொல்வது..சரியா?
வாருங்கள்..அவன் முகநூலில் சென்று நம் கண்டனத்தை எழுப்புவோம்...

http://www.facebook.com/pages/Dinamalar/109500835742774


தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!


13.11.2011 தினமலரில் அதன் சிறப்பு நிருபர் பெயரில் எழுதப்பட்ட “செந்தமிழர்கள் கொந்தளிக்காதது ஏன்?” என்றொரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள். அதை நீங்களே ஒரு முறை படித்துவிட்டு வாருங்கள், விரும்பாதவர்களுக்கு அதன் சுருக்கம் இங்கே:
அதில் 23 வயது சவுமியா எனும் அழகான கேரளப் பெண்ணை ஓடும் ரயிலில் வன்புணர்ச்சி செய்து கீழே தள்ளிக் கொன்ற கோவிந்தசாமி என்ற குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்கும் விவரத்தை தருகிறார்கள். பின்னர் அந்த கோவிந்தசாமி விருத்தாசலத்தைச் சேர்ந்த பச்சைத் தமிழன், மாற்றுத்திறனாளி, தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் மீதான மரண தண்டனையை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டுமல்லவா என்பதை போற்றுவது போல இழிவுபடுத்தும் வஞ்சப் புகழ்ச்சி பாணியில் எழுதியிருக்கிறார்கள்.
தினமலரின் நோக்கம் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதான தூக்கை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை இங்கே பொதுப்புத்தியில் ஒரு சென்டிமெண்டான விசயத்தை வைத்து இழிவுபடுத்துவதுதான். மரணதண்டனை வேண்டாமென்று கோருபவர்கள் இத்தகைய கொடூரமான காமப் பொறுக்கியை காப்பாற்ற குரல் கொடுப்பார்களா என்று கேட்பதன் மூலம் அந்த அழகான கேரளப் பெண்ணின் அனுதாபத்தை வைத்து ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருக்கும் மூவரை வில்லனாக்குவதுதான் தினமலரின் நோக்கம்.
அதே நேரம் கூடுதலாக தமிழன், மாற்றுத் திறனாளி, தலித் என்ற விவரங்களின் மூலம் தினமலரின் பார்ப்பன விழுமியங்களை நிலைநிறுத்துவது ஒரு போனஸ் நோக்கம். அதிலும் அந்த கோவிந்தசாமி தாழ்த்தப்பட்டவர் என்பதால் வயிற்றுப்பிழைப்புக்காக சிறு திருட்டுகள் செய்து இப்படி உணர்ச்சிவசப்பட்டு ஒரு தவறை செய்து விட்டார், அவரைக் காப்பாற்றுங்கள் என்று நயவஞ்சமாக எழுதுகிறார்கள். அதே போல இந்துத்வ இந்திய உணர்வுக்கு சேதாரம் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழுணவர்வை குறி வைத்து தாக்குகிறார்கள்.
என்ன எழுதி என்ன பயன்? தினமலர் உருவாக்கி வைத்திருக்கும் பிற்போக்கான வாசகர் வட்டம் இந்த வஞ்சப் புகழ்ச்சி இகழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் தினமலர் இப்படி எழுதலாமா என்று கோபப்படுகிறது. அவர்களெல்லாம் கோவை என்கவுண்டர் மேனியாவில் மனதைப் பறி கொடுத்தவர்கள் அல்லவா, அதனால் இளம் பெண் கற்பழிப்பைத் தாண்டி மற்ற விவரங்களின் மறை பொருளை புரிந்து கொள்ள முடியாத துரதிர்ஷடசாலிகள். இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் தினமலர் கட்டுரைக்கு அருஞ்சொற்பொருளை எழுதி வாசகர் கடிதத்தில் புலம்பும் அப்பாவித் தமிழர்களுக்கு தேறுதல் சொல்லி வருவதோடு தினமலருக்கு வாழ்த்தையும் தெரிவிக்கிறார்கள்.
மூவர் தூக்கை வெறும் மனிதாபிமான நோக்கில் பேசிய பலரும், அதன் அரசியல் முக்கியத்துவத்தை பேசினால் பிரச்சினை என்று வெறும் சென்டிமெண்டாக மட்டும் மக்களிடம் கொண்டு போனவர்களும், தினமலரின் இந்த சாணக்கிய நரித்தந்திரத்தை எதிர் கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். எனினும் அவர்களின் தவறு தினமலரின் வக்கிரத்தோடு ஒப்பிட முடியாத ஒன்று.
முதலில் ராஜிவ் கொலை என்பது ஆயிரக்கணக்கான ஈழத்தமிழரின் வாழ்வுரிமை போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்று. அமைதிப்படையை அனுப்பி ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இந்திய அரசின் போர்க்குற்றத்தோடு தொடர்புடைய ஒன்று. ராஜிவ் கொலை வழக்கை வெறும் கிரிமினல் வழக்காக விசாரிக்காமல், அமைதிப்படை அனுப்பிய காலத்திலிருந்து தொடர்புடைய அரசியல் வழக்காக விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும். அதன்படி பார்த்தால் ராஜீவ் கொலை வழக்கில் குற்றமிழைக்காத மூவர் மட்டுமல்ல, அந்தக் கொலையை செய்தவர்களும் குற்றமற்றவர்கள் என்று ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். அதாவது அமைதிப்படை அட்டூழியத்தின் எதிர்விளைவுதான் ராஜவ் கொலை.
இதுவும் ஒரு பெட்டி கிரிமினலின் குற்றமும் ஒன்றா? ஆம் என்கிறது தினமலர். நாமும் அதை மறுக்காமல் தினமலர் பாணியில் வேறு சில குற்றங்களை ஆராய்ந்து பார்ப்போம்.
தினமலர் வாரமலரில் எழுதிப் புகழ்பெற்றவர் அந்துமணி எனும் இரமேஷ். இவர் தினமலர் சென்னை பதிப்பின் உரிமையாளரும் கூட. ராமசுப்பையரின் வழியில் வந்த பார்ப்பன உத்தமர். இவருக்கு இருக்கும் அதிகார செல்வாக்கை வைத்துப் பார்த்தால் இவர் நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு சில பெண்களோடு மட்டும் கொஞ்சம் விளையாடி இருக்கிறார். அதில் ஒரு பெண், தினமலர் அலுவலகத்தில் வேலை செய்தவர் போலீசில் புகார் கொடுக்கிறார். இதை பாலியல் வக்கிரம் என்று மட்டும் புரிந்து கொள்ளாதீர்கள். அந்துமணிக்கு சினிமா, மேன்மக்கள், பணக்காரர்கள், அரசியல்வாதிகள், முதலாளிகள் என்று பரந்துபட்ட தொடர்பு, வாய்ப்புகள் இருந்தும் அவர் எப்போதும் எல்லை மீறியவரில்லை.
ஏதோ போதாத காலம், கீழ் பணியாற்றும் பெண்ணிடம் கொஞ்சம் ‘லைட்டாக’ வரம்பு மீறிவிட்டார். பின்னர் புகார் கொடுத்த அந்தப் பெண்ணை மனநோயாளியாக ஆக்கி அலுவலகத்தை விட்டு துரத்தி, போலீசு உலகை கொஞ்சம் கவனித்து அந்த புகாரை குப்பைக் கூடைக்கு வீசி எறிந்து விட்டார். அவர் நினைத்திருந்தால் அந்தப் பெண்ணை கூலிக்கு ஆள் அமர்த்தி கொலையே செய்திருக்கலாம். அப்படி செய்யாதது ஏன் என்பதில்தான் அவரது ஜீனின் மாட்சிமை அடங்கியிருக்கிறது. பார்பனர்கள் எப்போதும் யாரையும் நேரடியாக கொலை செய்து பழக்கமில்லை. அதெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடும் காட்டு மிராண்டிகளான ‘கீழ்சாதி’ பயல்கள் செய்வது. அந்துமணி இரமேஷ் அய்யரை அப்படி எடை போட்டு விடாதீர்கள்.
இதற்கு மேல் அந்துமணியை கைது செய்து அந்த பாலியல் வன்புணர்ச்சிக்கான வழக்கில் விசாரித்து அவருக்கு தூக்குதண்டனை வாங்கித்தரவேண்டும் என்று யாராவது கிளம்பினால் அது தருமத்தின்படியும், மனு தர்மத்தின்படியும், பார்ப்பன நெறிப்படியும் அநீதியானதாகும். மேலும் உலகை ஆளும் ஒரு பார்ப்பனனை அப்படி தூக்கில் போட்டால் இந்தியாவே இயற்கை சீற்றத்தால் அழியுமென்பது உறுதி. ஆகவே யாரும் அந்த புண்ணியவானுக்கு தீங்கிழைக்காமல் இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!ஏற்கனவே காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதிக்கு அப்படி ஒரு அபகீர்த்தி நிகழ்ந்ததனால்தான் சுனாமி ஏற்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தார்கள். பெரியவாள் துறவறத்தோடு, பார்ப்பன தர்மத்தையும், இந்து மதத்தையும் அல்லும் பகலும் பாடுபட்டு காப்பாற்றும் திருப்பணியை செய்து வந்தவர். தொடர்ச்சியாக அந்த வேலைகளில் ஏற்பட்ட களைப்பு காரணமாக சில பல பார்ப்பன மாமிகளின் மேல் கை வைத்து விட்டார். அதுவும் கூட வன்புணர்ச்சி என்று முடிவு செய்துவிடக்கூடாது. அதெல்லாம் பெரியவாளுக்காக சில பக்தர்கள் ஒப்புதலுடன் மேற்கொண்ட பரிகாரங்கள்.
அனுராதா ரமணன் மட்டும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பெரியவாளின் செய்கையில் குற்றம் கண்டுபிடித்து பொதுவெளியிலும் அம்பலப்படுத்தினார். அவர் புராணக்கதைகள் எதையும் படித்ததில்லை போலும். ஆனானப்பட்ட இந்திரனும், விசுவாமித்திரனும் கூட இப்படி சில தருணங்களில் சஞ்சலப்பட்டவர்கள்தான். அதையெல்லாம் பரப்பிரம்மத்தின் ஆகிருதி விளையாட்டு என்று கொள்வதை விடுத்து இகலோக மனிதப்பதர்களின் நோக்கில் ஆய்வு செய்வது தவறு.
இதையெல்லாம் புரிந்து கொள்ளாத குசும்புப் பார்ப்பான் சங்கரராமன் தொட்டதுக்கெல்லாம் மொட்டைக்கடிதாசி போட்டு பெரியாவளை இம்சித்து வந்தான். பெரியவாளும் எத்தனை நாள் இந்தக் கொசுக்கடியை சமாளிப்பது? அவாளுக்கும் சமயத்தில் கோபம் வருமோ இல்லியோ? பக்தரான அப்புவையும், ரவி சுப்ரமணியனையும் கூப்பிட்டு சங்கர ராமனை போட்டுத் தள்ளுமாறு உத்திரவிட்டார். அவர்களும் பெரியவாளின் கொசுக்கடியை கோவில் வளாக்கத்திலையே அரிவாளால் அழித்து விட்டார்கள். தெய்வம் நின்று கொல்லுமென்பது பெரியவாளின் விசயத்தில் உண்மையானது.
இது பொறுக்காத சில ஜென்மங்கள் பெரியவாளை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தியது அக்கிரமம். ஆனாலும் பெரியவாள் சஞ்சலப்படாமல் தொடர்ந்து போராடி எல்லா சாட்சிகளையும் விலைக்கு வாங்கி, பிறகு நீதிபதிக்கே ரேட் பேசி வழக்கை நீர்த்துப் போகச் செய்து விட்டார். இதெல்லாம் நீதிமன்றங்களில் சகஜம் என்பது ஒரு போண்டா வக்கீலுக்கு கூட தெரியும்.
தற்போது இந்த வழக்கை மறு விசராணை செய்து குற்றத்தை நீருபித்து பெரியவாளை தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று சிலர் பேசுவது சரியா? பூலோக இந்துக்களின் சர்வலோக குருவை இப்படி ஒரு கொசுக்கடி அழிப்பிற்காக தூக்கில் தொங்க விடுவது சரியா? நேர்மையுள்ள இந்துக்கள் சிந்திக்கட்டும். ஒரு வேளை சில தமிழ் – திராவிட – கம்யூனிஸ்ட் வெறியர்கள் அப்படி பெரியவாளை தூக்கில் போடுவதற்கு காரணமாக இருந்தால் இந்தியா அழிவது உறுதி.
விருத்தாசலம் கோவிந்தசாமி வயிற்றுப்பாட்டுக்காக திருடியதும், நம்மவா முதல்வர் புரட்சித் தலைவி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததும் ஒன்றா? சில அம்மாஞ்சிகள் அப்படிக் கேட்கிறார்கள். கோவிந்தசாமி திருடி, கற்பழித்ததற்கு தூக்கா, முழு தமிழகத்தையும் மொட்டையடித்த ஜெயாவுக்கு வாய்தாவா என்று கேட்பது மாபெரும் அநீதி.
புரட்சித் தலைவி தன்னை பாப்பாத்தி என்று சட்டசபையிலேயே துணிவாக அறிவித்த வீராங்கனை. இது வரை தமிழகம் கண்டமுதல்வர்களில் ஒரே ஒரு  இந்து முதல்வர் இவர்தான் என்று வீரத்துறவி இந்து முன்னணி இராம கோபாலனால் பாராட்டப்பட்ட தாய். அவருக்கென்று குடும்பமோ, குட்டியோ எதுவும் கிடையாது. அவர் சொத்து சேர்ப்பது யாருக்காக? தமிழகத்தில் உள்ள எல்லாக் கோவில்கள்களிலும் பூஜை, புனஸ்காரங்கள், யாகங்கள், குடமுழுக்கு செய்து இந்து தருமத்தை காப்பாற்றுவதற்காகவே அப்படி சொத்து சேர்க்கிறார். அதுவும் பெரிய பெரிய முதலாளிகள் தமிழகத்தில் தொழில் துவங்கி கைமாத்தாக வைக்கும் தட்சிணையைப் போய் அப்படி சொத்து சேர்ப்பு, திருட்டு, ஊழல் என்று சொல்வது யாருக்கு அடுக்கும்?
மல்லையாவின் மெக்டோவல் தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடுவதனால்தானே சூத்திர, பஞ்சம, சண்டாளப் பயல்களுக்கு இலவச லாப்டாப்பெல்லாம் கொடுக்க முடிகிறது? அதற்கு காணிக்கையாக மல்லையா புண்ணியவான் சில போல கோடிகளை அம்மாவுக்கு கொடுத்தால் என்ன தப்பு?
பெங்களூரூ சொத்து குவிப்பு வழக்கிற்காக அம்மா எத்தனை நெடிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது? இல்லையென்றால் அந்த கோவிந்தராசனை சட்டுப்புட்டென்று தூக்கில் போட தீர்ப்பளித்த மாதிரி ஓரிரு வருடங்களில் வழக்கை முடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
ஆக பார்ப்பன அறம் தழைத்தோங்க, பூலோகம் செழித்திருக்க அந்துமணி இரமேஷ், காஞ்சிப் பெரியவாள், புரட்சித் தலைவி போன்ற ஆன்றோரை காப்பாற்றுவது மானமுள்ள ஒவ்வொரு இந்துவின் கடமை என்பதை இங்கே வலியுறுத்துகிறோம்.

(தினமலரை புறக்கணிப்போம்..Boycott Dinamalar)