இடம்:நாகப்பட்டிணம் நாள்: 30.01.2011
மாவீரன் முத்துக்குமாருக்கு வீர வணக்க பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாம் தமிழர்களுக்கு சொல்வது எனன?
1. தலைவன் வருவான்,தகர்த்து எறிவான்
2. சூனியக்காரி சோனியாவின் குடும்ப குழுமம் காங்கிரசை வேரறுப்போம்
3. பேரறிவாளன் உள்ளிட்டோரை சிறையிலிருந்து மீட்போம்
4. தமிழனுக்கு என்று ஒரு நாடு மீட்டு எடுப்போம்

தாமரையின் கடிதத்தை படித்த பிறகு நானும் ஒரு தமிழனாய் மனதில் குழப்பங்களோடு பேரணி தொடங்குவதாக அறிவித்த பிற்பகல் 3.00 மணிக்கே மாநாட்டு திடலுக்கு சென்றடைந்தேன்.மாநாட்டு திடலில் இளைஞர் பாசறையை சேர்ந்த தோழர்கள் விழா ஏற்பாட்டை கவனித்துக் கொண்டு இருந்தார்கள்..இருக்கை வசதிகளை ஒழுங்கு படுத்தி கொண்டு இருந்தார்கள். செல்லப்பா பாட ஆரம்பித்தார். தலைவர் நலமாக உள்ளார்;வருவார் ; 1200 கரும்புலிகளோடு இயங்கிக் கொண்டு உள்ளார் என்ற நம்பிக்கையூட்டும் பாடல் பாடினார்.பேரணி 4.30 க்கு புறப்பட்டு மாநாட்டு திடலை 6 மணிக்கு வந்தடைந்தது
இளைஞர்கள் ஆதிக்கம்
20,000 இருக்கைக்கு மேல் போட்டு இருந்தார்கள். மூன்று மணிக்கு இருந்த நிலையை பார்த்த பொழுது அத்துணை பேர் வருவர்களா என்று எண்ணினேன்; ஆனால் பேரணி திடலை வந்து அடைந்ததும் அங்கு நிற்பதற்கு கூட இடம் இல்லாது போனது.இதே திடலில் தான் சென்ற மாதம் திமுக மாநாடு நடந்தது. அன்று காசு கொடுத்து கூட்டி வந்த கூட்டம்.இன்று ஒரு நல்ல cause க்காக திரண்டு வந்த கூட்டம். மிக மகிழ்ச்சி தரக்கூடியதாக நான் கண்டது..வந்திருந்த பார்வையாளர்களில் 90 % பேர் 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்
மேடையை அலங்கரித்தவர்கள்
முத்க்குமாரின் தந்தை, தமக்கை, பேரறிவாளன் தாயார், "தமிழக மீனவர்களை காப்பாற்ற முடியாத உனக்கு எதற்கு வேட்டி சட்டை" என்று சிதம்பரத்திற்கு பூவும் போட்டும் வளையலும் வழங்கிய வழக்குரைஞர் கயல்விழி,மனித உரிமை ஆர்வலர் பால் க்யுமன் . பேராசிரியர் தீரன்,சாகுல் ஹமீது வந்து இருந்தனர்.
புஷ்பவனம் மீனவர் ஜெயக்குமாரை சிங்கள நாய்கள் கொன்ற நிகழ்வை நாடகமாக நடித்துக் காட்டினர். தோழர் திலீபன் சூடாக கேட்டார் "மீனவர்கள் இறந்தால் நிதி குடுப்பதை நிறுத்து..உயிரைக் காப்பாற்று. இதே கடலில் ராகுல் காந்தியை கட்டு மரத்தில் அனுப்பு.அவன் இறந்தால் சோனியாவிற்கு ஒரு லட்சம் நிதியும்,சத்துணவில் ஆயா வேலையும் போட்டு குடுப்பியா நீ?' என்று கேட்ட போது திடலே அதிர்ந்தது.
இந்தியா ஏன் இலங்கையை ஆதரிக்கிறது?
தனி மனித உரிமைகளுக்காக போராடுவது தீவிரவாதம் அல்ல..அப்படி பார்த்தால் அமேரிக்கர்கள் கூட தீவிரவாதிகள் தான் என்ற பால் க்யுமன் இந்திய ஏன் இலங்கையை ஆதரிக்கிறது என்ற கருத்தையும் சொன்னார். "இலங்கை தமிழர்களின் போராட்டத்துக்கு அடிபணிந்து தனிநாடு தந்து விட்டால், இந்தியாவில் இப்பொழுது தனி நாடு கோரி போராட்டம் நடைபெறுகின்ற நாகலாந்து,மணிப்பூர்,அஸ்ஸாம்,காஷ்மீர் இங்கெல்லாம் போராட்டம் இன்னும் வலுப்பெற்று விடும் என்ற அச்ச உணர்வு காரணமாகவே தமிழர்களுக்கு எதிராக இந்தியா செயல்படுகிறது" என்றார்
செந்தமிழன் சீமான் உரை
அண்ணன் செந்தமிழன் சீமான் உரை இரவு 9.00 மணிக்கு ஆரம்பித்தது. இது முத்துக்குமாரின் வீர வணக்க பொதுக்கூட்டமாகவும் அதிமுகவிற்கு ஆதரவா என்று கேட்டவர்களுக்கு கொள்கை விளக்க கூட்டமாகவும் அமைந்தது. "என் மக்களை மண்ணுக்குள் புதைத்த காங்கிரசை வேரறுப்போம்,அதற்காக ரெட்டை இல்லை எனன ஒரு மொட்டை இலையை கூட ஆதரிப்போம்" என்றார்.
'அதிமுகவிற்கு ஆதரவா என்று பதை பதைக்கிறீர்களே. நான் சொன்னேனா?.சன் டிவிகாரன் சொன்னான். எண்ட கேளுங்க நேருக்கு நேராய். என்ன இத்தனை கேள்வி கேக்குறீங்களே..இதே கேள்விய விஜயகாந்துகிட்ட ஏன் கேக்குறது இல்ல? ஏன்ன அவர் கேக்குறது இல்லை" என்று கேள்வியிலேயே பதிலை தந்தார்
பனிக்கட்டி அல்ல புலிக்குட்டி
"அங்கு போகாதீங்க, கரைஞ்சுடுவீங்க, காணாம போய்டுவீங்க என்று சொல்கிறார்கள்.. கரைஞ்சு போக நாங்க ஒன்றும் பனிக்கட்டி அல்ல..புலிக்குட்டிகள்" என்றார்
"சீமானை நம்புங்கள்..அவன் ஒரு போது ஏமாற்ற மாட்டான்:இலக்கை அடையும் வரை ஓயமாட்டான்; லட்சிய பாதையில் இருந்து விலக மாட்டான், காங்கிரசை வேரறுக்க யாரை வேண்டும் ஆனாலும் ஆதரிப்பேன். இது இந்திய அமைதிப்படையை விரட்ட தலைவர் பிரேமதாசாவுடன் கூட்டு சேர்ந்தது போல. எங்கள் இலக்கு 2016 தேர்தல் தான். இலக்கை அடைய செல்லும் பாதையில் உள்ள நீரோடையில் கை கால் கழுவி ஆசுவாசப் படுத்திக்கொள்வோமே அதுபோல தான் இந்த தேர்தல். முதல் எதிரி காங்கிரஸ்.அதை தமிழகத்தில் போட்டி இடும் அத்தனை தொகுதியிலும் வைப்புத் தொகை இழக்கும் வகையில் தோற்கடிப்போம்..அதற்காக தான் இந்த இந்த வியூகம்'என்று தெளிவு படுத்தினார்.
புலிகள் 2000 கோடி கொடுத்தார்களாமே?மேடையை அலங்கரித்தவர்கள்

"சீமானுக்கு புலிகள் 300 கோடி கொடுத்தார்கள்,2000 கோடி கொடுத்தார்கள் என்கிறார்கள்..அட முட்டாப் பசங்களா..என்ட்ட கொடுத்த பணத்தை ராஜபக்ஷேவிடம் கொடுத்திருந்தால் இந்தாங்கடா உங்க நாடுன்னு நாட்டை கொடுத்துட்டு ஓடிருப்பானே.. நாங்களே பணம் இல்லாம தான் சென்ற வருடம் நடந்த மதுரை மாநாடு குறுந்தகடு, மாநாட்டு மலர் வெளியிட பணம் இல்லாமல் இப்பொழுது தான் வெளியிடுகிறோம்.அதை விற்று தான் இந்த கூட்டத்துக்கு நடந்த செலவை சரி செய்யணும்" என்றார். நானும் ஒரு குந்தகடும்,விழா மலரும் ரூ.250 க்கு வாங்கினேன்.
தனி நாடு வெல்வோம்
ஒன்றரை கோடி சிங்கள நாய்களுக்கு தனி நாடு இருக்கும் போது, 12 கோடி தமிழர்களுக்கு என்று ஏன் ஒரு நாடு இல்லை? நம்மை அடிமைப் படுத்த நினைக்கும் களவாணிகளை அடையாளம் காண்போம்..விழித்தெழுவோம்...
3000 ஆயிரம் ஆண்டுகளாக போராடிய யூதர்களுக்கே இப்பொழுது தான் தனி நாடு கிடைத்துள்ளது. நமது போராட்டத்திற்கு 60 வயது தான் ஆகிறது. உறுதியாக நமக்கு என்று ஒரு நாடு வெல்வோம்..அதில் புலிக்கொடி பட்டொளி வீசி பறக்கும்..அதில் தமிழ்நாட்டு தமிழர்களின் பங்களிப்பு பெரும்பான்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு வீடு வந்து சேர்ந்தேன்..