வெள்ளி, 22 டிசம்பர், 2017
ஞாயிறு, 19 நவம்பர், 2017
வணிகர் சங்கப் பேரவையின் கவனத்திற்கு...
உணவகங்களில் சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்பட்டதா என்பதை நாளை முதல் பார"தீய" சனதாக் கட்சித் தொண்டர்கள் ஆய்வு செய்வார்கள்- தமிழிசை
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா? அவர்களுக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தது? எரிவாயு உருளை மானியம் வரவில்லை என்பதற்காக நான் விநியோகம் செய்யும் கடைக்குள் சென்று ஆய்வு செய்யலாமா? நான் கொடுத்த மனு என்ன நிலையில் உள்ளது என்று மா.ஆ.தலைவர் அலுவலகத்திற்குள் சென்று சோதனை போடலாமா?
திருட்டு பட குறுந்தகடு உள்ளதா என்று விசால் ரெட்டி கோவை நகர கடைகளுக்குள் அத்துமீறி நுழைந்து அராஜகம் செய்ததை கண்டிக்காது பாராது விட்டதன் தொடர்ச்சியே இந்த அத்துமீறல் அறிவிப்பு.
வணிகர் சங்க தலைவர்களே..உடனே முடிவெடுங்கள்.உங்கள் ஆட்சேபனையை பதிவு செய்யுங்கள்...
--இறுதியாக ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்கிறேன்..பிரியாணி அண்டா பத்திரம்
ஞாயிறு, 5 நவம்பர், 2017
டிஜிட்டல் இந்தியாவின் லட்சணம்
டிஜிட்டல் இந்தியாவில் எல்லாவற்றையும் நீங்கள் இணையத்தில் பெறலாம் என்று சொல்கிறார்கள் அல்லவா? சரி என்று இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் விண்ணப்பிக்க https://tnedistrict.tn.gov.in/eda/services.xhtml இந்த இணையத்தை சுட்டினேன். எனக்கு கிடைத்த விடையை நீங்களே பாருங்கள்..இது தான் டிஜிட்டல் இந்தியாவின், அரசின் லட்சணம்.
சரி..அந்த இணைப்பு தான் வேலை செய்யவில்லை..வேறு ஏதும் இணையதளம் உள்ளதா என்று பார்த்தேன்...
கீழ்க்கண்ட இணையதளம் கிட்டியது
http://www.escholarship.tn.gov.in/
இதைச் சுட்டினால் சேமிப்பகமே இல்லையாம்.
சரி..அந்த இணைப்பு தான் வேலை செய்யவில்லை..வேறு ஏதும் இணையதளம் உள்ளதா என்று பார்த்தேன்...
கீழ்க்கண்ட இணையதளம் கிட்டியது
http://www.escholarship.tn.gov.in/
இதைச் சுட்டினால் சேமிப்பகமே இல்லையாம்.
நல்லா இருக்குடா உங்க இந்தியா...
சனி, 2 செப்டம்பர், 2017
போராடி காலனை வென்ற வீரமங்கை அனிதா
நீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று இனி இந்த கேடுகெட்ட நாட்டில் நீதி கிடைக்காது என்பதை உணர்ந்த பிறகே தன் இன்னுயிரை நீத்து விண்ணகரம் சென்றிருக்கிறாள் அப்பாவி தங்கை அனிதா, கடவுளிடம் வேண்டுமானால் முறையிடு என்ற நளினி சிதம்பரத்தின் நக்கல் பேச்சை உண்மை என நம்பி..
அவள் ஒன்றும் கோழை இல்லை. போராடி நம்பிக்கை இழந்து - வாழத் தகுதி அற்ற நாடு இது என செருப்பால் அடித்துச் சென்றுள்ளாள்.
பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையில் மாநில அரசும் சட்டம் இயற்ற இயலும். அப்படி இருந்தும் 2017 பிப்ரவரி மாதமே நீட்டிலிருந்து விலக்கு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததை கிடப்பில் போட்டது மட்டும் அல்லாமல் இறுதி கட்டம் வரை நீட்டிலிருந்து ஒராண்டாவது நடுவண் அரசு விலக்கு அளிக்கும் என்று நடுவண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்ப வைத்து தாலி அறுத்தார். இல்லையென்றால் கூட 199.75 பொறியியலுக்கான தகுதி மதிப்பெண் பெற்ற அனிதா அண்ணா பல்கலைக்கழகத்தில் கூட நுழைந்திருக்கலாம்.
மாநில பாடத்திட்டத்தில் படித்து தேறிய அவளுக்கு நடுவண் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள். அது மட்டும் அல்ல.ஒரே நாடு ஒரே தேசத்தில் ...இதே குஜராத்தில் உள்ளவர்களுக்கு சுலபமான கேள்விகள். தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு கடினமான கேள்விகள். நாடா இது...த்தூ...
பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையில் மாநில அரசும் சட்டம் இயற்ற இயலும். அப்படி இருந்தும் 2017 பிப்ரவரி மாதமே நீட்டிலிருந்து விலக்கு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததை கிடப்பில் போட்டது மட்டும் அல்லாமல் இறுதி கட்டம் வரை நீட்டிலிருந்து ஒராண்டாவது நடுவண் அரசு விலக்கு அளிக்கும் என்று நடுவண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்ப வைத்து தாலி அறுத்தார். இல்லையென்றால் கூட 199.75 பொறியியலுக்கான தகுதி மதிப்பெண் பெற்ற அனிதா அண்ணா பல்கலைக்கழகத்தில் கூட நுழைந்திருக்கலாம்.
மாநில பாடத்திட்டத்தில் படித்து தேறிய அவளுக்கு நடுவண் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள். அது மட்டும் அல்ல.ஒரே நாடு ஒரே தேசத்தில் ...இதே குஜராத்தில் உள்ளவர்களுக்கு சுலபமான கேள்விகள். தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு கடினமான கேள்விகள். நாடா இது...த்தூ...
ஆண்டிற்கு 150000 கோடியை தன் மக்களிடம் வழிப்பறி செய்தும் கொள்ளை அடித்தும் இந்திய நாட்டிற்கு கப்பம் கட்டும் ஒரு வளமான தமிழ் நாட்டால், 26 மருத்துவக் கல்லூரிகளும் 3377 மருத்துவ இடங்களும் உள்ள ஒரு நாட்டால் தகுதியும் திறமையும் வாய்ந்த ஒரு பெண்ணிற்கு அவள் விரும்பிய கல்வி கிட்டவில்லை என்றால்...விடுதலை கொண்டாட்டம் ஒரு கேடா என காறி உமிழ்ந்துவிட்டு சென்றிருக்கிறாள் அந்த இளம் தளிர்.
மாணவியின் மரணத்தை அரசியலாக்குகிறார்கள் என தமிலிசை சொல்கிறாள். அவளைக் கொன்றது அரசியல் இல்லாமல் வேறு என்ன? கிருத்துவசாமி சொல்கிறான்..வேறு படிப்பே இல்லையா என்று. மருத்துவம் படித்துவிட்டு அதை விட வருமானம் அதிகம் என்று உன்னைப் போல தன்மானத்தை விட்டு பிழைக்கத் தெரியாதவள்டா என் தங்கை. என்ன செய்வது...மானம் கெட்டு வாழத் தெரியாதவளாக அவளை வளர்த்துவிட்டோம்
முறையான மருத்துவம் இல்லாமல் தன் தாயை இழந்த தங்கை அந்த மருத்துவத்தை கைக்கொள்ள வேண்டும் என்று வீட்டு வேலையும் பார்த்துக் கொண்டு இராப்பகலாக படித்து, பின் தன் அத்துணை உழைப்பும் வீணாகிப்போனதை தாளமுடியாமல் தவறான நாட்டில் முறையான நீதி கிடைக்காது எனத் தெரிந்ததும் தன்னையே மாய்த்துக் கொண்டாள்.
தமிழ்நாட்டிற்கு வெளியில் சென்று படித்தால் முத்துக்கிருட்டிணன்களையும், சரவணன்களையும் பிணமாக்கும் வர்ணாசிரம நாடு தன் வலைக்குள்ளேயே இளந்தளிரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுவிட்டது.
சனி, 12 ஆகஸ்ட், 2017
வெள்ளி, 14 ஜூலை, 2017
புதன், 12 ஜூலை, 2017
கவிதை: பனித்துளி
பனித்துளி
பூக்களின் கண்ணீர்
திங்கள், 26 ஜூன், 2017
கவிதை: அவலத்தின் மூலம்
கல்லையே
கடவுளாக்கியவன்
கடவுளாக்கியவன்
மகனை
மனிதனாக்க
முயலவில்லை
ஞாயிறு, 21 மே, 2017
ரஜினி தமிழக அரசியலுக்கு வரக்கூடாது!!! ஏன்?
இவர் நடித்த கபாலி திரைப்படத்தின் ரூ.60க்கு விற்க வேண்டிய திரை அரங்கு கட்டணம் 600க்கு விற்க வைத்து உங்கள் மீது அபிமானம் வைத்த எங்க முட்டாள் இரசிகர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த நீ,,,கருப்பு பணத்தில் புரளுகிற நீ..ஆட்சிக்கு வந்தால் மட்டும் நல்லாட்சி தந்துவிடுவாயா? இது என்ன திரைப்படமா? முதல் பாதியில் வில்லனாக இருந்து இறுதிக் காட்சியில் கதாநாயகனாக மாற?
காவிரிப் பிரச்சணையில் நீ எங்களுக்கு சார்பா பேசவேண்டாம். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப 2000கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்து விடுங்கள் என்று ஒரே ஒரு அறிக்கை விடு. அந்த துணிவு உனக்கு இருக்கா?
உனது மனைவி நடத்து ஆசிரம பள்ளியில் எத்தனை ஏழை குழந்தைகள் கற்கிறார்கள்? எத்தனை பேருக்கு இலவச கல்வி தருகிறீர்கள்? நீங்களாக முன்வந்து தரவேண்டாம். அரசு கொள்கைக்கு ஏற்ப 15 விழுக்காடு ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கி உள்ளீர்களா? அந்த பள்ளியில் தமிழ் மொழ பயிற்றுவிக்கப் படுகிறதா?
உன்மீது அபிமானம் உள்ளவர்கள் 3 விழுக்காடு இருப்பார்களா?வேண்டாம்..ஒரு 30 விழுக்காடு இருப்பார்கள் என்றே வைத்துக் கொள்வோம். உங்களிடம் உள்ள பணம் மற்றும் அதிகாரத்தை மோடி வழியில் முறையற்ற வகையில் பயன்படுத்தி விளிம்பு நிலையில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டால்? முப்பது விழுக்காடு முட்டாள்களின் தவறான முடிவால் மீதம் உள்ள 70 விழுக்காடு மக்கள் தண்டைனையை அனுபவிக்க வேண்டுமா?
அதற்காகத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். நாங்கள் எதிர்ப்பது உன் மீது உள்ள பயத்தினால் அல்ல...வந்தேறிகளின் எண்ணிக்கை மிகுந்து கலப்பின தாயகமாக தமிழ்நாடு மாறி வருகிற நிலையில் உன்னைப் போன்ற களவாணிகள் ஆட்சிக்கு வந்தால்...இன்னும் கொஞ்ச நஞ்சம் உள்ள அடிப்படை உரிமைகளை இழந்து மொழி உரிமையை இழந்து உங்களுக்கு பிடித்த சமஸ்கிருத மொழியை கற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் தள்ளப்படுவோம்.
இந்த மக்களுக்கு நல்லது செய்யாமல் உங்களுக்கு தூக்கம் வராது..நிம்மதி இல்லை என்றால்..ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கி நல்லது செய்து விட்டு போங்களேன்.எங்களிடம் கொள்ளை அடிக்கப்பட்டதில் ஒரு துளி செலவாகி நீங்கள் தூய்மை பெறுவதில் எங்களுக்கு எந்த ஆற்றாமையும் இல்லை. ஆனால் எங்களை ஆள எங்களிடம் தலைவர்கள் இருக்கிறார்கள். நீ வேண்டும் என்றால் நீ பிறந்த மண்ணில் சென்று அரசியல் கட்சி உருவாக்கி உனது மாநிலத்தை ஆண்டு கொள்.
வெள்ளி, 14 ஏப்ரல், 2017
வியாழன், 30 மார்ச், 2017
தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எனும் பேச்சுக்கே இடம் இல்லை-மக்கள் உறுதி
நாகை நகர் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து #ஹைட்ரோகார்பன் க்கு எதிரான எந்த போராட்டமும் நடைபெறாமல் முறியடிக்கும் வகையில் செயல்படும் காவல் துறையின் கட்டுபாட்டை மீறி, நாகை மாவட்ட இளைய தலைமுறைகள் குழு இன்று கீழ்வேளூர் அருகே உள்ள கடம்பங்குடி மக்களை சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தது.
ஊர் மக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்;
காவிரி உரிமையை பறிக்கும் நடுவண் அரசையும்,அதை தட்டிக் கேட்காத மாநில அரசின் மெத்தனப் போக்கும், நம் வாழ்வாதாரத்தை காக்கவும்,அடுத்த தலைமுறைகளுக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவும் போராட்டம் ஒன்றே தீர்வு என்பதை விளக்கும் வகையிலும் நமது கலந்துரையாடல் அமைந்தது.
இந்த திட்டத்தை மக்கள் எதிர்க்க என்ன காரணம்?
(கீழ்வேளூர் அருகில் கடம்பங்குடியில் உள்ள ONGC-யின் TVR-18 Point உபயோகத்தில் உள்ளது. ஒரு செயல்பாட்டில் உள்ள நிலமுனையில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் கதவுகள் பூட்டப்படாமல் கேட்பாரின்றி கிடக்கிறது.
அதை யார் வேண்டுமானாலும் இயக்கவோ தவறாக உபயோக்கிவோ முடியும் வகையில் உள்ளது. இதையே சரியாக பாதுகாப்பான முறையில் செயல்படுத்த முடியாத நிறுவனங்கள் வரவிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவோம் என்பது வேடிக்கையாக உள்ளது.
அந்த ஊர்மக்கள் எப்படி அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதற்கு ஒரு சாட்சி...ஓர் ஏக்கர் நிலம் இரண்டு ஆண்டுகளுக்கு வெறும் ரூ.2500 க்கு குத்தகை எடுக்கப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை மட்டும் அல்ல..அது வேறு எந்த முகமூடி போட்டு வந்தாலும் வேரடி மண்ணோடு தகர்ப்போம் என்ற உறுதிமொழியோடு கூட்டம் இனிதே நிறைவடைந்தது
#SaveMotherCauvery
திங்கள், 20 மார்ச், 2017
வேண்டாம் காதல்...!!!
திடீர் என்று நீர்வீழ்ச்சி போல..எங்கிருந்தோ வருவாள்..."உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பாள்".கண்டுகொள்ளாமல் இருப்போம்.
"நீ இல்லாமல் உலகமே இல்லை" என்பாள். கொஞ்சம் அசைந்து கொடுப்போம்.
"உன்னை என்னால் மறக்கவே முடியாது" என்பாள். நம்முடன் களித்த சிறு சிறு அனுபவங்களையும் ஆழமாக நினைவூட்டுவாள். நமது அடித்தளம் தகர்ந்து விடும். அவள் பேசுவது எல்லாம் உண்மையாகவே தோன்றும்.
நீங்க இப்படி தான் பேசுவீர்கள்.. நம்பி வந்தால் காதல் பட இறுதிக்காட்சி மாதிரி ங்ங்கே ங்ங்கே னு பைத்தியம் மாதிரி திரிய விட்டுவிடுவீர்கள் என்று சொல்வோம். அதற்கும் பதில் சொல்வாள்..."எல்லாப் பொண்ணுங்களையும் அப்படி நினைக்காதே" என்று.பிற்காலத்தில் அவளும் அந்த பட்டியலில் முதலிடத்தில் தான் இருப்பாள் என்பது நடக்கவே நடக்காது என நாம் நம்பும் வகையில்.
"..இல்லை..நம் காதல் நிறைவேற சாத்தியம் புலப்படவில்லை;பிரிந்து விடலாம்" என்போம்.."உங்களை என்னால் மறக்கவே முடியாது" என்கையில் கல்லும் கரைந்து போகும்.. நாம் எம்மாத்திரம்?
ஒரு அழகான முழு நிலவில்..அவளுக்கு பித்தம் தெளியும். நமக்கு சூனியம் பிடிக்கும். அவள் தெளிவு பெறுவாள்..நாம் கலங்கிய நிலையில்.
"..இல்லை..நம் காதல் நிறைவேற சாத்தியம் புலப்படவில்லை;பிரிந்து விடலாம்" என்போம்.."உங்களை என்னால் மறக்கவே முடியாது" என்கையில் கல்லும் கரைந்து போகும்.. நாம் எம்மாத்திரம்?
ஒரு அழகான முழு நிலவில்..அவளுக்கு பித்தம் தெளியும். நமக்கு சூனியம் பிடிக்கும். அவள் தெளிவு பெறுவாள்..நாம் கலங்கிய நிலையில்.
குழந்தை குட்டியோடு முக நூலிலும் கட்செவியிலும் அவள் உலா வரும்போது..உலகம் புரிய ஆரம்பிக்கும் நேரத்தில் உன் வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும்.
காதல் செய்ய தைரியம் மட்டும் இருந்தால் போதும். ஆனால் அதில் வெற்றி பெற உன்னையும் அவளையும் சுற்றியுள்ளவர்களை சட்டை செய்யாத ஒரு தன்னலக்காரனாகவும்,எடுத்த முடிவில் முரட்டுப் பிடிவாதம் உள்ளவனாகவும் இருக்க வேண்டும்; அங்ஙனமே அவளும்.
இதெல்லாம் சுட்டுப் போட்டாலும் உனக்கு வராது என்றால், இந்த கசப்பான அனுபவங்கள் வேண்டாம் என்று நினைத்தால்..தயவு செய்து காதல் செய்யாதே...
ஞாயிறு, 19 மார்ச், 2017
இளையராஜா கேட்டதில் என்ன தவறு?
நான் கட்டி வைத்த மண்டபத்தில் வந்து கல்யாணம் செஞ்சிக்கிறான். வாடகை எங்கடானு கேட்டா..தாலி கட்டினது நான்; சாந்தி முகூர்த்தம் பண்ண போறது நான்...உனக்கு எதுக்கு வாடகைனு கேட்கிறான்.
தமிழன் #இளையராஜா வின் அறிவுசார் சொத்தை ஆட்டைய போட்டு கொளுத்து வளருது தெலுங்கு பாலு குடும்பம்.
தட்டி கேட்டா தப்பா?.
இசைஞானி தரப்பில் உள்ள நியாயம் :
- காப்புரிமை சம்பந்தமாக 2014 ஆண்டு முதலாக முறையாக அறிவிப்பு செய்துள்ளார்
- எஸ்.பி.பாலசுப்ரமணியம் "பாலு 50" நிகழ்ச்சியை நடத்தி தான தருமம் செய்யவில்லை. அத்தனையும் பணம் கொள்ளையிடும் மேல் தட்டு மக்களுக்கான நிகழ்ச்சி. இலவச அனுமதி இல்லை.
- இளையராஜா பாடல்களை நம்பி பிழைப்பு நடத்தும் இசைக்குழுவை இதுவரை நெருக்கடி செய்தது இல்லை. ஆனால் அவரின் அறிவுசார் உடைமையை மூலதனமாக வைத்து கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கும் போது?
- என் பாடலை பாட நீ குறிப்பிட்ட தொகையை தரவேண்டும் என்று ஒரு போதும் நிர்பந்திக்கவில்லை. நீ ஈட்டுவதில் உரிய பங்கை செலுத்து என்று தான் கூறப்படுகிறது.
- இளையராஜா நண்பர் என்பதற்காக பாலு இலவசமாக எந்த பாடலையும் பாடிக் கொடுக்கவில்லை
- காப்புரிமை மூலம் வசூலிக்கப்படும் பணம் அனைத்தையும் இளையராஜாவே எடுத்துக் கொள்ள போவதில்லை. முறையே தயாரிப்பாளர்கள்,பாடலாசிரியர்கள்,பாடகர்கள் என அனைவர்க்கும் பகிர்ந்து அளிக்கப்படும்
- நம் வீட்டு தோட்டத்தில் வளர்ந்த பூவை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்தாலோ, தோட்டத்து காய்கறியை ஏழை எளிவர்களுக்கு அளித்தாலோ நாம் உரிமை கோரப்போவது இல்லை. ஆனால்..அதை வைத்து நீ காசு பார்ப்பாய் என்றால்...?இது பாடகருக்கும் இசையமைப்பாளருக்கும் இடையேயான காப்புரிமை பிரச்சனை. ஆனால் நடுவண் அமைச்சர் வெங்கையா நாயுடு தலையை நீட்டுகிறார் என்றால்...என்ன காரணம்..பாலு..தெலுங்கன் என்பது ஒன்று மட்டும் தான்.
காப்புரிமை சட்டத்தில் தெளிவாக உள்ளது..இசை அமைப்பாளருக்கே பாடலின் மீது முழு உரிமை உள்ளது என்று. குழந்தையை பிரசவித்த தாய்க்கு தான் அது சொந்தம்..மாறாக மருத்துவமனைக்கு அல்ல.
வெள்ளி, 17 மார்ச், 2017
ஐஸ்வர்யா தனுஷின் நாராச நடனம்
எழுதுங்கள்
என் கல்லறையில்-அவள்
இரக்கம் இல்லாதவள் என்று !!!
இப்படிக்கு
இப்படிக்கு
பரதம்
போராட்டத்தில் வெற்றி என்றால் அது இது அல்லவா?!
16.03.2017 முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் சித்தூரைச் சேர்ந்தவர் இறந்து விட்டார். இதனால் வருத்தமுற்ற அவரின் உறவினர்கள் சிகிச்சை அளித்த மருத்துவர்களை தட்டிக் கேட்க, ஆத்திரமுற்ற பயிற்சி மருத்துவர்கள் உடனடியாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதே நாம் முறையாக அனுமதி பெறாமல் போராடினால் நம்மை உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி பெயர்த்து இருப்பார்கள். நடுக்குப்பம் மக்களாக இருந்திருந்தால் வீடு புகுந்து கொளுத்தி போராட்டத்தை முடித்து வைத்து இருப்பார்கள் நமது ஸ்காட்லாந்து காவல் துறை.
ஆனால் போராடியது உயிர் காக்கும் மருத்துவர்கள் அல்லவா? உடனே சுகாதாரத்துறை செயலர் வந்து பேச்சுவார்த்தை. அதற்கும் மருத்தவர்கள் செவி சாய்க்கவில்லை. 3 மணி நேர போராட்டம், இறந்து போன நோயாளியின் உறவினரை கைது செய்த பிறகு தான் முடிவிற்கு வந்தது.
300 நாட்களுக்கு மேல் போராடி கூடங்குள மக்களால் முடியாததை, 30 நாட்களாக போராடியும் நெடுவாசல்,வடகாடு மக்களால் முடியாததை வெறும் மூன்றே மணி நேர போராட்டத்தில் தாங்கள் நினைத்ததை சாதித்து விட்டார்கள் மருத்துவர்கள்.
பணமும் அதிகாரமும் உள்ளவன் போராட்டம் செய்தால் தான் இந்தியாவில் நீதி கிடைக்கும். பஞ்சப்பறாரிகள் நாம் உண்ணா நோன்பு இருந்து செத்தால் கூட ஒரு நாய் திரும்பி பார்க்காது.
வாழ்க இந்திய வல்லரசு!!! ஓங்குக அதன் அறம்!!!
வாழ்க இந்திய வல்லரசு!!! ஓங்குக அதன் அறம்!!!
செவ்வாய், 21 பிப்ரவரி, 2017
நந்தினி படுகொலை-நீதி கிடைக்குமா? நேரடி தள அறிக்கை
முகநூலில் பதிவு இட்டபடி அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுக்கா, செந்துறை வட்டம் சிறுகடம்பனூர் சென்றேன் 19.2.2017 அன்று.
சிறுகடம்பனூர் சென்றதும் நந்தினி வீட்டை கேட்டதும் அது காலனி பக்கம் இருக்கு என்று என்னை வழிநடத்திச் சென்றான் சிறுவன் ஒருவன்
இந்து முன்னணியை சேர்ந்த மணிகண்டன் என்கிற அரக்கன், ராசக்கிளி என்கிற கைம்பெண்ணின் இரண்டாவது மகளான நந்தினி என்கிற பச்சிளம் குருத்தை காதல் என்கிற புனிதமான ஆயுதத்தால் பாழ்படுத்தி பின்பு மணிவண்ணன், திருமுருகன் மற்றும் வெற்றிச்செல்வன் ஆகியோருடன் இணைந்து வன்புணர்வு செய்து அந்த பாவப்பட்ட சிறுமி அணிந்திருந்த உள்ளாடையை அவள் வாயில் திணித்து சுடிதார் துப்பட்டாவால் வாயை கட்டி வயிற்றுக்கு கீழே ஆறு அங்குலம் வரை கிழித்து அவள் வயிற்றில் இருந்த கருவை எடுக்க முயற்சி செய்துள்ளனர். எவ்வளவு வலியை அந்த இளம்பிஞ்சு அனுபவித்து இருப்பாள் என்பதை நினைக்கும்போதே நெஞ்சு வெடிக்கிறது.
டிசம்பர் 29 காணாமல் போன அன்றே காவல் துறை நடவடிக்கை எடுத்து இருந்தால் இப்படிப்பட்ட கொடூர மரணத்தை தடுத்து இருக்கலாமே. ஆனால் இந்த கேடுகெட்ட நாட்டில் நீதி, பாதுகாப்பு எல்லாம் பணக்கார,அதிகார வர்க்கத்திற்கு மட்டும்தானே?! விஷ்ணுபிரியாவிற்கோ நந்தினிக்கோ இறந்த பிறகு கூட கிடைக்காது இந்த சனநாயக நாட்டில்.
சனவரி 15ஆம் தேதி தான் நந்தினி உடலை கிணற்றில் இருந்து கைப்பற்றி இருக்கிறது காவல்துறை. முதல் தகவல் அறிக்கையில் ராஜசேகரன் பெயர் சேர்க்கப்படவில்லை. மணிகண்டனும்,மணிவண்ணனும் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்ததாக முதல் தகவல் அறிக்கையில் பொய்யாக புனையப்பட்டுள்ளது (அப்போது தான் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும், வழக்கு நிலைக்கும் என்று ஏவல் துறை யாருக்கோ பயந்து சப்பைக்கட்டு சொல்லி சமாளித்து அனுப்பி உள்ளது நந்தினி குடும்பத்தாரை). கொலைகாரர்கள் என நந்தினி குடும்பத்தாரால் குற்றம் சாட்டப்பட்ட திருமுருகன் மற்றும் வெற்றிசெல்வன் இன்னும் கைது செய்யப்படவில்லை.
நந்தினியின் தமக்கை சிவரஞ்சனி, நந்தினி உடலை கைப்பற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை என்னிடம் காட்டிய போது அந்த கணத்தில் அவர்கள் எப்படி துடித்துப் போயிருப்பார்கள் என்பதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. ஈழத்தில் இசைப்பிரியாவிற்கு சிங்கள காடையர்களால் நடந்த கொடுமைக்கு சிறிதும் குறைவில்லாமல் நடந்தேறி உள்ளது நந்தினி படுகொலை. ஏன்..இப்படி ஒரு கோரமான முடிவு இந்த சகோதரிகளுக்கு? பெண் என்பதாலா...இல்லை..தட்டிக் கேட்க ஆளில்லாத அனாதைகள் ஆகிவிட்டோம் என்றா?
நான் சென்ற அன்று பொதுவுடைமை கட்சியின் ஒரு பிரிவான தீண்டாமை ஒழிப்பு இயக்கத் தோழர்கள் அங்கு வருகை தந்து முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட பலவற்றை குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.
இந்த வழக்கு அரியலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக சிறப்பு வழக்கறிஞர் வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு இணங்க மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று நீதிமன்றத்தின் அனுமதி கோரி உள்ளார் ராசக்கிளி அவர்கள். வழக்கை CBCIDக்கு மாற்றச் சொல்லிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ளது.
தற்போதைக்கு தமிழக அரசு இடைக்கால நிவாரணம் மட்டுமே வழங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கான நிவாரணத்தொகையை குற்றவாளிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும்,குற்றவாளிகள் மிகக் கொடூரமாக தண்டிக்கப்பட வேண்டும்..அவர்களுக்கு மரண தண்டனயை கொடுத்து உடனே உயிரை பறித்துவிடக்கூடாது; ஒவ்வொரு நொடியும் அவர்கள் செய்த பாவத்தின் சம்பளத்தை பெற்றுக் கொண்டே இருக்கக்கூடிய வகையில் தண்டிக்கப்பட வேண்டும்.
இறந்து போன அந்த சிறுமியின் தாயாரிடம் முகநூல் அன்பர்கள், நண்பர்கள் சார்பாக ஒரு சிறு தொகையை அவர்கள் வேண்டாம் வேண்டாம் என்று மறுக்க, வற்புறுத்தி கொடுத்து விட்டு கனத்த இதயத்தோடு விடைபெற்றேன்..வழக்கறிஞர் மற்றும் பல நல்லிதயங்கள் அவர்களுடன் இருக்கிறார்கள் என்கிற ஒரு மனநிறைவு கிடைத்தது கள ஆய்வில்.
ஆதரவற்ற அந்த தாய்க்கு உதவ நினைப்பவர்கள் கீழ்க்கண்ட அவரது வங்கிக் கணக்கிற்கு தங்களால் இயன்றதை அனுப்புங்கள். தொகை அனுப்பியதற்கான தகவல் இங்கு கீழ்க்கண்ட பின்னூட்டத்தில் இட்டால் அவர்களிடம் தொடர்பு கொண்டு பணம் கிடைக்கபெற்றதை உறுதி செய்கிறேன்,
நந்தினி தாயார் திருமதி ராஜகிளி வங்கிக்கணக்கு விவரம்
பெயர்: RAJAKILI R
பெயர்: RAJAKILI R
சேமிப்பு கணக்கு எண் : 36478637982
STATE BANK OF INDIA, IRUMBULIKURICHI
IFSC : SBIN0007585
IFSC : SBIN0007585
செவ்வாய், 17 ஜனவரி, 2017
நான் தமிழன் #wewantjallikattu
நான் இந்தியன் தமிழன்
ஒரு திரைப்பட வெளியீட்டை எதிர்த்து ஒரு வழக்கு போட்டால் அந்தப்பட வெளியீட்டிற்குள் அவசர அவசரமாக விசாரித்து தீர்ப்பை வழங்கும் ஒரு நீதிமன்றம் மக்கள் சம்பந்தப்பட்ட வாழ்வாதார பிரச்சினை என்றால் காலம் தாழ்த்துவது ஏன்?
புரட்சி வெல்லட்டும்!!!
#wedojallikattu
#alanganallur
#TamilsBoycottGovtOfIndia
1.வந்தின இங்க எங்களோட அமர்ந்து போராடு. இங்க வந்து பேட்டி கொடுத்துட்டு புகைப்படம் எடுத்துக்கிட்டு போக இங்க வராதே....நீ எவ்வளவு பெரிய டேஸ் ஆ இருந்தாலும்
2.ஜல்லிகட்டை நேரலையில் பார்க்காமல் போக மாட்டோம்
3.நீ அவசரம் சட்டம் கொண்டு வா..இல்ல..எவன் காலிலோ விழு..நாங்க வாடிவாசலில் மாட்டை பார்க்கணும்.
சபாஷ் தோழா..தெளிவான புரிதல்களோடு எங்கள் காளைகள்...
ஒரு திரைப்பட வெளியீட்டை எதிர்த்து ஒரு வழக்கு போட்டால் அந்தப்பட வெளியீட்டிற்குள் அவசர அவசரமாக விசாரித்து தீர்ப்பை வழங்கும் ஒரு நீதிமன்றம் மக்கள் சம்பந்தப்பட்ட வாழ்வாதார பிரச்சினை என்றால் காலம் தாழ்த்துவது ஏன்?
இது போன்ற புகைப்படங்களை, கருப்புக் கொடியை உங்கள் கட்செவி மற்றும் முகநூல் முகப்புப் படமாக அமைத்து ஏகாதிபத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவிப்போம்...உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று மார்தட்டிக் கொள்ளும் ஒரு நாடு தன் மக்களின் கலாச்சார உரிமைகளை பறித்து, மொழியை அழித்து சொந்த நாட்டில் அகதியாக்கி உள்ளது என்பதை உலகிற்கு பறைசாற்றுவோம்
புரட்சி வெல்லட்டும்!!!
#wedojallikattu
#alanganallur
#TamilsBoycottGovtOfIndia
சனி, 14 ஜனவரி, 2017
ஜல்லிக்கட்டு- பீட்டாவின் குற்றச்சாட்டுக்கு என் பதிலடி
பீட்டா:
காளையை வாலை பிடித்து முறுக்குகிறார்கள்...மிளகாய் பொடியை தூவுகிறார்கள்..சாராயம் ஊட்டுகிறார்கள்
தமிழன்:மிளகாய் பொடி தூவினதுக்கு ஆதாரம் இருக்கா? சாராயம் ஊத்திக் கொடுத்த மாட்டுக்கு கோமியம் சோதனை எங்கே?
தண்ணீர் வண்டி, மண் சரக்குந்து மோதி மணிக்கு ஒரு விபத்து நடக்கிறது. அதற்காக அந்த வாகனங்களையே தடை செய்கிறாயா? ஓட்டினவனை உள்ளே வைப்பாய்..சட்டைபைக்கு வரவேண்டியது வந்தால் வெளியே விட்டுவிடுவாய். அது போல அப்படி நடந்து கொண்டவனை எதிர் காலங்களில் காளை அடக்க அனுமதிக்காதே. அது தானே உங்கள் சட்டப்படி சரி
விஷால்ரெட்டி: மாடு மிரண்டு ஓடுகிறது. அதை பிடிப்பது வீரமா? சிங்கத்திடம் வீரத்தை காட்டு
தமிழன்: குளத்தில் இருக்கும் மீனை ஒரு குண்டு சட்டிக்குள்ள அலங்காரத்திற்கு வைத்து கொடுமை செய்கிறீர்களே..அது தாண்டா தவறு.
காட்டில் சுதந்திரமாக திரியும் பறவைகளை இறக்கையை வெட்டி கூண்டுக்குள் வைத்து கொடுமை செய்கிறீர்களே..அது தாண்டா பாவம்...மாட்டை ஓட்டி விடுவதும் துள்ளி விளையாட விடுவதும் குற்றம் இல்லைடா என் வென்று...
சிங்கம் தனித்து வாழும் காட்டு விலங்கு. மனிதனை அண்டிப்பிழைக்கும் விலங்கு ஆடு, மாடு, கோழி. அந்த வேறுபாட்டை முதலில் தெரிந்து கொள். வெளிநாட்டில் ஓரினச் சேர்க்கை கூட தவறு இல்லை. அதை நீ செய்வாயா? இல்லை உன் தங்கைக்கு ஒரு பெண்ணை மணமுடித்து தருவாயா...அது தான் சமீபத்திய கலாசாரம் என்று..?
புலியை முறத்தால் விரட்டியவள் தான் என் மூதாட்டி. சிங்கத்தை அடக்குவது பெரிய காரியம் இல்லை. காட்டில் வாழும் யானையை கேரளா, கர்நாடகாவில் அதிகமாக காலில் சங்கிலியால் கட்டி வைத்து கொடுமை செய்கிறார்களே..அதை தடுத்து நிறுத்துடா..நீ உண்மையில் விலங்குகள் மீது அக்கறை உள்ளவன் நீ என்றால்...
ஏறு தழுவும்போது மாடு முட்டி இறந்தவர்களை கேள்விபட்டு இருப்பாய்..ஆனால்..வதைபட்டு மாடு இறந்தது என்பதை கேள்வியாவது பட்டிருக்கியா?
உலக திரைக்காவியங்களைப் பார்..எவ்வளவு உன்னதமான படைப்புகளை தருகிறார்கள் என்று..
-இவன் மணம் முடிக்க மூன்று பெண்களை காதல் செய்து அதில் எவள் சிறப்பு..எதில், சிறப்பு என்று ஆராய்ச்சி செய்து பார்ப்பானாம்...இப்படி பெண்களை இழிவு செய்யும் கேவலமான கதைகளில் நடித்துவிட்டு..உலக வரலாற்றை எடுத்துக்காட்டுகிறான் புறம்போக்கு...
எதையாச்சும் வாயை கொடுத்து புண்ணாக்கிக் கொண்டு..நான் அப்படி பேசவே இல்லை என்று பின்வாங்குவது...நீதி மன்றத்தில் காலில் விழுந்து கதறுவது..தறுதலை..நடிப்பை உங்க அப்பத்தா ஊரில் மட்டும் காட்டு...
ஏறு தழுவும்போது மாடு முட்டி இறந்தவர்களை கேள்விபட்டு இருப்பாய்..ஆனால்..வதைபட்டு மாடு இறந்தது என்பதை கேள்வியாவது பட்டிருக்கியா?
உலக திரைக்காவியங்களைப் பார்..எவ்வளவு உன்னதமான படைப்புகளை தருகிறார்கள் என்று..
-இவன் மணம் முடிக்க மூன்று பெண்களை காதல் செய்து அதில் எவள் சிறப்பு..எதில், சிறப்பு என்று ஆராய்ச்சி செய்து பார்ப்பானாம்...இப்படி பெண்களை இழிவு செய்யும் கேவலமான கதைகளில் நடித்துவிட்டு..உலக வரலாற்றை எடுத்துக்காட்டுகிறான் புறம்போக்கு...
எதையாச்சும் வாயை கொடுத்து புண்ணாக்கிக் கொண்டு..நான் அப்படி பேசவே இல்லை என்று பின்வாங்குவது...நீதி மன்றத்தில் காலில் விழுந்து கதறுவது..தறுதலை..நடிப்பை உங்க அப்பத்தா ஊரில் மட்டும் காட்டு...
ஞாயிறு, 1 ஜனவரி, 2017
இந்தியாவின் வறுமையை மோடி ஒழித்தது எப்படி?
நிருபர்: என்னது..மோடி இந்தியாவை வறுமை இல்லைத நாடா மாற்றி விட்டாரா?எப்படி.?
பக்தாள்: நாங்க தான் ஒரு நாளைக்கு ரூ.35க்கு மேல சம்பாதிச்சா பணக்காரங்கனு அறிவித்துவிட்டோமே
பக்தாள்: நாங்க தான் ஒரு நாளைக்கு ரூ.35க்கு மேல சம்பாதிச்சா பணக்காரங்கனு அறிவித்துவிட்டோமே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)