வெள்ளி, 31 டிசம்பர், 2010

இசைப்ரியா - ஒரு மலரின் கொடூர மரணம்

இசை பிரியா அன்றலர்ந்த மலராய் ...2001- இல்



வாடிய மலராய் ...இல்லை ..நெருப்பில் வாட்டிய
மலராய்...18 மே 2009 இல் ...
Powerful evidence of Genocidal Rajapaksa's cruel war crime
-Channel 4


New information on the Sri Lanka war crimes video: victim could be Isaipriya
The distressing execution video footage, screened by Channel 4 News last week and originating in Sri Lanka, shows a number of incidents of soldiers in uniform shooting in the head people who appear to be unarmed – described as "cold-blooded killing" by an international expert. The video also shows the bodies of other men and women lying on the ground.
Leading war crimes lawyer Julian Knowles, from Matrix Chambers, told Channel 4 News the video was "astonishing evidence" of a type he had only seen "a handful of times" showing the mass killing of civilians or unarmed combatants, a serious war crime.

வியாழன், 30 டிசம்பர், 2010

சிங்கள தேசிய கீதத்தை எதிர்த்த தமிழ் கல்விப் பணியாளர் படுகொலை


சிங்கள மொழி தேசிய கீதத்தை எதிர்த்த தமிழ் கல்விப் பணியாளர் மார்க்கண்டு சிவலிங்கம் என்பவர் இலங்கை புலனாய்வு பிரிவினரால் கொல்லபட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் கடந்த 26 ம் தேதி நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தினத்தில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடவேண்டும் எனஇலங்கை இராணுவத்தினரால் வலியுறுத்தப்பட்டது.

இராணுவத்தினரின் அந்த வேண்டுகோளை எதிர்த்து மார்க்கண்டு சிவலிங்கம், தமிழ் மொழியில் தேசிய கீதத்தை மாணவர்களினால் பாட வைக்க அதி தீவிரமாக செயற்பட்டதாகவும், தேசிய கீதம் குறித்து எதிர்க்கருத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்தே இலங்கை அர்சாங்கத்தின் புலனாய்வு பிரிவினரால் மார்க்கண்டு சிவலிங்கம் கொள்ளை என்ற பெயரில் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


*********************************************************************************************************
தேசிய கீதத்தின் மொழி?BBCTamil.com

இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க வேண்டுமென அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் நிறைவேற்றப்பட வி்ல்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தேசியக் கீதத்தைப் பாடவேண்டிய விதிமுறைகள் பற்றிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு வந்த போது, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்க வேண்டும் என்கின்ற முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டதாகவும் அது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தேவானந்தா கூறினார்.
ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் கனடா போன்ற சில நாடுகளில், இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றமை ஜனாதிபதிக்கு எடுத்துக்காட்டப்பட்டதாகவும் டக்ளஸ் தெரிவித்தார்.
அமைச்சர்களான ராஜித்த சேனாரத்னவும் வாசுதேவ நாணாயக்காரவும், தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்கும் படி சட்டம் கொண்டுவருவது சாத்தியப்படாது என்று கருத்துக் கூறியதாகவும் சில முஸ்லிம் அமைச்சர்களும் இந்தக்கருத்தையே கொண்டிருந்ததாகவும் அமைச்சர் டக்ளஸ் கூறினார்.
இந்தக் கருத்துக்களையெல்லாம் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஒரு மொழியில் தேசிய கீதம் இசைக்கும் திட்டத்தை நிறைவேற்றாது ஒத்திவைத்ததாகவும், சில ஊடகங்களில் வெளியான தகவலைப் போல, சிங்கள மொழியில் மட்டும் என்ற திட்டம் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை எனவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தமிழோசையிடம் கூறினார். 
*****************************************************

சிங்கள மொழியில் தேசியகீதம் பாட மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்! – சுரேஷ் பிரேமசந்திரன்

அரசியல் சாசனந்தின் பிரகாரம் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் தமிழில் தேசிய பாடப்படலாம். ஆனால் நேற்றைய தினம் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள், சிங்கள அரசியல்வாதிகளின் நிர்ப்பந்தத்தின் பிரகாரம் சிங்கள் மொழியில் தேசிய கீதம் பாடியுள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைக்கு துணைபோகும் தமிழ் அரசியல்வாதியான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தான் கண்டனம் தெரிவிப்பதாகவும், இது போன்ற செயற்பாடுகளால் தமிழ் மாணவர்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளதாகவும் இது நாட்டிற்கு ஆரோக்கியமானதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய நிகழ்வுகளில் பிரதமர் உரையாற்றும் போது இனங்களுக்கிடையே ஐக்கியத்தை பற்றி உரையாற்றினார். இவ்வாறு ஐக்கியத்தை பற்றி உரையாற்றுபவர்களுக்கு ஏன் தமிழில் தேசிய கீதத்தை கேட்கமுடியாது எனவும் இனங்களுக்கிடையேயான புரிதல் இவ்வாறன செயற்பாடுகளின் மூலம் ஏற்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது போன்ற விடயங்களுக்கு துணைபோவது, தமிழர்களை தலைகுனிய வைத்துள்ளதாகவும், இலங்கை அரசு அரசியல் சாசனத்திற்கு முரணாக செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்ததுடன் ஊடக அமைச்சர் தமிழில் தேசிய கீதம் பாடலாம் என அறிவித்தது பொய்யாகி போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

தமிழக மீனவர்களைக் கொன்று குவித்த சிங்கள கடற்படைக்குப் பயிற்சியா-சீமான் கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டபொழுதும் இந்தியக் கடற்படை இதுவரை கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்று கூட தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் நம் மீனவனைக் காப்பாற்ற எதிர்தாக்குதலோ, இலங்கை ராணுவத்திற்கு ஒப்புக்குக் கூட கண்டனமோ தெரிவிக்காத கடற்படை பிறகு யாரைக் காப்பாற்ற ரோந்துப் பயிற்சியை இணைந்து மேற்கொள்ளப் போகிறது? என்று கேட்டுள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவுடன் பேச்சு நடத்திய பின்பு இருநாட்டு கடற்படை உறவை மேம்படுத்தும் வகையில் 2011ம் ஆண்டு இலங்கை - இந்திய கடற்படையினர் இணைந்து இலங்கை கடற்பரப்பில் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர் என்றும் இலங்கை பாதுகாப்பு பிரிவினருக்கு மேலும் பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இந்தியக் பாதுகாப்புச் செயலாளரின் இந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டணங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

இலங்கையில் கடந்த ஆண்டு சிங்கள ராணுவம் தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலை தொடர்பாக ராஜபக்‌சேவை இனப்படுகொலையின் சூத்திரதாரியாகவும், இலங்கையின் மீது விசாரணை நடத்தவும் உலகம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக ஐ.நா.குழு.இலங்கைக்கு செல்ல உள்ள நிலையில் இலங்கை கடற்படைக்கு பயிற்சி என்ற இந்திய பாதுகாப்புச் செயலாளரின் இந்த அறிவிப்பு உலகின் கவனத்தை திசை திருப்பும் உத்தியாகும். இலங்கை நிகழ்த்திய இனப்படுகொலையை அருகாமையில் இருந்து தொடர்ந்து மறைக்கும் முயற்சியாகும்.

இங்கோ தமிழ்நாட்டில் இதுவரை 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டபொழுதும் இந்தியக் கடற்படை இதுவரை கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழ் மீனவன் படகிலும், இந்தியக் கடற்படையின் கப்பலிலும் ஒரே இந்திய தேசியக் கொடி பறந்தாலும் தமிழ் மீனவன் கொல்லப்படும் பொழுதோ இந்தியக் கடற்படை செயலற்று உல்லாசமாக இருக்கிறது.

இதோ இன்று கூட தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் நம் மீனவனைக் காப்பாற்ற எதிர்தாக்குதலோ, இலங்கை ராணுவத்திற்கு ஒப்புக்குக் கூட கண்டனமோ தெரிவிக்காத கடற்படை பிறகு யாரைக் காப்பாற்ற ரோந்துப் பயிற்சியை இணைந்து மேற்கொள்ளப் போகிறது?

ஏற்கனவே ஈழத்தமிழர்களைக் கொன்றதற்கு மறைமுகமாக ஆயுதங்கள் உட்பட அனைத்து உதவியையும் செய்த இந்திய அரசு இன்னும் மீதமிருக்கும் அங்குள்ள தமிழர்களையும், இங்குள்ள தமிழ் மீனவனையும் கொல்வதற்கு சிங்கள ராணுவத்திற்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கப் போகின்றதா? என்று தெரியவில்லை. இந்தியக் கடற்ப்டையின் தமிழர் விரோதப்போக்கு வெந்த எமது புண்ணில் வெந்நீரைப் பாய்ச்சுவதாக இருக்கிறது. அதற்கு எமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்

செவ்வாய், 28 டிசம்பர், 2010

2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல்கள்

அரசியல் வட்டாரங்களிலும், ஊடக மேலிடங்களிலும், செல்வாக்குள்ளவர் நீரா ராடியா. இவர் 2009-ஆம் ஆண்டு சில அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகப் புள்ளிகளிடம் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் இப்போது வெளிவந்து பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் இந்தத் தொலைபேசி உரையாடல்களின் பதிப்பு ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உரையாடல் பதிவுகளிலிருந்து சில பகுதிகளை இங்கு வெளியிடுகிறோம்.-தினமணி

திங்கள், 27 டிசம்பர், 2010

ஒன்று கூடுவோம் தமிழர்களாய்-காப்போம் பெரியார் அணையை


தலையங்கம்: குரல் கொடுப்போம்... தடுப்போம்...!

பெரியாறு அணை பலமிழந்துவிட்டதாகக் கூறி புதிய அணையைக் கட்டியே தீருவது என்று அனைத்து முயற்சிகளையும் கேரள அரசு செய்து கொண்டிருந்தாலும், தமிழகத்துக்குச் சாதகமான வாதங்கள் மேலும் மேலும் வலுப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால், இதைத் தமிழக அரசு எந்த அளவுக்குத் தீவிரமாகக் கவனத்தில்கொண்டு செயல்படப்போகிறது என்பதைப் பொருத்திருக்கிறது கேரள அரசின் புதிய அணை கட்டும் திட்டம்.
  மூன்று தினங்களுக்கு முன்பு பெரியாறு அணையைப் பார்வையிட, உச்ச நீதிமன்றம் அமைத்த ஐவர் குழு வந்திருந்தது. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான இக்குழுவில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஏ.ஆர். லட்சுமணன் தமிழகத்தின் சார்பிலும், கே.டி. தாமஸ் கேரள அரசின் சார்பிலும் உள்ளனர். மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னாள் செயலர் சி.டி தட்டே, ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் டி.கே. மேத்தா ஆகியோரும் உள்ளனர். பெரியாறு அணை விவகாரம் தொடர்பான பிரச்னை இவர்களுக்கு முழுமையாகத் தெரியும்.
  பெரியாறு அணையைப் பார்வையிட்ட பின்னர், இப்போது கேரள அரசு புதியதாக அணை கட்ட தீர்மானித்துள்ள இடத்தையும் இக்குழு பார்வையிட்டுள்ளது. அப்போது பல்வேறு கேள்விகளை இக்குழுவினர் கேரள அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். கேரள அதிகாரிகள் போதிய ஆவணங்களை அளிக்காத நிலையிலும், கேள்விகளுக்குத் திருப்தியான பதில்கள் கிடைக்காத நிலையிலும் இக்குழுவினர் தங்கள் ஆய்வை விரைவிலேயே முடித்துக் கொண்டு திரும்பினர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
  115 ஆண்டு கால அணையின் பலம் குறித்து கேரள அரசு எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. அணையைப் பலப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் திருப்திகரமாகவும் செய்துள்ளது. இதில் கேரள அரசு வேண்டுமானால் அதிருப்தி தெரிவிக்கலாமேயொழிய, தொழில்நுட்ப வல்லுநர்கள் யாருமே இந்த அணையின் பலம் குறித்தோ அல்லது அணையைப் பலப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தோ இதுவரை எந்தவிதமான எதிர்க்கருத்துகளையும்

வேலை வாய்ப்பு:மானம் கெட்டவர்களுக்கு மட்டும்

 தகுதிகள்: 
  • மானம் எனறால் எனன என்று கேட்பவரா நீங்கள்?
  • தமிழ்,தமிழன் என்று கேட்டால் நர நர என பல்லை கடிப்பவரா நீங்கள்?
  • அடி வருடியா நீங்கள்?
  • நன்கு துதி பாட தெரிந்தவரா நீங்கள்?
  • உங்கள் அப்பா பேரை கேட்டால் கூட  டெல்லியை  கேட்டு சொல்கிறேன் என்ற நாவடக்கம் உடையவரா நீங்கள்?
  • தன்மானத் தலைவரின் வழித்தோன்றலாக இருக்கலாம்..ஆனால்,தமிழ்-தமிழனுக்காக உயிர் துறக்கும் ஈகிகளை யார் என்று கேட்கும் அளவிற்கு அறிவிலியா நீங்கள்?
  • சாகும் வரை அடிமை சாசனம் எழுதி கொடுக்கத் துணிந்தவரா நீங்கள்? (வெள்ளை சொக்காய் கரை வெட்டி அணிய அனுமதி உண்டு Dont Worry Be happy)
வசதிகள்:

  • உங்களில் கோடியில் ஒருவர் "கருங்காலி" விநாயகமூர்த்தி முரளிதரன் போன்று அமைச்சராகும் வாய்ப்பு கூட அளிக்க படலாம்...(நீங்கள் 3500 வாக்கு வித்தியாசத்தில் தோற்று இருந்தால் கூட அது சிதம்பர ரகசியமாக பாதுகாக்கப்படும்-நீங்கள் கங்காரு போன்று கட்சி மாறி உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்து கொள்ளாதவரை)
  • கட்சி மாறியே பழகியவரா நீங்கள்? கவலை வேண்டாம்..உங்கள் வசதிக்காக குழுமத்தில் நிறைய கோஷ்டிகள் இருக்கிறார்கள்..இஷ்டம் போல தாவிக் கொள்ளும் வசதி வாய்ப்புகள் உள்ளன 
  • அயல்நாடு செல்லும்போது உங்களுக்கு பாத காணிக்கைகள் தன்மானத் தமிழர்களால் வெகுமதி வழங்கப்படும். விசனம் கொள்ள வேண்டாம்..ஒன்று தானே கொடுத்தார்கள் என்று..உள்நாடு வரும்போது அந்த இன்னொன்றை நாங்கள் தருகிறோம்.
  • வைப்புத் தொகையை இழந்தோ, ஊழல் செய்து அதை மக்கள் இனம் கண்டு கொண்டு வக்கற்று நிற்கும் நிலையில் இத்தாலியில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் காவல்காரனாக உயர் பதவி பெரும் வாய்ப்பு
அணுக வேண்டிய முகவரி:
ராகுல் 
Managing Partner
தமிழக இளைஞர் காங்கிரஸ் & கோ 
சாஸ்திரி பவன் 




(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை)

சனி, 25 டிசம்பர், 2010

அலை பேசியில் தமிழ் எழுத்துருக்களை படிக்க...

தமிழ் இணைய  தளங்களை உங்கள் அலை பேசியில் வாசிக்க முடியவில்லையா?
தமிழ் எழுத்துக்கள் கட்டம் கட்டமாக தெரிகின்றதா?
How to enbale Tamil Fonts in Mobile? How to read Tamil Websites in Cellphone?

உங்களது அலைபேசி  NOKIA,SAMSUNG,SONY ERICSSON,HTC,MOTOROLA அல்லது KARBONN,G FIVE,LAVA என எதுவாகவும் இருக்கலாம்..அதன் இயக்கு தளம் (OPERATING SYSTEM), Android, Symbion O S,Windows Mobile,Linux என எதுவேண்டுமானாலும் இருக்கலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது :-

  1.  உங்கள் அலைபேசியில்  Opera Mini ஐ நிறுவவும் (உங்கள் அலைபேசியில் m.opera.com OR www.opera.com/mobile/) சென்று உங்களுக்கு தேவையான ஒபேராவை பதிவிறக்கம் செய்யவும்.
  2. பின்பு தள முகவரியில் (Address bar) about:config என தட்டச்சு செய்யவும் 
  3. கீழே வாருங்கள். Use bitmap fonts for complex scripts என்று இருக்கும். அதை Yes என்று மாற்றவும். அதை Save செய்யவும்
உலாவியை  மறுதுவக்கம் (Restart) செய்யவும். இப்பொழுது தமிழ் தளங்களை நம் செம்மொழியிலேயே வாசிக்கலாம்.தமிழ் தளம் மட்டும் அல்லாது மற்ற  அனைத்து மொழி தளங்களும் அதன் அதன் எழுத்துருவிலேயே இருக்கும்.
________________________________________________________________________

mozilla Firefoxஉம் அலைபேசிக்கான உலாவியை வெளியிட்டுள்ளது. இது Maemo & Android மென்பொருளை பயன்படுத்தும் Nokia N900,HTC,Motorola &Samsungகிற்கு ஏற்ற உலாவியாகும். 
how to read tamil websites in cellphone/mobile easiest way to enable tamil fonts in mobile

வெள்ளி, 24 டிசம்பர், 2010

ஈகி முத்துக்குமார் சிலை திறப்பு-தஞ்சையில்-சனவரி 29

இலங்கையில் சிங்கள இனவெறி அரசு இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஆயுத மற்றும் நிதி உதவியுடன் தமிழீழ மக்களைக் குண்டுபோட்டுக் கூட்டங்கூட்டமாக இனப்படுகொலை புரிந்ததை எதிர்த்தும் உடனடிப் போர் நிறுத்தம் கோரியும் இன உணர்வுமிக்க இளந்தமிழன் கு. முத்துக்குமார் சென்னை சாஸ்திரி பவன் முன் கடந்த 29.01.2009 அன்று தீக்குளித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

முத்துக்குமாரின் ஈகத்தைப் போற்றும் வகையில் அவருக்குத் தஞ்சை மாவட்டம் சாணூரப்பட்டியில் கடந்த 2010 மே 16 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முத்துக்குமாரின் மார்பளவுச் சிலை திறக்க ஏற்பாடு செய்தது. ஆனால் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முத்துக்குமார் சிலை திறக்கத் தடை விதித்தனர். இத்தடையை எதிர்த்து த.தே.பொ.க. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தது.

உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு அவர்கள் அத்தடையை நீக்கி சிலையைத் திறக்க அனுமதி வழங்கி ஆணையிட்டார்.

ஈகி முத்துக்குமாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான 2011 சனவரி 29 ஆம் நாள் சனிக்கிழமை மாலை தஞ்சை மாவட்டம் சாணூரப்பட்டியில் புலவர் இரத்தினவேலவன் பதிவு செய்து கொடுத்த பட்டா நிலத்தில் முத்துக்குமாரின் மார்பளவுச் சிலை திறக்கப்படும்.

சிலை திறப்பு விழாவினைத் தமிழகம் தழுவிய பெரு நிகழ்வாக முத்துக்குமாரின் சுடரோட்டம், கலை நிகழ்ச்சிகள், தலைவர்களின் உரையரங்கம் என எழுச்சியுடன் நடத்தத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது


தகவல்:நெருடல்.கொம்

வியாழன், 23 டிசம்பர், 2010

'நாங்கள் தமிழ்ச் சாதி!' - இலங்கை அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழர்கள் புரட்சி

[ செவ்வாய்க்கிழமை, 21 டிசெம்பர் 2010, 11:41.33 AM GMT +05:30 ]

பெங்களூருவில் மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இலங்கை அமைச்சருக்கு எதிராக கறுப்புக்கொடி பிடித்து ஆக்ரோஷம் காட்டியவர்கள் மீண்டும் ஒரு புரட்சி செய்து தமிழர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள்.


கடந்த 12 ஆம் தேதி பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற 'நான்காவது சர்வதேச ஆயுர்வேத மாநாட்டில்' கலந்து கொள்வதற்காக வந்திருந்த இலங்கை கண்டி மாகாணத்தின் சுகாதாரத் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுனில் கே அமரதுங்காவுக்கு கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கறுப்பு கொடி காட்டிய 40 பேரும் பெங்களூரு போலிசாரால் கைது செய்யப்பட்டனர். இதில் ரம்யா தயாளன் என்ற ஒரு கன்னட பெண்ணும் அடக்கம்.


கைது செய்யப்பட்ட பின்பு என்ன நடந்தது என்பதை கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்று ஜாமீனில் வெளிவந்திருக்கும் பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த இல.பழனி நம்மிடம் கூறுகிறார்.

வாய் பேசமுடியாத, காது கேட்காத பிள்ளையுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் - ஒரு இளம் விதவைத் தாயின் புலம்பல்-கிளிநொச்சி


கணவனை பறிகொடுத்து, வாய்பேச முடியாத, காது கேட்காத என்னுடைய பிள்ளையுடன் நிர்க்கதியாக நிற்கிறேன்  என ஒரு இளம் விதவைத் தாய் புலம்புகிறாள். “வன்னி ஆனந்தபுரம் யுத்தத்தில் 2009ம் ஆண்டு 3ம் மாதம் 5ம் திகதி நடந்த சண்டையில் என்னுடைய கணவர் கொல்லப்பட்டார். அவருடைய சடலத்தை பார்த்தோம். வீட்டிற்கு கொண்டு வரக்கூட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது வாய்பேச முடியாத, காது கேட்காத என்னுடைய பிள்ளையுடன் நிர்க்கதியாக நிற்கிறேன். என ஒரு இளம் விதவைத் தாய் புலம்புகிறாள்.


புதன், 22 டிசம்பர், 2010

சென்னை பல்கலைக் கழகத்தில் ராகுல்காந்தியை அனுமதித்தால் வழக்கு - சீமான்


தமிழகத்தில் இளைஞர் காங்கிரசை வலுப்படுத்தும் நோக்கத்திலும் 2011ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசின் பங்கு குறித்து ஆலோசிக்கவும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி வருகிற 22ஆம் தேதி சென்னைக்கு வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ராகுல் காந்தி பங்குகொள்ளும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"ராகுல்காந்தி பங்கேற்கும் சென்னை அரசியல் நிகழ்ச்சியானது பாரம்பரிய மிக்க சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற உள்ளதை நாம் தமிழர் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.சென்னை பல்கலைக்கழக் கழகம்  பாரம்பரியமிக்க கல்லூரி நிறுவனம் ஆகும்.

அரசியல் தலைவரான ராகுல்காந்தி  நிகழ்ச்சி நடைபெற்றால் நிகழ்ச்சி தொடர்பாகவும் அதற்கான ஏற்பாடுகள் காரணமாகவும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வர். இதனால் காவல்துறையின் பலத்த கெடுபிடியும் பல்கலைக் கழகத்தில் இருக்கும். இதனால் அங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு அமைதியான கல்வி கற்கும் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இதை அனுமதிக்க முடியாது.

மேலும் இதுவரை அவ்வரங்கில் எவ்வித அரசியல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றதில்லை. முதல்முறையாக ராகுல் காந்தியின் கூட்டத்திற்கு அனுமதி அளித்தால் தவறான முன்னுதாரணமாகி விடும். காவல்துறை ராகுல்காந்தியின் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிப்பது அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

இதைமீறி ராகுல் காந்தியின் அரசியல் நிகழ்ச்சி நடைபெற சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கத்தை பல்கலைக்கழக  நிர்வாகம் அனுமதித்தால் நாம் தமிழர் கட்சியின் அரசியல் கலந்துரையாடல் நிகழ்விற்கு வரும் 30ஆம் தேதி அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.ராகுல் காந்திக்கு அனுமதியளித்து விட்டு எங்களுக்கு அனுமதியை நிர்வாகம் மறுத்தால் நீதிமன்றம் 
(தகவல்: http://www.inneram.com)

வெள்ளி, 17 டிசம்பர், 2010

பெட்ரோல் விலை உயர்வு- பதிலடி கொடுப்போம் ஒன்றிணைந்து...















இந்தியன் ஆயில் கார்பரேசன்
2010 அரையாண்டு லாபம் ரூ.5293 கோடி. (கடந்த வருட அரையாண்டு ரூ.166 கோடி இழப்பு)

CONTRIBUTION TO EXCHEQUER
IOC makes enormous contribution to the Exchequer in the form of duties and taxes. During the year, Rs.57,680 crore was paid to the Exchequer as against Rs.57,529 crore in the previous year. Out of this, Rs.26,541 crore was made to the Central Exchequer and Rs.31,139 crore to the States Exchequer.


(Rs. in Crore)

2009-10
2008-09
Turnover (inclusive of Excise duty)
2,59,360
2,71,412
Profit Before Tax
15,049
3,649
Profit for the Group (after tax)
10,713
2,599




ONGC profit soars 71% on higher crude prices


State-owned oil producer ONGC on Friday reported a 71% jump in net profit for the last quarter of 2009-10 that ended in March 31, 2010, to Rs 3,776 crore, mainly on account of higher crude oil price.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்
2010 அரையாண்டு லாபம் ரூ.2380 கோடி. (கடந்த வருடம் ரூ.39 கோடி)


கச்சா எண்ணெய் விலை
(per barrel)
(per litre)
ஜூலை 2008
இன்று
(Dec-2010)
ஜூலை 2008
இன்று
(Dec-2010)
$147
$ 82
ரூ.55
ரூ.59.92

மலேசியா 20.99
CRUDE OIL PRICE 5YEAR CHART
பாகிஸ்தான் 31.43
கனடா 39.03
ஜனநாயக இந்தியாவில் ரூ.60/-

கச்சா எண்ணெய் விலை இறக்கம்..எண்ணெய் விற்பனை குழுமங்கள் லாபம் பன்மடங்கு உயர்வு... அவர்கள் தொழிலார்கள் மாத ஊதியம் 50000 முதல் பல லட்சங்களில்... அன்றாட பொருள்கள்,காய்கறி விலை விண்ணை முட்டும் அளவு...பணவீக்கம் உயர்வு..
இப்படி அனைத்தும் பாதகமாக இருக்க இப்பொழுது இந்த விலை உயர்வுக்கு அவசியம் எனன? மக்களின் கவனத்தை பல்லாயிரம் கோடி ஊழலில் இருந்து திசை திருப்பவா?
சர்வாதிகார தோரணையுடன் திடீர் என்று 6% உயர்வு.2010 இல் மட்டும் மொத்தமாக ரூ.12/-விலை ஏற்றி உள்ளார்கள். இதை தட்டி கேட்டு கம்யூனிஸ்ட் தோழர்கள் மட்டுமே வீதியில் இறங்கி போராட்டம் செய்கிறார்கள்.நாம் தமிழர் இயக்கம் குரல் கொடுக்கின்றது. முன்பெல்லாம் மூன்று ருபாய் ஏற்றுவார்கள்..மக்களின் எதிர்ப்புக்கு குரல் கொடுப்பது போல் ஐம்பது பைசா குறைப்பார்கள். ஆனால் இப்பொழுது அது போன்று பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை.இது எனன மக்களாட்சியா? மக்களை சுரண்டும் ஆட்சியா?
OIL MARKETING COMPANIES-IOC,BPCL,HPCL என அனைத்தும் கொள்ளை லாபம் ஈட்டி உள்ளது கடந்த அரையாண்டில். ஆனால் எண்ணெய் குழுமங்கள் இன்னும் நட்டத்தில் இயங்குகின்றன என்று முரளி தியோரா மட்டும் அதே பழைய பல்லவியை திரும்ப திரும்ப பாடுகிறார். அப்படி என்றால் இந்த குழுமங்களின் தணிக்கை செய்யப்பட்ட இருப்பு நிலை குறிப்பு(BALANCE SHEET) பொய்யா? இல்லை,இவர் "சத்யம்" ராமலிங்கம் ராஜுவின் தணிக்கை அதிகாரிகளை வைத்து தணிக்கை செய்து அறிக்கை விடுகிறாரா?

கச்சா எண்ணெய் விலை $147 இருந்த போது இங்கு பெட்ரோல் விலை ரூ.55. இப்பொழுது $88 க்கு குறைந்த பொழுதும் இவர்கள் பெட்ரோல் விலைகளை குறைக்காமல் ரூ.60 க்கு ஏற்றி உள்ளார்கள். ஏற்கனவே அத்தியாவசிய பொருள்கள் எல்லாம் ஆகாயத்தில் பறந்து கொண்டு உள்ளது. அத்தியாவசிய பொருள்களின் மீதான முன்பேர வர்த்தகத்தை (COMMODITY DERIVATIVE) தடை செய்யுங்கள் என்று பொதுவுடமை கட்சிகள் வலியுறுத்துகின்ற போதும் இவர்கள் சிலரின் கொள்ளை லாபத்துக்காக அன்றாடங்காய்ச்சிகளின் வயிற்றில் அடித்து தங்கள் புதிய பொருளாதார (மக்கள் விரோத,முதலாளித்துவ) கொள்கைகளில் பிடிவாதமாக இருக்கிறார்கள்."சிறப்பு பொருளாதார மண்டலம்" (SEZ) அமைக்கின்றோம் என்ற பெயரில் மக்களின் வாழ்வாதார விளை நிலங்களை அபகரித்து அந்நிய நிறுவனக்களுக்கு தாரை வார்கிறார்கள். இங்கு அமையும் குழுமங்களுக்கு 10 வருடங்களுக்கு வரிச் சலுகை வேறு. என்ன நடக்கிறது இந்தியாவில்? என்று எங்கள் துயர் தீரும்? இவர்கள் தான் இப்படி என்று மாற்று கட்சிக்கு வாக்கு அளித்தால் அவர்கள்,அவர்கள் பாணியில் கொள்ளை அடிப்பதும், தங்களுக்கு தெரிந்த ஒரே மொழி இந்தியை, அவர்களுக்கு ஆங்கிலம் சுட்டு போட்டாலும் வராது என்பதற்காக மற்றவர்களின் மீது திணிப்பதும் அதற்கு கோடி கோடியாக செலவழிப்பதும் என்று ஆட்சி செய்கிறார்கள்...

மக்கள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழந்தால் அது அடிமை படுத்தும் ஆளும் வர்க்கத்துக்கும் தொல்லை..மக்களுக்கும் நல்லது இல்லை. என்று புரிந்து கொள்வார்கள் நம்மை ஆள்பவர்கள்?

-சத்தம் இல்லாமல் குமுறும் உங்களில் ஒருவன்-
எரிமலை

(PETROL PRICE HIKE IN 2010 Rs.11.86-Seeman)(PETROL PRICE INCREASED 2010-A REVIEW)