ஞாயிறு, 4 டிசம்பர், 2022

எல்லாருக்கும் நல்லவரா நீங்கள்?

எல்லாருக்கும் நல்லவர்களாக இருக்க நினைப்பவர்களால் ஒருவருக்கும் உண்மையானவராக  இருக்க முடியாது 






சனி, 12 நவம்பர், 2022

முள்ளில் ரோஜா

 மென்மையாகத் தானே 

இருக்கிறேன் 

எனை ஏன்

தவிர்க்கிறாய் என்றது

முள்ளில் ரோஜா



காங்கிரசு நாய்

 


ஞாயிறு, 6 நவம்பர், 2022

வீடு - அன்றும் இன்றும்

முன்பெல்லாம் வீடு பெரிதாக இருக்கும். ஆனால் அதில் வசிக்கும் மனிதர்கள் நெருக்கமாக இருந்தார்கள் 

இன்றோ நகர்ப்புறங்களில் எதிரில் நின்றால் இடித்துக்கொள்ளும் வகையில் குறுகிய வீடுகள். ஆனால் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் விலகி வாழ்கிறார்கள் 
 

வெள்ளி, 28 அக்டோபர், 2022

குளிர்தரு

 கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த குளிர்தருவே



செவ்வாய், 18 அக்டோபர், 2022

நன்றி கொரானா

 உண்மையில் நாம் இந்த கொரனாவிற்கும், அதன் மூலம் திணிக்கப்பட்ட கட்டாயத் தடுப்பூசிக்கும் நாம்  நன்றிக் கடன்பட்டவர்கள் ஆவோம். சாவை இவ்வளவு சடுதியில் தரும் கரணியத்தினால். நேற்று இருப்பார் இன்று இல்லை என்கிற நிலையில் சாவை உடனடியாக தருகிறது. நோய்வாய்பட்டு, மருத்துவமனையில் உழன்று மருத்துவ கொள்ளைக்காரர்கள் கையில் சிக்கி கப்பம் கட்டி கடனாளி ஆகி என்று இருந்த இறப்பை இவ்வளவு எளிமைப் படுத்திய தடுப்பூசிக்கு நன்றி தானே சொல்லவேண்டும் ?!

புதன், 12 அக்டோபர், 2022

அரசு

 கோடிக்கணக்கான மக்களிடம் நூற்றுக்கணக்கில் சுரண்டி  முதலாளிகள் கோடிக்கணக்கில் சம்பாதிக்க சட்ட ரீதியான அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்து அதில் தரகு கூலி பெரும் ஒரு கருவி 


ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

கல்விக்கும் அறிவிற்கும் என்ன தொடர்பு?


படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு என்று சொல்கின்ற கண்ணதாசன் , பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என்றும் தன்நிலையை மாற்றுகிறார். 

64ஆவது நாயன்மாராக விளங்கக் கூடிய வாரியார் சாமிகள் அடித்து சொல்கிறார். அறிவு வேறு படிப்பு வேறு என்று. அப்படி என்றால் நாம் பாடசாலையில் படித்து உணர்வது அறிவு இல்லையா என்றால், .....இல்லை. நான் உமர்கய்யாம் பற்றி படிக்கிறேன். அவரை பற்றி படித்ததால் தான் அறிய முடிகிறது.. அவர் காலம் 1048-1131 என்று அறிகிறேன். இது அறிவு ஆகாதா என்றால் ஆகாது. இன்றைக்கு அவருடைய காலத்தை கணித்தவர்கள் நாளை அவர் 12ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்று சொன்னால், நாம் கற்றதனால் பெற்ற அறிவு தவறாகி போகிறது. 

அதே போல நமது பாடத்திட்டத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் 1857 என்று படிக்கிறோம். ஆனால் அது பொய். திரிக்கப்பட்ட வரலாறு. ஆக படித்து அறிவது அறிவாகாது. அறிவு என்பது உள்ளொளி. அதை அறியாமை என்கிற புற இருள் மூடி உள்ளது. கல்வி என்பது அந்த புற இருளை நீக்கும் ஒரு சாதனம்

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

அடிமையாக 75ஆண்டு. வா கொண்டாடலாம் தமிழா



ஒதுக்குப்புறமான பகுதியில் வசிக்கிறோம். ஒரு நாள் மழை பொழிந்தால் பத்து நாள்கள் வீட்டுச் சிறை தான். வடிகால் வசதி இல்லாததால் பகுதி முழுவதும் நீர் சூழ்ந்துவிடும்; சாலை வசதியும் இல்லை. இதற்கு முன்பு பஞ்சாயத்திடம் முறையிட்ட போது தேர்தல் நடக்காததால் தலைவர் இல்லையே என்று காரணம் சொன்னார்கள். தேர்தல் முடிந்து இன்றும் தீர்வு காணப்படவில்லை. இத்தனைக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருநூறு மீட்டர் தொலைவு தான். நிலைமை இப்படி இருக்க, வீட்டுக்கு வீடு மூவர்ணக் கொடியை கொடுத்து விட்டு சென்றுள்ளான். கோவணம் கட்டுவதற்கா என்று தெரியவில்லை 

ஆங்கிலேயனிடம் அடிமையாக இருந்தோம். அதற்கு பிறகு இந்திக்காரனிடம். ஆண்டைகள் தான் மாறி உள்ளது. இன்னும் நம் கைவிலங்கு அப்படியே தான் உள்ளது. இந்த இலட்சணத்தில் விடுதலை நாள் கொண்டாட்டம் ஒரு கேடு 






வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

தேய் நிலா

 

உடல் மெலிந்தது 
ஏனோ
நாள்தோறும் 
நடைபயிற்சியா
நீலவானில்?

கத்துக்குட்டி ஒப்பனையாளன்

 

கோவம் என்ன 
கிளியக்கா
உதட்டுச் சாயத்தை
மூக்கிற்கு
பூசிவிட்டானே என்றா?

வெள்ளி, 17 ஜூன், 2022

தில்லை கோவிலை அரசுடைமை ஆக்கு- மின்னஞ்சல் அனுப்புங்கள்

 


vocud.hrce@tn.gov.in




ஐயா வணக்கம் 

தில்லை நடராசர் கோயில் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டது. அதை தீட்சிதர்கள் இன்று ஆக்கிரமித்துக் கொண்டு அதை தங்கள் உடைமை போல எண்ணி மக்கள் காணிக்கைகளை கொள்ளை அடிப்பதோடு மட்டும் அல்லாமல், அங்கு வரும் பக்தர்களின் மீது  சாதி வழி தீண்டாமை புகுத்துவதும், தமிழில் தேவாரம் பாடுபவர்களை அராஜகம் செய்து விரட்டுவதும், பாட விடாமல் தடுப்பதும் என்று போக்கிலித் தனம் செய்து வருகிறார்கள். காவல் துறை பாதுகாப்போடு தான் அங்கு கடவுளுக்கு தமிழில் பாடும் நிலை இருக்கிறது. வருண பேதம் இல்லாத தமிழ் நாட்டில், சமத்துவம் நிலவுவதாக சொல்லிக் கொள்ளும் தமிழ்நாட்டில் பெண்களை தீட்சிதர்கள் கேலி  கிண்டல் செய்வதும், சாதி பெயரை சொல்லி சிறுமை படுத்தும் கொடுமைகளும் நடக்கிறது. 

எனவே தில்லை கோயிலை உடனடியாக தமிழ்நாடு அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தமிழ் வழிபாட்டிற்கும் சமூக நீதிக்கும் வழி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்


இப்படிக்கு

வியாழன், 19 மே, 2022

ஈழத் தமிழருக்கு போகாத கப்பல் சிங்களனுக்கு மட்டும் சென்றதெப்படி?

2006இல் ஈழத் தமிழ் சொந்தங்கள் பட்டினியாலும் போராலும் இறந்துகொண்டு இருந்த போது நிவாரணம் அளிக்க மருந்து மற்றும் உணவுப் பொருள்களை மக்களிடம் நிதியாக பொருளாக திரட்டி கப்பல் மூலம் அனுப்ப திசம்பர் 2006லிருந்து 2007 செப்டெம்பர் வரை செஞ்சிலுவை சங்கங்கள், மக்கள் திரள் போராட்டம், பட்டினி போராட்டம், முன்னாள் அமைச்சர் வேண்டுகோள் என எந்த முயற்சிக்கும் பலன் தராமல் சேகரித்த பொருள்கள் எல்லாம் மண்ணாகிப் போனது. அதை காங்கிரசும், திமுகவும் தடுத்து நிறுத்தியது.

இன்றைக்கு சிங்களர்களுக்கு உணவுப் பற்றாக்குறை என்ற உடனே நடுவண் அரசு டீசலை கப்பலேற்றி அனுப்புகிறது ; உணவுப் பொருள்களை தமிழ்நாடு அரசு தடை இன்றி உடனே அனுப்புகிறது. 

எங்கள் செலவில் உதவ எண்ணிய போது தடைவிதித்த நடுவண், மாநில அரசுகள் இன்று அரசு நிதியை, எங்களுடைய வரிப்பணத்தை எதிரிகளுக்கு வாரி வழங்குகிறது. வழக்கம் போல நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம்   



 

சனி, 30 ஏப்ரல், 2022

மூன்று சக்கர சைக்கிள் பெற்றுத் தந்து உதவ முடியுமா இப்பெரியவருக்கு?


நாகப்பட்டினம்- நாகூர் முதன்மைச் சாலையில் வெளிப்பாளையம்- ஏழைப் பிள்ளையார் கோயிலை கடந்து செல்பவர்கள் இவரை பார்க்காமல் கடந்து சென்றிருக்க முடியாது.

கால்கள் செயல் இழந்த, நடமாட முடியாத உறவினர்கள் யாருமற்ற இந்த பெரியவர் வெயிலிலும் மழையிலும் போக்குவரத்து மிகுந்த சாலையில் கைகளை ஊன்றி தவழ்ந்து யாசகம் பெற்று வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருகிறார் 

சமீபமாக தான் இந்த கட்டைவண்டி. அதில் அமர்ந்து கரடு முரடான சாலையில், தெருவில்   பசிக் கொடுமையோடு உடல் தளர்ந்த அவர் கைகளை ஊன்றி இந்த  வண்டியை தள்ளி இடம்பெயர்வது என்பது பெரும்பாலும் கடினமான ஒன்று. இந்த சாலை வழியாகத் தான் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் தினமும் போகிறார்கள். அருகிலேயேதான் போக்குவரத்து காவலர்கள் நிற்கிறார்கள். யாராவது ஒருவர் இவரை முதியோர் இல்லத்தில் சேர்த்து அவருக்கு உதவ மாட்டார்களா என்று நினைத்துள்ளேன்

ஓராண்டு காலமாக இவரை பார்க்கிறேன். இவரை அணுகி இவருடைய பிரச்சனையை கேட்க நானும் பல நாள் நினைத்துள்ளேன். ஆனால் இவர் பெரும்பாலும் சாலையின் ஒட்டிலேயே அமர்ந்து இருப்பதால் வண்டியை நிறுத்தி அவரை அணுகுவது இயலாததாக இருந்தது. இன்று தான் மூடிக்கிடந்த  கடையின் வாசலில் படுத்துக்கொண்டு இருந்தார்.

மூன்று சக்கர சைக்கிள் இருந்தால் உங்களுக்கு போக வர வசதியா இருக்குமல்லவா என்று கேட்டேன். ஆமாய்யா.. இப்ப ஒண்ணுக்கோ வேறு எதுக்குமோ ஒதுங்க கூட முடியலய்யா...யாருமில்லாத சாக வழியில்லாம அனாதையா கிடக்கேன் என கண்ணீர் மல்க அவர் சொன்னது நெஞ்சை பிழிந்தது. 

அந்த மாதிரி வண்டி உங்களால ஓட்ட முடியுமா என்று கேட்டேன். முடியும் என்றார். யாரும் உங்களுக்கு உதவ வந்தார்களா என்று கேட்டதற்கு "நாலாயிரம் கேட்டாங்கய்யா..என்னால அவ்வளவு பெரிய தொகை எப்படிய்யா பொறட்ட முடியும்?" என்றார்.

நாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று கேட்போம். ஏதும் அடையாள அட்டை இருக்கா என்று கேட்டதற்கு எதுவும் இல்லை என்றார். 

ஆட்சியரை அணுகி பார்ப்போம். இயலாத பட்சத்தில் பணம் கொடுத்தாவது மூணு சக்கரவண்டியை வாங்கிடுவோம் என்று அவருக்கு நம்பிக்கை அளித்து விட்டு வந்தேன். கண் கலங்க கைகளை தூக்கி கும்பிட்டு அடுத்த புதன் கிழமை போலாமாய்யா என்று கேட்டார். நான் விசாரித்து விட்டு வந்து அழைத்துப் போகிறேன் என்று நம்பிக்கை அளித்தேன். 

தோழர்களே... உங்களால் எதுவும் அவருக்கு உதவ முடிந்தால் அவரை சந்தித்து உதவியை பெற்றுத் தாருங்கள். என்னால் முடிந்ததை நானும் முயல்கிறேன் 

சனி, 23 ஏப்ரல், 2022

இளையராஜா | தமிழினத்தின் உணர்வு | யாராலும் அழிக்க இயலாத அடையாளம்




#இளையராஜா என்னும் மாபெரும் தலைமை. தமிழினத்தின் பெருமைமிகு அடையாளம். இந்த உலக அரங்கில் தமிழினத்திற்கு என்ற வரலாற்றில் அவருக்கான பக்கங்கள் மானுடத்தின் கலை நுணுக்கங்கள்.

இந்த நாட்டின் பல தேசிய இனங்களின் தாய்மொழிக்கு பதிலாக ஒற்றை மொழியை கொண்டுவர அரசியல் சாசனம் எழுதிய #அம்பேத்கரும், அதே நிலைப்பாட்டில் மொழிகளை அழித்து இந்திய திணிக்கும் மோடிக்கும் என்ன பெரிய வேறுபாடு?

இதுதான் தருணம் என்று ஆரிய, தெலுங்கு,கன்னட இனவெறியர்கள் நம் தமிழினத்தில் கலந்து காழ்ப்புணர்ச்சியை காட்டிக்கொண்டு தங்களை #திராவிடர்களாக, தமிழின விரோதிகளாக வெளிப்படையாக அடையாளம் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

தமிழர்களைப் பிரித்து நம் கண்ணை நம் கையாலேயே குத்த நடக்கும் ஆரிய சூழ்ச்சியை முறியடித்து தமிழினப் பெருமைகளோடு கை கோர்ப்போம்

 

#தமிழ்மது

24/04/2022

மேற்கண்ட பதிவை இளையராஜா குழுவில் பதிந்திருந்தேன். 
https://www.facebook.com/groups/meastroilayaraja/posts/10161966132167516/?comment_id=10161967620157516&notif_id=1650745127769019&notif_t=group_comment&ref=notif

இசைஞானிக்கு சமூக்கக்டமை என்றால் என்ன என்று எடுத்துச் சொல்லுங்கள் என்று ஒருவர் கருத்து போட்டிருந்தார்.

ஏது..காட்டை காக்கும் தமிழின பூர்வ குடிகள் குறவர் இனத்தவருக்கும், மகாராட்டிரத்தில் இருந்து குருவி சுட வந்தவர்களுக்கும் வேறுபாடு தெரியாமல் அவர்களை அழைத்தும், அவர்கள் இல்லத்திற்கு சென்றும் சமூக நீதி நாடகம், மாணவர்களை அழைத்து மெகா சீரியல் செய்வது தான் சமூக கடமையா. இல்லை,, நாட்டை கூறு போட்டு கம்பெனிக்காரனுக்கு விற்றுவிட்டு வார்கோலை பிடித்து தூய்மை செய்வதாக நாடகம் ஆடுகிறார்களே. அதுவா?

சமூகக் கடமை என்றால் என்ன என்று வாக்குக்கு காசு வாங்கி தங்கள் உரிமைகளை விற்கும், வாங்கும் இவர்களுக்கு தான் தமிழ்த் தேசியர்கள் நாங்கள் பாடம் நடத்த வேண்டும். 

தமிழ் திரைத்துறையில் இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்று திராவிட போர்வையில்  தெலுங்கர்கள் ஆதிக்கம் மேலோங்கி இருந்த போது (காரணம் 1920 தொடங்கி இன்று வரை வேற்று இனத்தாரை ஆள வைத்து அழுது கொண்டு இருக்கும் தமிழினம் https://en.wikipedia.org/wiki/List_of_chief_ministers_of_Tamil_Nadu ) தமிழர்கள் வெளிச்சத்திற்கு வருவதற்கான எல்லா கதவுகளும் அடைபட்டு கிடந்த போது தன் திறமையால் மேலே வந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அவர் வந்த பிறகு தான் பல திறமையான இயக்குனர்கள், நடிகர்கள் நம்பிக்கையுடன் வெற்றிபெறுவோம் என்று கோவை, மதுரை, திருப்பூர், ஈரோடிலிருந்து எல்லாம் சென்னைக்கு  லாரி ஏறி (திருட்டு ரயில் அல்ல) வந்தார்கள். 

தான் உச்சத்தை தொட்ட போதும் தெலுங்கு மலையாள மக்களை அரவணைத்து தான் சென்றார் இசைஞானி. திறமை கொண்டவர்களை ஜென்சி, ஸ்வர்ணலதா, மனோ என்று மற்ற இன மக்களுக்கு வாழ்வளித்தார். அது தான் தமிழர் தன்மை. அதே நேரத்தில் பல தமிழ் இனத்தவர்களை அவர் கரையேற்றவும் செய்தார். சமூகப் பொறுப்பு என்பது தம்பட்டம் அடித்துக் கொண்டு செய்வது அல்ல. உள்ளே இருந்து சத்தம் இல்லாமல் புரட்சி செய்தவர். அதை அவரால் முன்னுக்கு வந்த கலைஞர்கள் நன்கு அறிவார்கள். 


தான் தமிழருக்கு பிறந்தோமா திராவிடனுக்கு பிறந்தோமா என்றே தெரியாத திரிபு தலைவரை மேடையில் வைத்து சாதியை வைத்து பெரியாரின் பேரன்  திட்டுகிறான் என்றால் இதில் வெளிப்படுவது சாதி திமிர் மட்டும் அல்ல..இனவெறியும் 

தங்கள் இன ஆதிக்கத்தை ஆட்டம் காண வைத்துவிட்டார் என்கிற ஐம்பது ஆண்டு காலமாக உள்ளுக்குள்ளேயே பொருமிக்கொண்டு எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நரிகள் உறங்கிக் கிடக்கின்றன தமிழினப் போர்வையில் என்பதை இந்த தருணம் நன்றாக உணர்த்துகிறது

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

பட்டினி

உணவகங்கள் 
நிறைந்த நெடுஞ்சாலையில் 
பட்டினியில் இறந்தது 
நாய் 

வியாழன், 3 பிப்ரவரி, 2022

நீட் மசோதா நிராகரித்த ஆளுநர்- தமிழன் ஏமாளியா? மிதவாதியா? #GetOutRavi

 

உங்கள் எல்லோருக்கும் கடந்த ஜனவரி 28 அன்று பீகாரே நிலைகுலைந்து போகும் அளவிற்கு போராட்டடம் நடந்தது நினைவில் இருக்கலாம்; அதில் பல தொடர்வண்டிகள் எரிக்கப்பட்டன; வண்டிகள் மறிக்கப்பட்டது. இவை அனைத்தும் காங்கிரசு, ராச்ற்றிய ஜனதா தள, பொதுவுடைமை கட்சி ஆதரவோடு நடைபெற்றது. எதற்காக இந்த போராட்டம் தெரியுமா? தொடர்வண்டி துறை வேலைவாய்ப்பில் கூடுதலாக இரண்டு கணினி அடிப்படையிலான தேர்வு அறிமுகம் செய்தது வேலை வாய்ப்பை பறிப்பதாக உள்ளதாக கருதி போராட்டத்தில் குதித்தார்கள். அந்த மாநிலமே ஸ்தம்பித்தது. 

 





தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை நன்கு படித்த மாணவர்களுக்கு இந்த சர்வாதிகார ஆரியத்துவ  ஒன்றிய அரசு அவர்கள் படித்த பாடத்திட்டத்தில் இல்லாததை நீட் என்கிற நுழைவுத் தேர்வு வைத்து தமிழ் மாணவர்களின் எதிர்காலக் கனவை சிதைப்பார்கள். தங்களுக்கு மருத்துவர் ஆகக் கூடிய தகுதிகள் இருந்தும் முறைகேடான வகையில் தங்கள் கனவை நனவாகாமல் தடுக்கும் சூழ்ச்சிச்சியை தாங்கிக் கொள்ளாமல், எங்கள் தமிழர்கள் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வார்களே அன்றி, ஒரு போதும் நீட் மசோதாவை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு எதிராகவோ, அதை திணிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராகவோ, துணை போகும் கங்காணி அரசுக்கு எதிராகவோ எங்கள் மிதவாத தமிழர்கள் போராடவே மாட்டார்கள். 

இதை நீங்கள் ஏமாளித் தமிழர்கள் என்று கூட எடுத்துக்கொள்ளலாம். 

புதன், 26 ஜனவரி, 2022

அலையின் தயக்கம்


 கதிரவன் எழுதிய

காதல் கடிதம்

தூது வந்த அலை

திரும்பிச் சென்றது

அவள் காலில்

ஹைகீல்ஸ்

சனி, 1 ஜனவரி, 2022

புலம்பெயர்வு

 




புலம்பெரும் 

மேகங்களின் 

கண்ணீர் ...

அது 

மழையோ ?!