புதன், 6 ஜூலை, 2011

ஜூலை 8 இயக்கத்தில் கலந்து கொள்ள நெடுமாறன் வேண்டுகோள்

சென்னை, ஜூலை.6: இலங்கைத் தமிழருக்கு ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் அகில இந்திய அளவில் இயக்கம் நடத்த இந்திய கம்யூனிஸ்டு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலத் தலைநகர்களிலும் ஜூலை 8-ம் தேதி நடத்தப்பட உள்ள இயக்கத்தில் கலந்துகொள்ளுமாறு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:


ராஜபட்ச போர்க் குற்றவாளி என ஐ.நா. விசாரணைக் குழு அளித்தப் பரிந்துரையை ஏற்று சர்வதேச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை எடுக்கவும், இந்திய அரசு முன் வரவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் ஒரே மனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை ஆதரித்தும், இலங்கைத் தமிழருக்கு ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையிலும் அகில இந்திய அளவில் இயக்கம் நடத்த இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசியக் குழு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநிலத் தலைநகர்களிலும் ஜூலை 8-ம் தேதியன்று நடத்தப்பட உள்ள இயக்கத்தில்  கலந்து கொள்ளுமாறு தமிழர்கள் அனைவரையும் வேண்டிக் கொள்வதாக நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


நன்றி:தினமணி 



வியாழக்கிழமை, 7, ஜூலை 2011 (13:20 IST)



இ.கம்யூனிஸ்ட் போராட்டம்: வைகோ வாழ்த்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜூலை 8ம் தேதி மேற்கொள்ளவிருக்கும் அறப்போராட்டம் வெற்றிபெற மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கைத் தீவில் ஈழத் தமிழினப் படுகொலை செய்த சிங்கள அரசின் அதிபர் மகிந்த ராஜபட்சேவையும் இப்படுகொலையில் ஈடுபட்ட கொடியோரையும் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்கவும், இலங்கை அரசுக்குப் பொருளாதார தடை ஏற்படுத்தவும் மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறிக்கோளுடன் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தமிழகத்திலும், இந்திய நாடெங்கிலும் ஜூலை 8 ஆம் தேதி மேற்கொள்ள இருக்கும் அறப்போராட்டம் மகத்தான வெற்றி பெறவும், போராட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வகையில் மக்கள் ஆதரவு திரளவும் மதிமுக சார்பில்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Source:nakkeeran




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக