வெள்ளி, 22 ஜூலை, 2011

"இறப்பு"க்கு பின் தமிழர் தலைவர் வே.பிரபாகரனின் எழுச்சி உரை-அரிய காணொளி



1987குப் பிறகு 4 ஆண்டு இடைவெளிக்குப் பின் தமிழர்களின் தலைவன்,ஈழப் போர் முரசு, இறந்ததாக 'தி ஹிந்து' உள்பட பாசிச சக்திகளால் பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்ட நிலையில் தமிழ் உலகமே எழுச்சியுறும் வகையில் 1991 இல் தாகவச்சேரியில் தானைத் தலைவர் வேயன்னா.பிரபாகரன் அவர்கள் "முத்தமிழ் விழா"வில் தோன்றினார்.அலைகடலென திரண்டிருந்த மக்கள் சமுத்திரத்தின் முன்னே பங்குகொண்டு மாமனிதர்கள் பட்டமளிப்பு விழாவின்போது வீர உரை ஆற்றிய நிகழ்வின் அரிய காணொளி. தலைவனின் பிரகாசமான முகத்திற்கு முன்னே நிலவு கூட தலை கவிழ்ந்து முகில்களுக்கு இடையில் மறைந்திருக்குமோ அப்போது?

வீரத் தலைவர் ஆற்றிய எழுச்சி உரையில் சிறு துளிகள்..

"எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமீழீழ மக்களே..
தமிழீழ மண்ணின் விடுவிக்காக,தமீழீழ மக்களின் விமோசனத்திற்காக தமிழீழ தேசிய பண்பாட்டின் மறுமலர்ச்சிக்காக உழைத்தோரும் உழைத்து வருவோர்களுமான உன்னத மனிதர்களை உண்மையான மண்ணின் மைந்தர்களை மதிப்பளித்து கௌரவிப்பதற்கு எனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்ததை இட்டு நான் பெருமைப்படுகிறேன்.

நற்பணி ஆற்றும் நல்ல மனிதர்களுக்கு மதிப்பளிப்பதும் கௌரவம் செலுத்துவதும் தமிழனின் பண்பாடு.இந்த சீரிய மரபிற்கேற்ப இந்த சிறப்பு வைபவத்தை ஒழுங்கு செய்த எமது இயக்கத்தின் கலை பண்பாட்டு கழகத்தினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழீழ தேசத்தின் அதி உயர்ந்த கௌரவமாக தேசிய விருது வழங்கி மாமனிதர்களென மதிப்பளிக்கிறோம். எனன்றால் இவர்கள் அனைவரும் அற்புதமான இலட்சியவாதிகள்.இனப்பற்றும் நாட்டுப்பற்றும் உடைய தேசாபிமானிகள். சுயநல வாழ்வின் குறுகிய வட்டத்திற்கு அப்பாற்பட்டு நின்று
சமூக நலத்திற்காக தேசிய நலத்திற்காக மக்கள் நலத்திற்காக சேவை ஆற்றிய அபூர்வ மனிதர்கள். இவர்களது அறிவாற்றல் படைப்பாற்றல் செயலாற்றல் அனைத்துமே தமிழீழ சமூகத்திற்கு உரமூட்டுவதாக அமைந்திருக்கிறது. இவர்களது பணி மேலும் தொடர வேண்டும்; இவர்களது தொண்டு மேலும் சிறக்க வேண்டும். இதனால் தான் இவர்களுக்கு பெருமதிப்பளித்து தேசிய விருது வழங்கி கௌரவிக்க தீர்மானித்தோம். இந்த கௌரவ பரிசளிப்பை தேசிய விருது என அர்த்தமும் முக்கியத்துவமும் இருக்கத்தான் செய்கிறது.


தமிழீழ மக்களாகிய நாம் ஒரு தேசிய கட்டமைப்பை கொண்டவர்கள். வரலாற்று ரீதியாக நாம் ஒரு தேசியமாக வாழ்ந்து வந்தோம்;தேசியமாகவே வாழ்ந்து வருகிறோம்; தேசியமாகவே வாழப் போகிறோம். எமது தேசியத்தை எதிரியானவன் ஏற்றுக் கொண்டாலும் சரி..ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் சரி, எமது தேசிய தனித்துவமானது;என்றும் அழிக்க முடியாத யதார்த்தமான அரசியல் உண்மை என்பதை நாம் உலகிற்கு சதா பிரகடனம் செய்து கொண்டே இருப்போம். தேசிய விருது என நாம் பட்டமளிப்பதும் இப்படியான ஒரு பிரகடனமே.


இந்த தேசிய விருது அளிப்பிருக்கு ஒரு சில தேசபக்தர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஒட்டுமொத்தத்தில் இந்த பரிசளிப்பு எமது மக்கள் அனைவருக்கும் வழங்கப்படும் கௌரவமாகவே கருதப்படவேண்டும்.
எமது மக்கள் போற்றப்படவேண்டியவர்கள்; கௌரவிக்கப் படவேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்று தான் சொல்வேன். இலை மறை காயாக இருந்து விடுதலை போராட்டத்திற்க்கு தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்று தான் அழைக்க வேண்டும்.


நீண்ட காலமாகவே போராட்டத்தின் பெரும் பளுவை பொது மக்களே சுமந்து வருகிறார்கள்...அழிவும் பசியும் பட்டினியும் இரத்தமும் கண்ணீருமாக எமது மக்கள் எதிர்கொண்ட தாங்கொணா துன்பத்தை சொற்களில் சித்தரிக்க முடியாது.


உலகின் எல்லா விடுதலை போராட்டங்களிலும் ஒடுக்குமுறை நெருப்பில் குளிப்பது பொது சனங்களே. ஏனென்றால் அடக்குமுறையாளர்கள் போராளிகளை அழிப்பதில் காட்டும் தீவிரத்தை விட பொதுமக்களின் ஆன்மீக உறுதியை உடைக்கவேண்டும் என்பதில் தான் அதீத அக்கறை காட்டுகிறார்கள். ஆனால் இந்த முயற்சிகள் ஒரு பொழுதும் வெற்றி அளிப்பதில்லை. மக்களின் விடுதலை உணர்வை அடக்குமுறையால் அழித்துவிட முடியாது; உலக வரலாறு பகரும் உண்மை இது.ஏனென்றால் விடுதலை உணர்வே மனித ஆன்மாவின் சாரமாக உயிர் மூச்சாக இயங்குகிறது.மனித வரலாற்றை இயக்கும் மகத்தான சக்தியும் அதுவே. 


சிங்கள பேரினவாத அடக்குமுறையானது எமது மக்களுக்கு சாவையும் அழிவையும் தாங்கொணா துயரையும் கொடுத்தபோதும் என்றுமில்லாத வகையில் தேசிய கட்டுணர்வையும் சுதந்திர தாகத்தையும் தூண்டிவிட்டிருக்கிறது;தமிழரின் தேசிய ஆன்மாவை விழித்தெழ செய்திருக்கிறது. இன்று நாம் கொண்டாடி வரும் இந்த முத்தமிழ் விழா எமது மக்களது தேசிய எழுச்சியின் அபாரமான வெளிப்பாடு என்றே சொல்லவேண்டும். போராட்ட சூழலில் எல்லைகளில் எதிரியின் போர் முரசு கேட்கும் யுத்தக் காலத்தில் சமுத்திரம் போல் திரண்டு வந்து பல்லாயிரம் மக்கள் முத்தமிழ் விழாவில் பங்குகொள்கிறார்கள் என்றால்,அது எமது  மக்களின் திட சங்கல்பத்தை உறுதிப்பாட்டை சுதந்திர அறைகூவலை தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

இந்த சுதந்திர அறைகூவல் எமது எதிரியின் காதுகளுக்கு எட்டாமல் இல்லை. சீற்றம் கொண்ட பூகம்பத்திற்கு முன்பாக எழும் இனத்தின் எழுச்சிக் குரலை சிங்கள தேசமும் சர்வதேச சமூகமும் அசட்டை செய்ய முடியாது. இலட்சியத்தால் ஒன்று பட்டு உறுதி கொண்ட மக்களே வரலாற்றை படைப்பார்கள்.இந்த வரலாற்றின் படைப்பாக எமது தேசிய மண் ஒரு சுதந்திர பூமியாக பிறப்பெடுக்கும் என்பது திண்ணம்.


புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த விழாவில் சிறந்த போராட்ட இலக்கியங்களை படைத்ததற்காக சமீபத்தில் உயிர்நீத்த கவிஞர் காசி ஆனந்தனுக்கு இலக்கியத்திற்கான தமிழீழ தேசிய விருது வழங்கப்பட்டது.

20 ஆண்டுகளுக்கு முன்னே அவரிடம் காணப்பட்ட சிந்தனைகள் இன்றும் நமது போராட்டத்திற்கு அடித்தளமாகவே இருக்கிறது என்றால்,இன்றைய நிதர்சனமான உண்மைகளை வெட்ட வெளிச்சம் போட்டு அன்றே காட்டியுள்ளார் எனும்போது அவரது தொலைநோக்கு பார்வையும்,மக்கள் மீது கொண்ட மாறா அன்பும்,பரிவும் அவரை ஈழ தேசத்தின் மட்டும் அல்லாது பரந்து பட்ட தமிழர்கள் அனைவரின் நிகரில்லா தலைவராக இன்றும் என்றும் இருப்பார் என்பது திண்ணமாகிறது!!!
----------------------------------------------------------------------------------
காணொளி இணைப்பு தந்தவர்:தமிழீழ விடுதலைப் புலிகள் புலிகள்

(ltte Pirabakaran speech at thagavacherry in 1991 historic speech,Pirabakaran's speech)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக