வியாழன், 7 ஜூலை, 2011

லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் புலிக் கொடியுடன் ஓடிய ஈழத்தமிழன்!


இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் அனைத்துலக் கிரிக்கெட் போட்டி இலண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் தமிழீழ தேசியத் கொடியுடன் ஓடி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
லோர்ட்ஸ் மைதானத்தில் இவ்வாறு பரபரப்பை ஏற்படுத்திய இளைஞனை அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட அதிகாரிகள் பிரித்தானிய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக ‘தி ஐலண்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
மைதானத்திற்குள் புலிக் கொடியுடன் ஓடிய அந்த தமிழ் இளைஞனின் செயலைக் கண்டு அங்கு விளையாடிக் கொண்டிருந்த இலங்கை அணி கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட போதிலும், தமிழ்மக்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடிகளை எடுத்துச் செல்வதற்கு பிரித்தானியா அனுமதித்திருப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: www.semparuthi.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக