சுயாட்சிக்காக அறப்போர் வழியில் போரடியவர்களையே கொன்று குவித்தது இன வெறி சிங்கள அரசு. பெண்கள் குழந்தைகள் வன்கொடுமைக்கு உள்ளானார்கள்..
தோழர் திலீபன் உண்ணாவிரதம் இருந்தே உயிர் துறந்தார்..அது இன்னும் தொடர்கிறது முத்துகுமரன் உருவில்..தன்னையே தணலாக்கி இன்னும் சிங்கள பேரினவாதிகளின் பொய் பிரச்சாரத்தால் இருண்டு கிடக்கும் உலகை வெளிச்சத்தையும் பாருங்கள் எனக் கூறி...
சீக்கியர்களுக்கு 1984 இல் நடந்த கொடுமைக்காக ஜகதீஷ் டைட்லரை என்ன செய்து விட்டது இந்த அரசு? காங்கிரசு கட்சியை தடை செய்து விட்டதா?
ஜெயலலிதா அம்மையார் கைதை எதிர்த்து அ.தி.மு.க.வினர் பேருந்தை எரித்து மாணவர்களை கொடூரமாக உயிர் கொன்றனரே ..அதற்காக ..அதிமுகவை இந்த அரசு தடை செய்து விட்டதா?
கலைஞர் கைதான பொது நடந்த அராஜகங்களுக்காக கலைஞரை குற்றம் சாட்டும இந்த அரசு? அது போல தான் ராஜீவ் காந்திக்கு விடுதலை புலி அனுதாபிகள் என்று கூறப்படுபவர்களால் அளிக்கப் பட்ட தண்டனைக்கு இன விடுதலைக்காக போராடும் ஒரு அமைப்பை தடை செய்வது எந்த விதத்தில் நியாயம் ஆகும்?அதுவும் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுவரின் வாக்கு மூலம் இல்லாமல்,குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை புலி அமைப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை குற்றம் சாட்டுவது சரியோ? கொலை பற்றிய தகவல் ப.சிதம்பரம் உள்ளிடோர்களுக்கு முன்னமே தெரிந்து இருந்தது பற்றியோ,குத்தரோச்சியின் சாதிப் பின்னணி பற்றியோ சற்று கூட ஆராயாமல் புலிகளை குற்றவாளி ஆக்குவது நீதியா?
விடுதலை புலிகள் படையில் சிறுவர் சிறுமிகள் இருந்தனர் என்று குற்றம் சாடுகிறதே இந்த உலகம்...சிறு எலியை நீங்கள் கொல்வதற்கு துரத்தும்போது கூட புறமுதுகிட்டு ஓடி முடியாது எனும் ஒரு நிலையில் அது திருப்பி தாக்க நினைக்கிறதே..அது தவறா? நீங்கள் மகாத்மா என்று கூறிக்கொள்பவர் கூட ஒரு பெண் தன்னை காத்துக் கொள்ள தன்னிடம் உள்ள எந்த ஆயுதத்தை வைத்து தற்காத்துக்கொள்ளலாம்; தாக்கலாம் என்று தானே சொல்லி இருக்கின்றார்? சேனல் 4 காணோளியை பார்த்தீர்களே? சிறு குழந்தைகள் கை தனியாக கால் தனியாக..பெண்கள் உடை இழந்து மானம் இழந்து..கர்ப்பிணியின் வயிற்றை கூட அறுத்து சிசுவை வெளியில் எடுத்து...இது போன்ற காட்டுமிராண்டி தனமான சித்திரவதைகளை தொலைக்கட்சியில் காணும்போதே என் குருதி கொதிக்கிறதே..இதுவே தங்கள் நெருங்கிய உறவுகளுக்கு ஏற்பட்டதை கண்ட அந்த பிஞ்சு கைகள் ஆயுதம் எந்தியதில் என்ன பிழை இருக்க முடியும்? ஏந்தாமல் இருந்திருந்தால் தான் அவன் மனிதனாக பிறந்ததற்காக பிழை செய்தவன் ஆகி இருப்பான்!!!
விடுதலைப் புலிகள் 25 வருட காலமாக போரிடுகிறார்கள் தங்கள் உரிமைக்காக. எங்காவது இதுபோன்ற காட்டுமிராண்டித் தனமான அநீதிகள் சிங்கள பெண்டிருக்கோ குழந்தைகளுக்கோ தாங்கள் அறிந்து செய்திருப்பார்களா? ஏனென்றால் நாங்கள் தமிழர்கள்..
இத்துணை படுபாதகங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தபோதும், தமிழினத் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் கருணாநிதி தன் ஐம்புலன்களையும் நாற்காலிக்காக,குடும்ப நலனுக்காக கட்டுப்படுத்தி இத்தாலிய ராட்சசிக்கு துணை நின்று தமிழகத்தில் புரட்சி ஏற்படாமல் அடக்கி ஆண்ட ராஜ(நரித்)தந்திரி இன்று தன் மகளை பிரிந்து தில்லிக்கும் தமிழகத்துக்கும் அலையும் போது மகளைப் பிரிந்து வாடும் அந்த முதியவருக்காக எங்கள் மனம் சற்றே பதை பதைக்கிறது..ஏனென்றால் நாங்கள் தமிழர்கள்...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக