Saturday, July 16, 2011

என் தம்பி வருவான்-புலவர் புலமைப்பித்தன்

புலவர் புலமைப்பித்தன் அவர்கள் முள்ளிவாய்க்கால் இரண்டாம் ஆண்டு அஞ்சலியை முன்னிட்டு "என் தம்பி வருவான்" என்ற 7 பாடல்கள் அடங்கிய இசைக் குறுந்தகட்டை தோழர் தா.பா, பழ நெடுமாறன்,தோழர் தியாகு மற்றும் கலைப்புலி தாணு அவர்களின் முன்னிலையில் வெளியிட்டார்.

அதில் "என் தம்பி வருவான்" என்ற பாடலை இசை அமைத்த பிரபாகரனே பாடி உள்ளார்.மற்ற பாடல்களை T.L.மகாரஜன்,மனோ&கல்பனா பாடி உள்ளனர்.

சந்தேக நிழல்கள் நீங்க,உள்ளத்தில் நம்பிக்கை ஒளி ஏற்றும் அப்பாடலின் நெருப்பு வரிகள் இங்கே..


என் தம்பி வருவான் தம்பி வருவான்
நம்பி இருங்கள் தோழர்களே..
தடைகள் யாவும் உடைந்து போகும்
தருணம் இதுதான் தோழர்களே!!
ஒரு புலியின் உறுமல் கேட்கிறது-அது
போருக்கு ஆயத்தம் ஆகிறது!!!


நான்கு முடிந்தால் முடிந்தது தானா,
ஐந்து தொடங்காதா?-ஐந்து
தொடங்கும் வேளையில் இந்த
அவனி நடுங்காதா?
ஒன்றரை லட்சம் உயிர்களை
விலையாய் தந்தது எதற்காக?-அந்த
உயிர்களின் விலையாய்
ஈழத் தாயகம் பெறுவோம் அதற்காக..!!!
நான் சொல்வது எல்லாம் சத்தியமே-ஈழச்
சுதந்திரம் நமது லட்சியமே!


கடலுக்குள் இருக்கும் பூகம்பம்
உன் கண்ணுக்கு தெரிகிறதா?-விடுதலை
அடைவர் காலத்தைக் கணிக்க
ஜாதகம் இருக்கிறதா?
பதுங்குவதெல்லாம் பாய்வதர்க்காக
என்பது தெரியாதா?-பதுங்கும் புலிகள்
பாய்கிறபோது கடலும் எரியாதா?-என்
கண்ணும் அவனை பார்க்கிறது-அவன்
காலடி ஓசையை கேட்கிறது...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புத்தன் என்பது சிங்கள தேசம்
காந்தி என்பது  இந்திய தேசம்
இந்திய தேசமும் சிங்கள தேசமும் 
இணைந்து நின்றன யுத்தத்திலே.
ஈழ தேசத்தை மூழ்கடித்தன நாங்க
சிந்திய ரத்தத்திலே.


புத்தனும் காந்தியும் யுத்தக் களத்திலே
ஒண்ணா நின்னாங்க-கொத்துக்
குண்டுகள போட்டு போட்டு எங்கள கொன்னாங்க...
ராஜபக்ஷே வருகைக்காக-ரத்தினக்
கம்பளம் விரிக்கிறாங்க - இந்திய 
தேசமும் சிங்களனுக்கு இன்னொரு 
தேசம் ஆனதுங்க-ஏழரை கோடி
தமிழனுக்கோ  அந்நிய தேசம் ஆனதுங்க..
ஆட்டை சுமந்த புத்தன் எங்களை 
வேட்டை ஆடத் துடிக்கிறான் - 
ராட்டை சுத்துன காந்தி 
ஏ கே பார்ட்டிசெவன புடிக்கிறான்.. 
(பாடியவர்-பிரபாகரன்)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விழுவதெல்லாம் எழுவதெர்க்கே தோழனே..
(பாடியவர்-பிரபாகரன்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அடேய் ராஜபக்ஷே
(பாடியவர்-T.L.மகாராஜன்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

&தேனிசை செல்லப்பா பாடல்கள்கரும்புலி மறவர் களத்திலே உண்டு,
கட்டாயம் வருவார் தலைவரை நம்பு..
தகவல் தொடர்பு சரியாய் இருக்கு-சந்தேகம்
எதுக்கு மீசை முறுக்கு..
உலகம் வியக்க வருவார்-ஒரு 
நொடியில் ஈழம் பெறுவார் 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பேசாமல் பேச வைப்பான் பிரபாகரன்-அவன்
பெருமைக்கு எவன் இங்கு நிகரானவன்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எம் தலைவர் சாகவில்லை-என்றும்
புலி ஓய்வதில்லை..
விம்மி அழ நேரமில்லை-வீரப்
படை தோற்பதில்லை
தலைவர் படை வெடிக்கும்-சிங்கள
தடியர் உயிர் குடிக்கும்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பாடியவர்-T.L.மகாராஜன்
வருவாண்டா பிரபாகரன் மறுபடியும்-அவன்
வரும்போது சிங்களவன் கதை முடியும்.
ஐயம் இருந்தால் விட்டு தள்ளடா-அண்ணன்
படியில் சேர்ந்து எதிரியை நீ சுட்டு தள்ளுடா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழத் தமிழர் நிகழ்ச்சியின்
தலைப்பு பாடல்
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே..


தாயே என்ன பிழை செய்தோமடிதாயே!

வெடிவிழுந்து எரிந்த பனை-கரை 

உடைந்து காய்ந்த குடம்;
கூரை சரிந்த எமது இல்லம்-குருதி 

வடிந்த சிறு முற்றம்.

இரவை கிழித்த பெண்ணின் கதறல்

ரத்தம் வடிந்த குழந்தை பொம்மை-என் 
தேசம் பதுங்கு குழியின் உள்ளே..
புதைய சம்மதமோ?

விளக்கேந்திய மாடமெல்லாம் 

விழுந்தே போனதோ!-ஊஞ்சலாடிய 
முல்லை நீந்திப்பழகிய வாவி எல்லை-என் தோப்பில் 
அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ-என் தோட்டத்தில் 
ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ;
முற்றம் தெளித்திட விடியல் வருமோ!
யுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ!


(EN THAMBI VARUVAAN,PULAMAIPPITHAN, THENISAI SELLAPPA,LTTE SONGS, VARUVANDA PIRABAKARAN,TL MAHARAJAN,KARUMBIL MARAVAR KALATHILE UNDU,
THAAYE ENNA PIZHAI SEITHOM MAKKAL TV TITLE SONG,EN THAMBI VARUVAN, BUTHANUM GANDHIYUM)