சனி, 9 ஏப்ரல், 2011

தமிழ் மொழியை காத்திட காங்கிரசு,பா.ஜ.க.வை ஒழிப்போம்!!!

தேர்தல் களம் 2011

தமிழ் இனத்தை அழித்த காங்கிரசு-தி.மு.க. கூட்டணியை தோற்கடிப்போம் என்று சூளுரையை சிரமேற்கொண்டு இந்த தேர்தலை அனைத்து மானமுள்ள தமிழர்களும் சந்திக்கிறோம்.

அ.தி.மு.க.வில் உள்ள கூட்டணி குழப்பங்களை பயன்படுத்தி சில தேசிய கட்சிகள் என்று தங்களை பறைசாற்றிக் கொள்ளும் இந்தி ஆதிக்கக் கட்சிகள் குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்க பார்க்கின்றன.

தமிழர்களான நம்மையும், நமது அடையாளமான தமிழையும் காப்பது நமது கடமை. நமது வாக்கை அளிக்கச் செல்லும் முன் சில கசப்பான நடப்புகளையும், அவைகள் இனி நடக்காமல் தடுப்பதற்கான வழிவகைகளையும் காண்பது அறிவு.

வங்கி,ரயில்வே,வருமானவரி,தொலைத் தொடர்பு,ராணுவம், விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகள் என நடுவண் அரசு வசம் உள்ள அனைத்து துறைகளிலும் இந்தியின் ஆதிக்கம் மேலோங்குகிறது. அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு இந்தி அடிப்படை அறிவு என்பது அவசியம் என்ற வகையில் தீவிரமாக இந்தியை திணிக்கிறார்கள். ஒவ்வொரு ஊழியர்களும் தங்களுக்கு அந்த மொழியில் அடிப்படை ஞானம் உள்ளது என்று உறுதி அளிக்க வேண்டும்.அப்படி இல்லாதவர்கள் இந்தியை கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிபந்தனைகளை வைக்கிறார்கள். இந்த மொழித் திணிப்பை நடைமுறைப் படுத்த "ராஜபாஷா" என்ற ஒவ்வொரு அலுவலகத்திலும் தனித் தனி துறைகள்..இவைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக கண்காணிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு. சாதாரணமாக நீங்கள் வங்கிக்கு பணம் செலுத்தும் படிவத்தில்,காசோலை புத்தகத்தில்  கூட நமது தமிழ் மொழி இருக்காது..ஆனால் இந்தி கட்டாயம் இருக்க வேண்டும் என்பது நடுவண் அரசு ஆணை.

இப்படி இவர்கள் மொழியை திணித்து, தமிழகத்தில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்களில் கூட  தமிழ் என்பதே இல்லை என்ற அவல நிலை. இத்துணைக்கும் காரணம் காங்கிரசும், இந்தித் தீவிரவாத கட்சியான பாரதீய ஜனதா கட்சியும். இவர்களை தமிழகத்தில் வளர விட்டால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கூட தமிழ் புறந்தள்ளப்பட்டு இந்தி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிடும். 

தென்னிந்தியாவில் ஆந்திரா,கர்நாடக வரை தனது அக்டோபஸ் கரங்களை விரித்து அனைத்து பண்டைய மொழிகளையும் கபளீகரம் செய்து விட்டது இந்த அரை நூற்றாண்டு மொழி.இப்பொழுதே அனைத்து தனியார்  பள்ளிகளிலும் , "கேந்திரிய வித்யாலயம்"களிலும் இந்தி மொழி கட்டாயப் பாடம் ஆகிவிட்டது.  காங்கிரசையோ,பா.ஜ.க.வையோ அல்லது பஹுஜன் சமாஜ் கட்சி போன்ற இந்திக்காரர்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளை  தமிழ்நாட்டில் வேரூன்ற விட்டால் தமிழ் மொழி என்பது சமஸ்க்ரிதம், கிரேக்கம் போன்று கன்னிமராவிலும், தஞ்சை சரபோஜி நூலகத்திலும் மட்டுமே பார்க்க முடியும்.

தமிழர்களை கொன்று குவித்த சூனியக்காரியின் காங்கிரசை எப்படி தோற்கடிக்க போகிறோமோ,அதை போன்றே பா.ஜ.க.வையும் வைப்புத் தொகை இல்லாகும் வகையில் விரட்டி அடிப்போம்; தமிழ் மொழியை காப்போம்!!

இந்தத் தேர்தலில் ஏதோ ஒரு திராவிடக் கட்சி நம்மை சுரண்டி விட்டு போகட்டும். பொறுத்திருப்போம் 2016 பொதுத் தேர்தல் வரை-"நாம் தமிழர்" வழிகாட்டும் நம்மை!!! 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக