பிஞ்சு குழந்தையை
அள்ளி அணைக்க
துடிக்கும்
ஆசை மனதுக்கு
தடை போட்டது
அக்கறை!
பள்ளி திறப்பிற்கு பெற்றோர் எதிர்ப்பாம்.
இந்த போராளிகள், கொரனா ஒரு
அரசியல்/ பொருளாதார சுரண்டல் என்று இத்தனை நாள் வாய்கிழிய கத்தி, போராடி மக்களிடையே
விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்துக்கொண்ட அத்தனை முயற்சிகளையும் இலகுவாக மக்களைக்
கொண்டே முறியடித்த அரசியல்வாதிகளை மெச்சுவதா? இல்லை,இந்த ஆட்டுமந்தை
கூட்டத்தை பார்த்து மெய்சிலிர்த்துப் போவதா? வாயில் துணியை
அடைத்தால் கிருமி உள்ளே போகாது என்று நம்பும் இந்த அறிவாளிகளுக்கா நீங்கள்
அடிப்படை மாற்றத்தை கட்டியமைக்கப் போகிறீர்கள்?
ஆயிரம் பீரங்கிகள் அளிக்க முடியாத
பாதுகாப்பு
அன்னையின் அரவணைப்பில்.
இவன் நிம்மதியான உறக்கத்திற்கு காரணம்
இயற்கையின் மடியா?
இல்லை தாயின் கூரைப்புடவையின்
கதகதப்பா?
"பெண்கள் எல்லாம் வேலைக்குச் செல்வதால் தான் ஆண்கள் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் எவள் சங்கிலியை அறுக்கலாம், கடை எப்போ திறப்பான் மற்றும் அதற்குப் பிறகான சமூகச் சிக்கலுக்கும் அடித்தளம்; நீ போய் சம்பாத்தித்து விட்டு வாடா என்று சொல்வது தான் பெண்ணிற்கான அதிகாரம்" என்று ஒரு தோழரிடம் சொன்னேன். "பெண் என்பவள் இல்லத்தரசி;இல்லாள். இல்லத்தை ஆள்கின்ற இந்த கடமையில் இருந்தும் , தன் மகனை நல்ல குடிமகனாக கண்காணித்து வளர்ப்பதில் இருந்தும் தவறுவதால் தான் இன்றைய காலத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கும் பெண்ணே காரணம் ஆகிறாள்" என்றேன்
அப்படிப் போய் சம்பாதிக்க ஆண் தவறினால்? என்று எதிர் கேள்வி கேட்டார். எந்த சட்டங்களும் விதி விலக்குளை கொண்டு உருவாவது இல்லை. வினையே ஆடவர்க்கு உயிரே என்பது தான் தமிழர் கோட்பாடு. கணவன் கொண்டு வந்து கொடுக்கின்ற பொருளில் குடும்பம் நடத்துபவளே சிறந்த நிர்வாகி
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
இவள் ஒரு பெரிய கற்பனைக் கோட்டையை கட்டிக்கொண்டு அதற்கு அவனை செக்கு மாடாக மாற்றுவாள் ஆனால் அங்கு மகிழ்ச்சி தங்காது; தர்க்கத்தில் தொடங்கும் வாழ்க்கை தகராறில் தான் முடியும்.
பெரும்பாலான மண முறிவிற்கு. நவீன நுகர்வுப் பழக்கங்களை வாழ்வியலாக மாற்றி அதற்கான முகவர்களாக பெண்களை தூண்டி கணவன்மார்களின் நச்சரிப்பு எந்திரங்களாக பெண்களை மாற்றும் பெருங்குழும சூழ்ச்சிகளும் உளவியல் காரணம்.
ஓர் ஆண் சம்பாதிக்கத் தவறினால், அசம்பாவிதம் காரணமாக குடும்ப தலைமைப் பொறுப்பை பெண்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் வேலைக்குச் செல்வதில் தவறு இல்லை. அப்போது படித்த பெண்கள் சும்மா இருக்க வேண்டுமா? பெண்களுக்கு படிப்பு தேவை இல்லையா என்றால் கல்வி என்பது வேலைக்கான திறவுகோல் என்பது புதிய உலகத்தின் வணிக சதி. கல்வி அறிவின் வாசல். இருண்ட வீட்டில் குடும்ப விளக்கை எற்றுவதற்கு பெண் கல்வி அவசியம்.
பெண்கட்குக் கல்வி வேண்டும்
கல்வியைப் பேணுதற்கே -பாரதிதாசன்
வேட்டையாட கற்றுக்கொள்வது காட்டில் செல்லும்போது தாக்க வரும் மிருகங்களிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவே. அதைவிடுத்து நாட்டில் உலாவும் போதும் தான் வேட்டையாடக் கற்றுக்கொண்டேன் என வித்தை திறமையை காட்டினால்? ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதும், பக்கத்துக்கு வீட்டில் வேலையில்லாமல் திண்டாடுவதும் எப்படி ஒரு சமதர்ம சமுதாயத்திற்கு வழிகோலும்?
ஆங்கிலேயர்களைப் போல நாம் பெண்களை வீக்கர் செக்ஸ் என அடையாளம் குத்துவதில்லை. அவர்களுக்கான அதிகாரமும் பங்களிப்பும் சங்க காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. சங்கப் புலவர்களில் கால் விழுக்காட்டிற்கும் மேலானவர்கள் பெண் புலவர்கள். மன்னனுக்கு அறிவுரை சொல்லவும், அவன் தவறுங்கால் இடித்துரைக்கவும், தன் ஒரே மகனை, வீட்டில் அனைவரும் போரில் மடிந்த பின்னும், போருக்கு செல்வது உன் கடமை என வீரத் திலகமிட்டு அனுப்பி வைத்த, நாடும் வீடும் வேறு வேறல்ல என்று எண்ணிய ஆளுமை உணர்வும் அர்ப்பணிப்பும் கொண்ட பெண்கள் சமுதாயம் நமது
அப்போ பெண்கள் பொதுத் தளந்திற்கு சமூக சேவை ஆற்றக்கூடாதா?
வீடு உயர குடி உயரும்; குடி உயர நாடு உயரும். நற்குடிமகன்களை உருவாக்கும் தன் முதன்மைக் கடமையில் இருந்து வழுவி நீ எந்த ஒரு பணி செய்தாலும் அது விழலுக்கு இறைத்த நீரே, அந்த கடமை செய்து நேரம் இருந்தால் சமூக சேவை ஆற்ற வா. முதன்மைக் கடமையிலே சமூக சேவையும் அடங்கிவிடுகிறது. காலப்போக்கில் அது தேவை அற்றதாகவும் ஆகிவிடும்
,,,இந்த பதில்களை கேட்டு மெளனமாக சென்றார் அவர், திரும்பி வந்து ஆணாதிக்கம், பிற்போக்காளன் எனத் தாக்குவோரோ எனத் தெரியவில்லை., அந்தத் தோழர் நீங்களாக இருந்தால்?
1. "பஞ்சத்திற்கு காரணம் விளைச்சல்
பற்றாக்குறை அல்ல-பதுக்குதலே" - அமர்தியாசென். ஆனால் புதிய சட்டம் உணவு
தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் முதலியவற்றை
இன்றியமையாத பொருளில் இருந்து நீக்கி பதுக்கலை அங்கீகரிக்கிறது
2. வேளாண் வருமானமும் இனி வருமான வரி
வரம்பில் அடக்கம்
3. குறைந்தபட்ச ஆதார விலை இனி இல்லை.
இந்திய உணவு கழகம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இழுத்து
மூடப்படும். இறுதியாக நியாயவிலைக் கடைகள் காணமல் போகும்.
4. பண்ணை விவசாயம் முறையில் உழவர் மேலும்
கடனாளி ஆக்கப்பட்டு நிலத்தை பண்ணை குளுமங்களிடம் இழந்து சொந்த மண்ணை விட்டு
அகதிகளாக போகும் அபாயம்
5. குழுமங்கள் சொல்வதை தான் விவசாயி
விளைவிக்க வேண்டும். உற்பத்தி பொருளுக்கான விலை முதலிலேயே ஒப்பந்தம்
போடப்பட்டுவிடும். ஆனால் உற்பத்தி பொருள் தரம் இல்லை என அடிமாட்டு விலைக்கு குறைக்கப்படும்.
பெரிய கார்பொரேட்டுகளை எதிர்த்து நீங்கள் நீதிமன்றம் சென்று
வழக்கு நடத்த முடியுமா? நீதி தான் கிடைக்குமா?
6. மரபணு மாற்றப்பட்ட விதைகள் தாரளாமாக
புழங்கும். நாட்டு விதைகள் மாயம் ஆகும். நிலம் மலடாகும். மக்கள் நோயாளிகள் ஆவர்.
7. வங்கிகள் விவசாய கடன் அளிப்பதில்
இருந்து இன்னும் விலகிப் போகும். அந்த இடங்களை பெருங்குழுமம் ஏற்றுக்கொள்ளும். கந்துவட்டி கட்டி கடனாளி ஆக வேண்டும். கட்ட
முடியாதவர்கள் உத்தரத்தில் தூக்கு கயிறை கட்டும் அவலநிலை உண்டாகும்
8.இதுவரை மாநில அதிகாரத்தில் உள்ளவற்றை
நடுவண் அரசு எடுத்துக்கொள்ளும். இந்த முறை மாநில அதிகாரத்தில் உள்ள வேளாண் துறையை
நேரடியாக தனியாருக்கு தாரைவார்ப்பதன் மூலம் உழவர்கள் கார்போரேட்டுக்கு
அடிமையக்கப்படுகிறார்கள்.
9. பீகார், குஜராத்தில்
ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் இல்லை.அங்கு மண்டி எனும் தனி நபர் வியாபாரிகள் .
அவர்கள் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவான விலைக்கே
கொள்முதல் செய்கிறார்கள். அந்த நிலை நாடெங்கும் இனி எதிர்காலத்தில் ஏற்படும்
-தமிழ்த் தேசியப் பேரியக்கம்
உங்களுக்கு தான் ஹீப்ரு, எங்களுக்கு அது எபிரேயம்
இப்படி மொழிகளையே தமிழ்ப்படுத்திய எங்களுக்கு
வங்கிகளில் நடப்பு பற்றுக் கணக்கு (OD/CC) வைத்திருப்பவர்களுக்கு செப் ஒன்றாம் தேதி ஆறு மாத வட்டி ஒரே நாளில் பற்று வைக்கப்படும். அப்படி சேர்க்கப்பட்ட வட்டியை 30செப் க்குள் கட்டத் தவறினால் அது வாராக்கடனாக மாறும். அதற்காக மேலாளர்களுக்கு இந்த ஆறு மாத வட்டியை ஆறு தவணைகளாக மாற்றி 31.03.2021க்குள் கட்ட வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்ய சொல்லி உள்ளது. கடந்த ஆண்டு பொரூளாதார மந்தம் காரணமாக தவறிய தவணையை தனிக்கணக்காக மாற்றி தள்ளி வைத்தார்கள். இப்போது வட்டியை தள்ளி வைக்க சொல்கிறது அரசும் சேமநல வங்கியும்.
இதனால் பொருளாதாரமும், வங்கிகளும் வீழ்வதோடு வாடிக்கையாளர்களை திரும்ப திரும்ப கடனில் சிக்கவைக்கப்பட்டு இந்த நாடு நாசமாக போகும் சூழல் மிக அருகில். 2008அமெரிக்க வங்கிகள் வீழ்ந்தது போல இந்திய வங்கிகள் வீழும். முன்பாவது வங்கிகள் சிறு சிறு வங்கிகளாக தனித் தனியாக இருந்தது. ஆனால் வங்கி இணைப்பு என்ற பெயரில் 27 வங்கிகள் 12 வங்கிகளாக மாறியுள்ள நிலையில் அரசுத் துறை வங்கிகள் வீழ்ச்சி கண் இமைக்கும் நொடியில் அமையப் போகிறது